கொந்தளிக்கும் மக்கள்! திணறும் இலங்கை! பதவி விலகும் கோத்தபய ராஜபக்சே!? அவசர கூட்டத்தின் முடிவு என்ன?
இன்று நடைபெறும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு மதிப்பளிப்பதாக அதிபர் கோட்டாபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெறும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு மதிப்பளிப்பதாக அதிபர் கோட்டாபய ராஜபக்சே தெரிவித்துள்ளார். அதிபரின் முடிவு குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு தெரிவிக்கப்பட்டிருப்பதாக பிரதமர் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.
Current situation: Update from PM's office https://t.co/bhqMfTxwuJ
— NewsWire 🇱🇰 (@NewsWireLK) July 9, 2022
இச்சூழலில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பல கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இன்று நடைபெறும் ஆளும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார். மேலும், இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று மாலை 04.00 மணிக்கு, கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். இன்று பிற்பகல், நாட்டில் நிலவி வரும் நிலைமை குறித்து விவாதிப்பதற்காக அவசர கூட்டத்திற்கும் பிரதமர் அழைப்பு விடுத்தார்.
அதிபரின் செயலகம் மற்றும் அதிபரின் அதிகாரப்பூர்வ மாளிகையை இன்று முற்றுகையிட்ட பொது மக்கள் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் குதித்துள்ளனர். இதையடுத்து, சிறப்பு கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, உளவுத்துறையிலிருந்து தகவல்கள் கிடைத்ததையடுத்து இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, அதிபர் மாளிகையிலிருந்து ராணுவ தலைமையகத்திற்கு நேற்றிரவு தப்பி சென்றதாக செய்தி வெளியாகியுள்ளது. சனிக்கிழமை போராட்டத்தை சட்ட விரோதமாக அறிவிக்க கோரிய காவல்துறையின் கோரிக்கையை நீதிபதிகள் மறுத்துள்ளனர்.
இதற்கு மத்தியில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள், கோத்தபய அதிபர் பதவியிலிருந்து உடனடியாக விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளர். இச்சூழலில், அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகயா மறுத்துள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி உலக நாடுகளையே ஆட்டம் காண செய்துள்ளது. அங்கு பெட்ரோல், டீசல், உணவு பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதோடு அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் எதிரொலியால் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்ததோடு மட்டுமல்லாமல் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கேவும் பதவியேற்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்