மேலும் அறிய

Actor Vijay: “காங்கிரஸ் - திமுக கூட்டணியில் விஜயை இணைக்க தயாராக உள்ளோம்” - எம்பி விஜய் வசந்த்

மத்தியில் ஆளும் அரசானது தாங்கள் ஆளாத மாநிலங்களில் முக்கிய பிரமுகர்களுக்கு இது போன்ற நெருக்கடி கொடுப்பது என்பது புதிதல்ல. அதுபோன்று தான் செந்தில் பாலாஜிக்கு நெருக்கடி கொடுக்கின்றனர்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் 53வது பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும்  நிலையில் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக குமரி மாவட்டத்திலும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக குமரி பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் கலந்து கொண்டு ஏழை எளிய மக்களுக்கு தையல் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கி கேக் வெட்டி கொண்டாடினார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் கூறும் பொழுது, “நடிகர் விஜய் அரசியலில் வர வேண்டும் என்ற ஆசை முன்னதாகவே அவருக்கு இருந்து வந்தது. தற்போது மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மூலம் வெளிப்படுத்த துவங்கி உள்ளார். இவர் முன்னதாகவே வந்துவிட்டார் என்று எண்ணத்தோன்றுகிறது. வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணியில் விஜயை இணைக்க தயாராக உள்ளோம். அதை தலைமை தான் முடிவு செய்ய வேண்டும். தமிழகத்தில் இது புதிதல்ல, ஏற்கனவே கலைத்துறையில் இருந்து ஏராளமானவர்கள் வந்துள்ளனர் அவர்களில் பலர் சாதித்தும் உள்ளனர். காலம் பதில் சொல்லும்” என்றார். 

தொடர்ந்து பேசிய அவர், “அமலாக்கத்துறை செயல்பாடு என்பது அரசியல் நோக்கத்தோடு செய்வது போல் உள்ளது.  தொடர்ந்து 13 மணி நேரம் அவரை சித்திரவதை செய்து  நள்ளிரவு நேரத்தில் கைது செய்ய முயன்றதை நாங்கள் கண்டிக்கிறோம்.  மத்தியில் ஆளும் அரசானது தாங்கள் ஆளாத மாநிலங்களில் முக்கிய பிரமுகர்களுக்கு இது போன்ற நெருக்கடி கொடுப்பது என்பது புதிதல்ல. அதுபோன்று தான் செந்தில் பாலாஜிக்கும் கொடுக்கின்றனர். அமலாக்கத்துறையின் அத்துமீறல் என்பது மரபுக்கு மாறாக 13  மணி நேரம் அவரை துன்புறுத்தி அவரது உடல் நலம் சரியில்லாத அளவிற்கு டார்ச்சர் செய்ததை தான் கண்டிக்கிறோம். அதிகாரிகளின் நடவடிக்கைகள் குறித்து இல்லை, அவர்கள் அதற்காக கையில் எடுத்த முறைகளை பற்றி தான் சொல்கிறோம்.

கேரள தமிழகத்தை இணைக்கும் நான்குவழிச்சாலை பணி நடைபெற தடையாக இருப்பது பாறை கற்கள் கிடைக்காமல் இருந்ததே காரணம். தற்போது பல அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து பணியை துவங்க வலியுறுத்தி 1041 கோடி ருபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் விரைவில் துவங்கும் நிலையில் உள்ளது. குமரி மாவட்டத்தில் செயல்பட்டு வந்த குவாரிகள் தடைசெய்யப்பட்டு உள்ளதால் நமது மாவட்டத்திற்கு தேவையான பொருட்கள் கிடைப்பதில்லை. அதே நேரத்தில் வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான வாகனங்கள் கேரளாவுக்கு சென்று வருகின்றன” என்றார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Minister Moorthy: ” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”அஜித் சொன்ன சீக்ரெட்” : மகிழ் திருமேனி Open Talk : குஷியில் ரசிகர்கள்ஸ்டாலின் ஏழை முதல்வரா? இது நம்ம LIST -லயே இல்லயே! வெளியான சொத்து பட்டியல்!ADMK Alliance BJP : Amit shah  போட்ட ஆர்டர் அடங்கி போன Annamalai டெல்லியில் நடந்தது என்ன? : EPSNithish Kumar | கூட்டணி மாறும் நிதிஷ் குமார்?தலைவலியில் பாஜக! சூடுபிடிக்கும் பீகார் தேர்தல் Bihar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Moorthy: ” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
அடங்கி போன அண்ணாமலை; அமித்ஷா போட்ட ஆர்டர்..டெல்லியில் நடந்தது என்ன?
அடங்கி போன அண்ணாமலை; அமித்ஷா போட்ட ஆர்டர்..டெல்லியில் நடந்தது என்ன?
"விவசாயிகளின் நலனே முக்கியம்.." உறுதிபட கூறிய பிரதமர் மோடி!
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
RSS தலைவருக்கு பறந்த கடிதம்.. ரூட்டை மாற்றும் கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு ஷாக்!
RSS தலைவருக்கு பறந்த கடிதம்.. ரூட்டை மாற்றும் கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு ஷாக்!
Embed widget