மேலும் அறிய

வரலாறு தெரிந்து ஓபிஎஸ் அறிக்கை வெளியிட வேண்டும் - மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி

’’ஓபிஎஸ் வெளியிட்ட இரண்டு அறிக்கையும் முன்னுக்குப்பின் முரணாக உள்ளது. கடந்த காலத்தில் நடந்தது என்ன என்று வரலாறு தெரிந்து ஓபிஎஸ் அறிக்கை வெளியிட வேண்டும்’’

"இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின்‌ பயன்‌ அளவீடு செய்யப்படுவதால்‌ அதிகமாக மின்‌ கட்டணம்‌ வசூலிப்பதைத்‌ தவிர்க்கும்‌ வகையில்‌ மாதம்‌ ஒரு முறை மின்‌ உபயோகம்‌ கணக்கிடும்‌ முறை கொண்டு வரப்படும்‌. இதனால்‌ இரண்டு மாதங்களுக்கு ஆயிரம்‌ யூனிட்டுகளுக்கு குறைவாக மின்சாரம்‌ பயன்படுத்துவோர்‌ ஆண்டுக்கு 6,000 ரூபாய்‌ வரையில்‌ பயன்‌ பெறுவர்‌ என்று தி.மு.க. தேர்தல்‌ அறிக்கையில்‌ வாக்குறுதி தரப்பட்டது. இந்த வாக்குறுதியை நம்பி வாக்களித்தவர்களை வஞ்சிப்பது போல்‌ மதுவிலக்கு மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் பேச்சு அமைந்துள்ளது என முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை விடுத்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக கரூரில் செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, விவசாயிகள் நலனில் தனி அக்கறை கொண்டுள்ளது தமிழக அரசு. 20 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருந்து 4.50 லட்சம் மின் இணைப்புகளுக்கு மின்சாரம் வழங்கும் பொருட்டு முதல் ஆண்டிலேயே ஒரு லட்சம் இணைப்புகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மின் துறையில் இதர பணிகளுக்கு ஜிஎஸ்டி வரி வசூல் என்பது கடந்த ஆட்சியிலேயே  2018ஆம் ஆண்டில் இருந்தே கொண்டு வரப்பட்டது. புதிதாக ஜிஎஸ்டி வசூலிக்கப்படுவதை போல எதிர்கட்சி துணை தலைவர் ஓபிஎஸ் கூறி வருகிறார்.  

மின் கட்டணத்தில் ஜிஎஸ்டி இல்லை என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. கடந்த ஆட்சியில் மின் உற்பத்தி என்பது 53 சதம் மட்டுமே. 2017 ஆம் ஆண்டிலேயே விவசாயிகளுக்கு மீட்டர் பொருத்துவது தொடங்கப்பட்டது. இப்போது தான் மீட்டர் பொருத்தப்படுவது போல அறிக்கையை ஓபிஎஸ் வெளியிட்டுள்ளார்.விவசாயிகளுக்கான மின் இணைப்புகளில் மீட்டர் பொருத்துவது அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது. இப்போதும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. விவசாயிகளுக்கான மின் இணைப்புகளில் மீட்டர் பொருத்தப்பட்டாலும்,  தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கி அதற்கான மானியத்தை  தமிழக அரசு வழங்கி வருகிறது.

வரலாறு தெரிந்து ஓபிஎஸ் அறிக்கை வெளியிட வேண்டும் - மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி

ஓபிஎஸ்  வெளியிட்ட இரண்டு அறிக்கையும் முன்னுக்குப்பின் முரணாக உள்ளது. கடந்த காலத்தில் நடந்தது என்ன என்று வரலாறு தெரிந்து ஓபிஎஸ் அறிக்கை வெளியிட வேண்டும். தமிழகத்தில் 17 சதவிகிதம் மின்சாரத்தை எடுத்துச் செல்லும் போது இழப்பு ஏற்படுகிறது.  மின்மாற்றிகளில் டி.பி மீட்டர் பொருத்தப்பட்ட பிறகு வீடுகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் அதற்கான அறிவிப்பு இந்த கூட்டத் தொடரில் வரவுள்ளது. மின் வாரியத்தில் மூன்றில் ஒரு பங்கு பணியிடங்கள் காலியாக உள்ளது.  மாதாந்திர கணக்கெடுக்க இரண்டு பங்கு ஊழியர்கள் தேவை. விரைவில் மாதாந்திர கணக்கெடுப்பு செய்ய முதல்வர் நடவடிக்கை எடுப்பார். சென்னை மாநகராட்சியில் பூமிக்கடியில் மின்பாதை அதிகரிக்கப்பட்ட பிறகு மற்ற மாநகராட்சிக்கு முதல்வர் அனுமதியோடு விரிவுபடுத்தப்படும்.

கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும்

விவசாய நிலங்களுக்கு மேல் உயர் மின் கோபுரங்கள் அமைப்பது தொடர்பாக விவசாயிகள் போராடி வருவது குறித்த கேள்விக்கு, உயர் மின்கோபுரம் அமைப்பதால்,  இழப்பீடு பெறாத விவசாயிகள் பட்டியல் அளித்தால், ஒரு மாத காலத்துக்குள் இழப்பீடு வழங்க மின் வாரியம் நடவடிக்கை எடுக்கும்.  ஏற்கனவே ஒப்புக்கொண்டு கையொப்பமிட்ட விவசாயிகள் இரட்டிப்பு இழப்பீடுக்காக கேட்பது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தேவையான மின் உற்பத்திக்காக அந்தந்த மாவட்டத்திலே சூர்ய மின் உற்பத்தி பூங்கா அமைக்கப்படும் என்றார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Minister Anbil Mahesh: ரூ.2.152 கோடி என்ன உங்கள் வீட்டுப் பணமா?- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
Minister Anbil Mahesh: ரூ.2.152 கோடி என்ன உங்கள் வீட்டுப் பணமா?- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவா? சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவா? சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்!
முஸ்லீம்கள் ஓட்டு கிடைக்குமா? தவெக விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. திமுக கோட்டையில் ஓட்டை!
முஸ்லீம்கள் ஓட்டு கிடைக்குமா? தவெக விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. திமுக கோட்டையில் ஓட்டை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chengalpattu News | ”நீதான கட்டிங் கேட்ட”நடுரோட்டில் நடந்த சண்டை ஊராட்சி அலுவலகத்தில் பரபரப்புLoan Agent Harassment | ’’ரோட்டுல தள்ளி அடிச்சாங்க குழந்தை ABORTION ஆகிடுச்சு’’ கலங்கி நிற்கும் தாய் | VPMNamakkal Collector : ’’பாதையை அடைச்சா அவ்ளோதான்’’அதிகாரிகளை அலறவிட்ட கலெக்டர்..காலில் விழுந்த மக்கள்H Raja vs TVK Vijay |”பாட்டு பாடுனீங்களே விஜய்..உங்க மகனுக்கு ஒரு நியாயமா?”விஜய் மீது H.ராஜா அட்டாக் | New Education Policy

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Anbil Mahesh: ரூ.2.152 கோடி என்ன உங்கள் வீட்டுப் பணமா?- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
Minister Anbil Mahesh: ரூ.2.152 கோடி என்ன உங்கள் வீட்டுப் பணமா?- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவா? சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவா? சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்!
முஸ்லீம்கள் ஓட்டு கிடைக்குமா? தவெக விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. திமுக கோட்டையில் ஓட்டை!
முஸ்லீம்கள் ஓட்டு கிடைக்குமா? தவெக விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. திமுக கோட்டையில் ஓட்டை!
Watch video: பாலத்தை எல்லாம் கும்பிட்றீங்க? மகா கும்பமேளாவில் நடக்கும் மூடநம்பிக்கையின் உச்சம்
Watch video: பாலத்தை எல்லாம் கும்பிட்றீங்க? மகா கும்பமேளாவில் நடக்கும் மூடநம்பிக்கையின் உச்சம்
Coimbatore Shutdown: கோவையில் எங்கெல்லாம் மின்தடை (20.02.2025 ): செக் பன்னிக்கோங்க.!
Coimbatore Shutdown: கோவையில் எங்கெல்லாம் மின்தடை (20.02.2025 ): செக் பன்னிக்கோங்க.!
Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபி புது ஜெர்சியில இந்திய அணி வீரர்கள பார்த்துட்டீங்களா.? இதோ புகைப்படங்கள்...
சாம்பியன்ஸ் டிராபி புது ஜெர்சியில இந்திய அணி வீரர்கள பார்த்துட்டீங்களா.? இதோ புகைப்படங்கள்...
மாணவி மகள் போன்றவர் இல்லையா? – ஒரே விஷயத்தில் கேள்வி எழுப்பும் இபிஎஸ் அண்ணாமலை! சிக்கலில் திமுக
மாணவி மகள் போன்றவர் இல்லையா? – ஒரே விஷயத்தில் கேள்வி எழுப்பும் இபிஎஸ் அண்ணாமலை! சிக்கலில் திமுக
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.