'பொதுச் செயலாளர் சின்னம்மா தலைமை ஏற்போம், தேர்தலில் வென்று காட்டுவோம்' - மீண்டும் பரபரப்பு போஸ்டர்
பொதுச் செயலாளர் சின்னம்மா தலைமை ஏற்று சட்டமன்ற மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் வென்று காட்டுவோம் என வாசகம் பொருந்திய விழுப்புரத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்.
விழுப்புரம்: விழுப்புரத்தில் மீண்டும் சசிகலா தலைமையில் ஒன்றிணைவோம் என ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு நிலவி வருகிறது.
புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி அவர்களின் உண்மையான தொண்டர்கள் ஒன்றிணைந்து, கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தலைவி சின்னம்மா அவர்களின் தலைமையேற்று வருகின்ற உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தலில் வென்று காட்டுவோம் என விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆனந்த் தலைமையில் விழுப்புரம் நகரின் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒட்டப்பட்ட போஸ்டரின் பரபரப்பு குறையாத நிலையில் தற்போது மீண்டும் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது மேலும் அதிமுகவினர்களுடைய சலசலப்பு நிலவி வருகிறது.
கடந்த வாரம் ஒட்டப்பட்ட போஸ்டரில் குறிப்பிட்டவை...
அஇஅதிமுக பிளவுப்பட்டுள்ளதால் நடந்து முடிந்த சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் பெரும் பின்னடைவை சந்திக்க நேரிட்டது. இதனால் அதிர்ச்சிக்குள்ளான அதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் கழகத்தை தொடர் தோல்வியில் இருந்து காப்பாற்றி சசிகலா தலைமையில் ஒன்றினைய முன்வர வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்துள்ளது. இதனை வலியுறுத்தும் விதமாக விழுப்புரத்தில் பல்வேறு இடங்களிலும் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
விழுப்புரம் நகரில் உள்ள கிழக்கு பாண்டி சாலை, காந்தி சிலை, திருவிக வீதி, நேருஜி வீதி, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் என பல்வேறு முக்கிய இடங்களிலும் ஓட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.