மேலும் அறிய

Idream Murthy: ராயபுரத்தில் மீண்டும் ஐட்ரீம் மூர்த்தி.? அதிமுகவினரையே திரும்பி பார்க்க வைத்த அசத்தல் திட்டங்கள்

Idream Murthy: தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஒவ்வொரு தொகுதியிலும் எம்எல்ஏக்கள் சாதித்தது என்ன என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அந்த வகையில் ராயபுரம் தொகுதியில் ஏராளமான திட்டங்களை ஐட்ரீம் மூர்த்தி நிறைவேற்றியுள்ளதாக பட்டியலிட்டுள்ளார்.

நெருங்கும் தமிழக தேர்தல்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சுமார் 120 நாட்களுக்கும் குறைவான நாட்களே இருப்பதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்கள் தேர்வை அரசியல் கட்சியும் தொடங்கியுள்ளது. ஏற்கனவே வெற்றிபெற்ற வேட்பாளர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கலாமா.? அல்லது புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கலாமா என ரகசிய ஆய்வை நடத்தி வருகிறது. மேலும் மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ள எம்எல்ஏக்கள், தொகுதிகளில் மக்களுக்கான என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தியுள்ளனர் எனவும் விசாரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் முக்கிய தொகுதியாக இருப்பது ராயபுரம், 

திமுக கோட்டையாக மாற்றிய ஐட்ரீம் மூர்த்தி

அதிமுகவின் கோட்டையாக பல ஆண்டுகளாக இருந்த இந்த தொகுதியை கடந்த 2021ஆம் ஆண்டு அமைச்சராக இருந்த ஜெயக்குமாரிடம் இருந்து தட்டிப்பறித்துள்ளார் ஐட்ரீம் மூர்த்தி, அதனை தொடர்ந்து தக்கவைக்கும் வகையில் பல திட்டங்களை கடந்த 4 ஆண்டுகளில் ராயபுரத்தில் செயல்படுத்தி அசத்தியுள்ளார் ஐட்ரீம் மூர்த்தி. எனவே 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ராயபுரம் தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட பலரும் விரும்பி வரும் நிலையில், ஐட்ரீம் மூர்த்தியே மீண்டும் ராயபுரம் தொகுதி வேட்பாளர் தேர்வில் முதல் இடத்தில் உள்ளார். 

ராயபுரம் தொகுதியில் செய்த திட்டங்கள் என்ன.?

இந்த நிலையில் ராயபுரம் தொகுதியில் கடந்த 4 ஆண்டுகளில் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை ஐட்ரீம் மூர்த்தி பட்டியலிட்டுள்ளார். கடந்த ஆண்டுகளில் கிடப்பில் போடப்பட்ட பல திட்டங்களை அறிவித்ததும் மட்டுமில்லாமல் செயல்படுத்தப்பட்டுள்ளதாக காலரை தூக்கிவிடுகிறார். 

1. இராயபுரம் தங்கசாலை தொழில்நுட்ப பயிற்சி மையத்திற்கு 53வது வார்டில் ரூ.41.73 கோடி மதிப்பீட்டில் ரூ.38 கோடியில் புதிய கட்டிடம் மற்றும் உபகரணங்களும். மேலும் 3 கோடியே, 75 லட்சத்தில் புனரமைப்பு பணிகள் 100% நிறைவடைந்து. மாணவர்களுக்கு பயிற்சி
நடைபெற்று வருகிறது. மாணவர்கள் சேர்க்கை வருடத்திற்கு 180 என்ற நிலையை மாற்றப்பட்டு  தற்போது 500 பேர் வருடத்திற்கு சேர்க்கை நடைபெறுகிறது.

2. ஆதிதிராவிட மாணவிகள் மற்றும் வேலை செய்யும் புதிய பெண்களுக்கு மகளிர் தங்கும் விடுதி கட்டடம் கட்டப்பட்டு அனைத்து வேலைகளும் முடிந்து முதல்வரின் காணொலி மூலம் திறந்து வைக்கப்பட்டு 480 பயனாளிகள் பயன் பெற்று வருகின்றனர்.

3. சென்னை மாநகராட்சி பள்ளி 100% பணிகள் நிறைவடைந்து, தரம் உயர்த்தப்பட்ட புதிய நவீனப் பள்ளிக்கூடத்தில், LKG முதல் 10ஆம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைப்பெற்று வருகிறது.

4.நான் முதல்வன் திட்டத்தின் கீழ ITIயில் IAS, IPS, Banking Exam, TNPSC, Group 1 to 4 தேர்வுக்கு மூன்று மாதத்திற்கு ஒரு முறை 90 மாணவ மாணவியர்கள் தேர்வுச் செய்யப்பட்டு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

5. ரூ.30 கோடி மதிப்பீட்டில் இராயபுரம் தொகுதிக்கு உட்பட்ட RSRM மருத்துவமனையில் புதிதாக 300 படுக்கைகள் வசதி கொண்ட நான்கு மாடி கட்டங்கள் (இரண்டு) கட்டும் பணிகள் 98% நிறைவடைந்து.

6. ரூ.5.கோடியே, 90 லட்சம் மதிப்பீட்டில் இராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அப்பாசாமி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பணிகள் நிறைவடைந்து முதல்வர் அவர்களின் திருக்கரங்களால் திறக்கப்பட்டது. 

7. ரூ.5 கோடி மதிப்பீட்டில் ஏழை எளியோருக்காக சமுதாய நலக்கூடம் கட்டுவதற்கான பணிகள் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.5 கோடி நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 

8.ரூ.6 கோடி மதிப்பீட்டில் மாண்புமிகு முதல்வர் அவர்களால் தங்க சாலையில் பூங்கா திறக்கப்பட்டுள்ளது.

9. இராயபுரம் தொகுதியில் 50 வருடங்களாக வாழ்ந்து வரும் பொது மக்கள் முறையான பட்டா இல்லாமல் வாழ்ந்து வரும் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாசியர் அவர்களிடம் இவர்களிடம் உள்ள முறையான சான்றிதழ்களை கொடுத்து 2500 முதல் 3000 பேருக்கு முறையான பட்டா வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
10.ரூபாய்.24 கோடி மதிப்பீட்டில் இராயபுரம் சட்டமன்ற தொகுதியில் கடந்த பத்தாண்டுகளில் பெருகி உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப தற்போது கழிவுநீர் உந்து குழாய்கள் அமைக்கும் பணிகள் நடைப்பெற்று வருகிறது. இது மட்டுமில்லாமல் இது போல ஏராளமான பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஐட்ரீம் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

 

தலைப்பு செய்திகள்

SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
தவெகவுடன் கூட்டணி.. திமுகவுடன் பேச்சுவார்த்தை - எடப்பாடி மீது வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் பாய்ச்சல்
தவெகவுடன் கூட்டணி.. திமுகவுடன் பேச்சுவார்த்தை - எடப்பாடி மீது வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் பாய்ச்சல்
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget