Karur Stampede : 'விஜய் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யலாம்’ கைது செய்ய சட்டத்தில் இடம் உண்டா?

கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சார கூட்டத்தில் சிக்கி இதுவரை 36க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், இது தொடர்பாக விஜய் உள்ளிட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளை விசாரிக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், இந்த விவகாரத்தில் சட்டம் என்ன சொல்கிறது என்று பார்த்தால், கரூரில் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 30 பேருக்கும் மேல் உயிரிழந்த சம்பவம் சட்ட ரீதியாக மிகக் கடுமையான குற்ற அலட்சியமாக கருதப்படும்.
பாரதீய நியாயச் சட்டம் (BNS) பிரிவுகளின்படி, இச்சம்பவம் கீழ்கண்ட குற்றச்சாட்டுகளுக்கு உட்படுகிறது:
-
பிரிவு 105 BNS – மரணம் ஏற்படக்கூடும் என்பதை அறிந்தும் கூட்டத்தை நடத்திய குற்றம் “Culpable Homicide”.
-
பிரிவு 106 BNS – அலட்சியத்தால் ஏற்பட்ட மரணம் (முன்னர் IPC 304A).
-
பிரிவு 110 BNS – சட்டவிரோத கூட்டம் அல்லது கூட்ட நெரிசல் ஏற்பட தவறான நிர்வாகம்.
-
பிரிவு 120 & 121 BNS – அலட்சியம் அல்லது கவனக்குறைவால் காயம் / கடுமையான காயம் ஏற்படுத்துதல்.
இந்த சட்டப்பிரிவுகளின் அடிப்படையில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், விண்ணப்பித்த உள்ளூர் தலைவர்கள், மற்றும் அனுமதி பெற்றவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் வாய்ப்பு இருப்பதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சட்டத்தின் அடிப்படையில், விஜய் கைது செய்யப்படுவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன























