மேலும் அறிய

“எங்களுடன் இருக்கும் எட்டப்பர்களை வைத்து அதிமுகவை வீழ்த்த நினைத்தால் இனி அது நடக்காது” - எடப்பாடி பழனிசாமி

2021 சட்டமன்றத் தேர்தலிலேயே அதிமுக வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் நம்மோடு இருந்த சிலரின் சூழ்ச்சியால் வெற்றியை தடுத்துள்ளார்கள். எந்த ஒரு கொம்பனாலும் அதிமுகவை அசைக்க முடியாது.

விழுப்புரம் மாவட்டம் அதிமுகவின் மரக்காணம் ஒன்றிய செயலாளர் ரவிவர்மாவின் இல்ல காதணி விழா அனுமந்தை கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. இதில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி விழாவில் கலந்து கொண்டு குழந்தைகளை வாழ்த்தினார்.


“எங்களுடன் இருக்கும் எட்டப்பர்களை வைத்து அதிமுகவை வீழ்த்த  நினைத்தால் இனி அது நடக்காது” - எடப்பாடி பழனிசாமி

அதைத்தொடர்ந்து மேடையில் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது:-

இறைவன் நல்ல ஒரு வாய்ப்பை வழங்கி  இருக்கின்றான். நான் இடைக்கால பொதுச்செயலாளர் பதவி ஏற்று முதல் முதலாக கலந்து கொள்ளும் நிகழ்ச்சி இதுதான். அதுவும் விழுப்புரம் மாவட்டத்தில். நான் இடைக்கால பொதுச்செயலாளராக ஆவேன் என்றும் எதிர்பார்க்கவில்லை. அவ்வாறு ஆகி இதுபோல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வேன் என்றும் எதிர்பார்க்கவில்லை. தற்போது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் பல்வேறு சோதனைகளை கடந்து வந்துள்ளது. அதிமுக கட்சியை ஆரம்பிக்கும் போது இரு பெரும் தலைவர்கள் எவ்வாறு பல்வேறு சோதனைகளை தாண்டி வெற்றி பெற்றார்களோ அதே போல் தான் தற்பொழுது வெற்றி அடைந்துள்ளோம்.

இரு பெரும் தலைவர்கள் எவ்வாறு கட்சிக்காக போராடினர்களோ அதே போல் தான் இங்குள்ள உண்மை விசுவாசிகள் கட்சிக்காக போராடி எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம். அதிமுகவில் சில எட்டப்பன்கள் இருந்ததாகவும் அவர்களின் முகத்திரை தற்போது கிழிக்கப்பட்டுள்ளதாகவும், நம்மோடு இருந்தவர்களே நமது இயக்கத்தை பலவீனமடைய செய்தார்கள், 2021 சட்டமன்றத் தேர்தலிலேயே அதிமுக வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் நம்மோடு இருந்த சிலரின் சூழ்ச்சியால் வெற்றியை தடுத்துள்ளார்கள். எந்த ஒரு கொம்பனாலும் அதிமுகவை அசைக்க முடியாது.


“எங்களுடன் இருக்கும் எட்டப்பர்களை வைத்து அதிமுகவை வீழ்த்த  நினைத்தால் இனி அது நடக்காது” - எடப்பாடி பழனிசாமி

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டன் உழைத்து உருவாக்கிய கட்சி அதிமுக, இது உழைப்பால் உயர்ந்த கட்சி, உழைப்பால் ஆட்சிக்கு வந்த கட்சி ஆகவே ஸ்டாலின் அவர்களே எங்களோடு இருக்கும் எட்டப்பனை வைத்து அதிமுகவை வீழ்த்த நினைக்கிறீர்கள். அது ஒருபோதும் நடக்காது, தர்மம், நீதி ஆகியவையே வென்ற சரித்திரம் உள்ளது. எனவே அதுதான் வெல்லும்” எனக் கூறினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கர், ஆர் பி உதயகுமார், எம்சி சம்பத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget