மேலும் அறிய
Advertisement
வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் - 300 பழங்குடியின குடும்பத்தினர் தருமபுரி ஆட்சியர் அலவலகத்தில் மனு
300 குடும்பத்தினர் வசிக்கும் இடத்திற்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என 100-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலவலகத்தில் மனு.
பாலக்கோடு அடுத்த சக்கிலிநத்தம் கிராமத்தில் உள்ள மலைவாழ் பழங்குடியின மக்கள் உள்ளிட்ட 300 குடும்பத்தினர் வசிக்கும் இடத்திற்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என 100-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலவலகத்தில் மனு அளித்தனர்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த சக்கிலிநத்தம் கிராமத்தில் மலைவாழ் பழங்குடியின மக்கள் உள்ளிட்ட பல்வேறு சமுதாயத்தைச் சார்ந்த 350-க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் மூன்று தலைமுறைகளாக மக்கள் வசித்து வருகின்றனர். ஆனால் இங்குள்ள மக்களுக்கு இதுவரை அரசு வழங்குகின்ற எந்த சலுகைகளும் எட்டப்படுவதில்லை. மேலும் மூன்று தலைமுறையாக அரசுக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டி வசித்து வருகின்றனர். அதேபோல் அரசுக்கு சொந்தமான நிலங்களும் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த கிராம மக்களின் கட்டுப்பாட்டில் உள்ள வீட்டு மனைகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. இதனால் அரசின் மூலம் வழங்கப்படுகின்ற சலுகைகளைப் பெற சிட்டா, அடங்கள் தர வேண்டும் என்பதால், பட்டா இல்லாத இடங்களுக்கு வருவாய் துறை சார்பில் சான்றிதழ் வழங்கப்படுவதில்லை. இதனால் கிராம மக்கள் தர முடியாத நிலை இருந்து வருகிறது.
மேலும் சக்கிலிநத்தம் கிராமத்தில் உள்ள மலைவாழ் மக்கள் உள்ளிட்டோர் தங்கள் வாழ்கின்ற இடத்திற்கு தனி தனியாக பட்டா வழங்க வேண்டும். விவசாய நில ங்களை அவர் அவருக்கு சொந்தமான இடங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என பலமுறை மனு கொடுத்துள்ளனர். இதுவரை இந்த கிராம மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இதனால் மலைவாழ் மக்கள் உள்ளிட்ட பல்வேறு சமுதாய மக்களின் வாழ்க்கை நிலையை கருத்தில் கொண்டு தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் வீட்டுமனை பட்டா மற்றும் விவசாய நிலங்களுக்கான பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி தனித்தனியாக நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மேலும் கடந்த காலங்களில் பல்வேறு அரசு அதிகாரிகள், அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள் வரை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அரசு வழங்குகின்ற எந்த சலுகைகளையாக இருந்தாலும், சிட்டா, அடங்கள் கேட்பதால் பெற முடிவதில்லை. மேலும் இதனால் பகுதியில் மலைவாழ் மக்களுக்கு சாதி சான்றிதழ் கூட வழங்கப்பட வில்லை. இதனால் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதனால் நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மீது நம்பிக்கை வைத்து, தற்போது மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளோம். எனவே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
அரசியல்
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion