மேலும் அறிய

தருமபுரிக்கு 58-வது பிறந்த நாள்: நீர்பாசன திட்டங்களை உருவாக்க வேண்டும் என கோரிக்கை வைத்த மக்கள்..

காமராஜரால்  தனி மாவட்டமாக உதயமாகிய தருமபுரிக்கு 58-வது பிறந்த நாள் : மாவட்டத்தில் வேலைவாய்ப்பு, நீர்பாசன திட்டங்களை உருவாக்க வேண்டும் என கோரிக்கை. 

காமராஜரால்  தனி மாவட்டமாக உதயமாகிய தருமபுரிக்கு 58-வது பிறந்த நாள்: மாவட்டத்தில் வேலைவாய்ப்பு, நீர்பாசன திட்டங்களை உருவாக்க வேண்டும் என கோரிக்கை. 
 
தெற்கில் ஈரோட்டையும், வடக்கில் கர்நாடகத்தையும் தனக்கு எல்லைகளாக கொண்டு பரந்து விரிந்து கிடந்தது சேலம் ஜில்லா. சேலம், நாமக்கல், தருமபுரி,  கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளை கொண்டு மிக பெரிய மாவட்டமாக தமிழகத்தில் இருந்தது சேலம் ஜில்லா. இந்த பகுதிகளில் உள்ள மக்கள் மாவட்ட அலுவலரை சந்திக்க வேண்டும் என்றால், அவ்வளவு எளிதான காரியமல்ல. தருமபுரிக்கு 1965-ல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அந்த இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான காங்கிரஸின் சார்பில் தருமபுரி வடிவேல் கவுண்டரை வேட்பாளாராக அறிவித்து, கர்ம வீரர் காமராஜர் பரப்புரை மேற்கொண்டார். அப்பொழுது தருமபுரி நகரில் பேசும்போது, காமராஜர் காங்கிரைஸை வெற்றி பெற செய்தால், சேலம் மாவட்டத்தை பிரித்து தருமபுரி என தனி மாவட்டமாக உருவாக்கி இந்த பகுதி மக்களின் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்ய வாய்ப்பு ஏற்படுத்தப்படும் என வாக்குறுதியளித்தார். தொடர்ந்து தருமபுரியை தனி மாவட்டமாக அறிவித்து, 02.10.1965 தேதி, முதல்வர் பக்தவத்சலம் தருமபுரிக்கு நேரில் வந்து  புதிய மாவட்டத்தை தொடங்கி வைத்து, கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

தருமபுரிக்கு 58-வது பிறந்த நாள்: நீர்பாசன திட்டங்களை உருவாக்க வேண்டும் என கோரிக்கை வைத்த மக்கள்..
அப்பொழுது தருமபுரி, கிருஷ்ணகிரி,  ஓசூர், அரூர் உள்ளிட்ட பகுதிகளை கொண்டு தருமபுரி தனி மாவட்டமாக உதயமானது. தொடர்ந்து மாவட்ட அலுவலர்களை நிர்வாக வசதிக்காக, நிதி தருமபுரிக்கும், நீதி கிருஷ்ணகிரிக்கும் என மாவட்ட அலுவலகங்கள் பிரிக்கப்பட்டது. தருமபுரி மாவட்டத்திற்கான தொழிற்பேட்டைகள் ஓசூரில் அமைக்கப்பட்டது. பின்னாளில் கிருஷ்ணகிரி தனி மாவட்டமாக உதயமானது. வருவாய் உள்ள ஓசூர் கிருஷ்ணகிரி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. தருமபுரி  மாவட்டத்தில்  அரூர், பாலக்கோடு, பென்னாகரம், காரிமங்கலம், பாப்பிரெட்டிபட்டி, நல்லம்பள்ளி என 5 தாலுக்காவும், 8 ஒன்றியங்களும், 10 பேரூராட்சிகள், ஒரு நகராட்சி கொண்டு செயல்பட்டது. இங்கு வரலாற்று புராதன சின்னஙகளாக அதியமான்கோட்டை கால பைரவர், சென்றார் பெருமாள் திருக்கோவில், தென்கரைகோட்டையில் உள்ள கல்யாணராமர் திருக்கோயில்களும் உள்ளன. சுற்றுலாத் தளமாக காவிரி ஆற்றில் உள்ள ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி, புகழ் பெற்ற சிவன்கோவிலான தீர்த்தமலை தீர்த்தகிரி ஈஸ்வரர் திருக்கோவில் உள்ளது.
 
தருமபுரி மாவட்டம் விவசாயத்தை பிரதானமாக கொண்டது. இங்கு சின்னாறு, வாணியாறு, நாகாவதி, கேசர்குலா, வள்ளிமதுரை அணைகளும், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கே.ஈச்சம்பாடி அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர பல்வேறு ஆறுகள், ஏரிகள் மூலம் நீர்பாசன வசதிபெற்று விவசாயம் பிரதானமாக செய்யப்பட்டு வருகிறது. ஆனால் நிர்வாக காரணங்களுக்காக பொதுமக்களின் நலன் கருதி தருமபுரி தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டதன் நோக்கம், நிறைவேறியதா? என்றால் அதுமட்டும் இல்லை. தருமபுரி மாவட்டத்தை தொழில் வளர்ச்சியில் முன்னேற்ற  தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த பலரும் முயற்சிகளை மேற்கொண்டனர்.  அரசும் உதவிக்கரம் நீட்டியதையடுத்து பெங்களூருவுக்கு மிக அருகில் இருந்த, மேலும் ஏறக்குறைய அதே தட்பவெப்பநிலையில் இருந்த ஓசூரில்  பல்வேறு முக்கிய நிறுவனங்கள் தொழில் தொடங்க முன்வந்தது.  அவர்களுக்கு தேவையான வசதிகளுடன் மானிய விலையில் நிலங்கள் சிப்காட் நிறுவனத்தின் மூலம் அரசு வழங்கியது.  இதையடுத்து  தொழில் வளர்ச்சியில் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த ஓசூர் முக்கிய வளர்ச்சியடைய ஆரம்பித்தது.  
 
தருமபுரி மாவட்டம் தொழில் வளர்ச்சியில்  வீறுநடை போட்டு வருகிறது என்ற பெருமையில் இருந்த இம்மாவட்ட மக்களுக்கு அந்த மகிழ்ச்சி 2004ம் ஆண்டு வரை மட்டுமே நீடித்தது.   ஓசூர் வருவாய் கோட்டத்தை சேர்நத ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, தளி ஆகிய பகுதிகளை  சேர்ந்த மக்கள் மாவட்ட தலைநகரான தருமபுரிக்கும் நீண்ட பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.  இதே போன்று  வேப்பனப்பள்ளி, பரூகூர், ஊத்தங்கரை உள்ளிட்ட பகுதி மக்களும் இதே குரலை எழுப்பினர்.  அரசும் இதை தீவிரமாக பரிசிலித்து மாவட்டத்தை இரண்டாக பிரிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டது.  அப்போது பிரிக்கக்கூடாது என்றும், அப்படி பிரித்தால் ஓசூரை தருமபுரியோடு இணைக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்தது.  ஆனால் அந்த குரல்களில் நியாயமில்லை என கருதி அரசு தென்பெண்ணை ஆற்றை முக்கிய எல்லையாக வைத்து வடப்பகுதியை கிருஷ்ணகிரி மாவட்டமாக அறிவித்தது.
 
 ஓசூர், தேன்கனிக்கோட்டை, தளி, சூளகிரி, வேப்பனப்பள்ளி, பருகூர், மத்தூர், ஊத்தங்கரை, காவேரிப்பட்டணம் உள்ளிட்ட பகுதிகள் கிருஷ்ணகிரியை தலையிடமாக கொண்ட மாவட்டமாக பிரிக்கப்பட்டது.  இதற்கு எதிர்ப்புகள் இருந்தாலும், வரவேற்பு ஆரவாரம் ஆர்பறித்தது.  எந்த வித தொழில் வளர்ச்சியும் அடையாத பென்னாகரம், நல்லம்பள்ளி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர், பாலக்கோடு, காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கியது  தருமபுரி மாவட்டமாக செயல்பட்டு வருகிறது. சேலத்திலிருந்து பிரிந்து  58 ஆண்டுகளை கடந்தும், கிருஷ்ணகிரியை பறிகொடுத்து 17 ஆண்டுகளாகியும் குறிப்பிடதகுந்த எந்த வித தொழில் வளரச்சியும் அடையாத மாவட்டமாகவே தருமபுரி மாவட்டம் இருந்து வருகிறது.  விவசாயம் மற்றும் அதைத் சார்ந்த தொழில்கள் மட்டுமே இங்கு பிரதான தொழிலாக உள்ளது. ஆனால் ஆண்டிற்கு  இரண்டு, மூன்று முறை வெள்ளம் கரைபுரண்டு ஓடும்  காவிரி, தென்பெண்ணை ஆறு மாவட்டத்தை சுற்றி ஓடினாலும்,  போதிய நீர்ப்பாசன திட்டங்கள் இல்லாததால், விவசாயம் செய்யமுடியாமல் விவசாயிகள் வெளியூர் கூலி வேலைக்கு செல்கின்றனர்.
 
அதேபோல் மருத்துவ கல்லூரி, பொறியியல் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி என தொடங்கி, கல்வியில் மாவட்டம் முன்னேறி சென்றாலும் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாததால், வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு கூலி வேலைக்கு செல்கின்றனர் பட்டதாரி இளைஞர்கள். தருமபுரியில் வேலை வாய்ப்பை தரும் கம்பெனிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.  சிப்காட் வந்தால் வேறு மாநிலங்களுக்கும், மாவட்டங்களுக்கும் குடிபெயர்தல்  கட்டுப்படுத்தப்படும் என்று சொன்னார்கள். ஆனால் சிப்காட் திட்டம்  வெறும் அறிவிப்பாக மட்டுமே உள்ளது. 56 ஆண்டுகளை கடந்தும், தருமபுரி மாவட்டம் வளர்ச்சி பெறாமல் இருப்பது வேதனைதான்.
 
இந்த மாவட்டத்திற்கு காவேரி உபரிநீரை ஏரிகளில் நிரப்புவது, தென்பெண்ணை ஆற்றின் கால்வாய்களை நீட்டிப்பு செய்து தண்ணீர் வழங்கும் திட்டங்கள் அறிவிப்போடு நிற்கிறது. இது முழுமையாக நிறைவேற்றப்பட்டால், தஞ்சை போன்றே தருமபுரி செழிப்படையும். மேலும் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்ட சிப்காட், 2 சிட்கோ, மத்தியஅரசு அறிவித்த இராணுவ தளவாட மையம் நடைமுறைக்கு வந்தால், வேலை வாய்ப்பு பெருகும்,  வேலை தேடி இடம்பெயர்தலை முற்றிலும் தடைக்க முடியும் என மாவட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு -  49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Breaking News LIVE: நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Iranian President Raisi: ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? என்ன ஆச்சு அவருக்கு? அமெரிக்கா அவசர ஆலோசனை..
ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? அமெரிக்கா அவசர ஆலோசனை..
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு -  49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Breaking News LIVE: நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Iranian President Raisi: ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? என்ன ஆச்சு அவருக்கு? அமெரிக்கா அவசர ஆலோசனை..
ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? அமெரிக்கா அவசர ஆலோசனை..
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Embed widget