மேலும் அறிய

TVK Vijay Speech: நம்மைத் தவிர தில் யாருக்கு இருக்கிறது.. தவெக நிர்வாகிகள் மத்தியில் விஜய் பேச்சு

திமுக-வினர் செய்யும் தவறுகளை சொல்லும் தைரியம் நம்மைத் தவிர வேறு யாருக்கு உள்ளது? என்று தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் 3வது ஆண்டு தொடக்க விழா இன்று பனையூரில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தவெக தலைவர் விஜய் பேசியதாவது, 

கோட்டை என்பதே கனவு:

எம்ஜிஆரை மட்டுமல்ல, அவரது தொண்டர்களைக்கூட விட்டுவைக்கவில்லை. இதை எல்லாம் மக்கள் அமைதியாக பார்த்து, பார்த்து என்ன செய்தார்கள்? என்பது உங்களுக்கேத் தெரியும். அவர் வெற்றி பெற்ற பிறகு, இந்த அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் என்று சொல்வார்களே, அவர்கள் எல்லாருக்கும் கோட்டை கோட்டை என்பதே ஒரு பகல்கனவாகவே மாறிவிட்டது. 

1977ம் ஆண்டு போலவே இப்பவும் அதே பழைய, அறுந்துபோன, தேய்ந்து போன, நஞ்சுப்போன பழைய ஆயுதத்தை இப்பவும் கையில் எடுக்கிறார்கள். தொழில்நுட்பம் வளர்ந்து எங்கேயோ சேர்ந்து விட்டது. உங்கள் டெக்னிக்கையாவது மாற்றுங்கள்.

அதே டப்பா:

காமராஜரையும் விட்டுவைக்கவில்லை. அவருக்கு இலக்கியம் என்றால் என்ன தெரியும்? அவரைப் பற்றியும் கிண்டலும், கேலியும். யார் எதிர்த்து நின்றாலும் கொந்தளிப்பதுதான் அவர்கள் வேலையே. இப்படி அவர்கள் செய்யும் தவறுகளை நாம் எடுத்துச் சொன்னால், அவர்கள் செய்த ஊழல் எடுத்துச் சொன்னால், முக்கியமாக நாம் அதை எடுத்துச் சொன்னால் 50 வருடத்திற்கு முன்பு உருட்டிய அதே டப்பாவை உருட்ட ஆரம்பித்து விடுவார்கள். 

பவளவிழா பாப்பாவிற்கு என்ன தெரியும்? பழைய டப்பாவை உருட்டத்தானே தெரியும். அதற்காக நாம் அவர்கள் செய்யும் தவறுகளை சொல்லாமல் இருக்க முடியுமா? சொல்லுவோம். சொல்லிக்கொண்டே இருப்போம். அவர்கள் செய்யம் தவறுகளைச் சொல்லும் தில் நம்மைத் தவிர யாருக்கு இருக்கிறது? 

மக்களின் ஒரே பிரதிநிதி:

மக்களின் ஒரே பிரதிநிதி நாம் மட்டும்தான். இந்த நிலைமையில், திருவள்ளுவர் இருந்திருந்தால் இந்த தீயசக்தி பற்றி எழுதியிருந்தால்

அநீதி அராஜகம் தில்லுமுல்லு இவையெல்லாம்
திமுக முதற்றே உலகு

எழுதியிருப்பார். 

மும்முனைப் போட்டி, நான்குமுனைப் போட்டி என்று சொல்கிறார்கள். மாபெரும் மக்கள் சக்தியாக நம் அணி ஒரு பக்கம். திமுக தலைமையில் மற்ற கூட்டணி கட்சிகள் ஒரு பக்கம். பாஜக தலைமையில் மற்றும் பலர். உண்மையைதானே சொன்னேன்.

ஏன்டா கூப்பிட்டோம்?

எத்தனை சக்திகள், எத்தனை பேர் வந்தாலும் திமுக-வை வீழ்த்த மக்கள் சக்தியான நம்மால் மட்டும்தான் முடியும். ஏ விஜய் வீட்டை விட்டு வெளியே வா! ஏ விஜய் வீட்டை விட்டு வெளியே வா! இப்படி எல்லாம் கேட்கும்போது எனக்கு ஒவ்வொரு வீட்டிலும் கூப்பிடுவது போல தோன்றுகிறது.

ஓட்டர் ஐடியை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு வீட்டில் உள்ள விஜய்யும், ஒவ்வொரு விஜியும் பூத், பூத்தாக காலையிலே வந்து நிற்பாங்க. அன்று தெரியும் ஏண்டா இந்த விஜய்யை கூப்பிட்டோமென? இப்படி பேசினால் உடனே சினிமாவா இது? என்று ஆரம்பித்துவிடுவார்கள். நான் சினிமாவை விட்டாலும் நீங்கள் சினிமாவை விடமாட்டேங்குறீங்களே? 

இவ்வாறு அவர் பேசினார்.

தலைப்பு செய்திகள்

இனி கடன் சுமை குறையுமா? 6 பேர் கொண்ட குழுவை உருவாக்கிய முதலமைச்சர் விஜய் - யார் அவர்கள்?
இனி கடன் சுமை குறையுமா? 6 பேர் கொண்ட குழுவை உருவாக்கிய முதலமைச்சர் விஜய் - யார் அவர்கள்?
கீழே தயங்கி நின்ற அனிதா ராதாகிருஷ்ணன்! மேலே வரச் சொன்ன அமைச்சர் வன்னி அரசு - நீங்களே பாருங்க
கீழே தயங்கி நின்ற அனிதா ராதாகிருஷ்ணன்! மேலே வரச் சொன்ன அமைச்சர் வன்னி அரசு - நீங்களே பாருங்க
Thirumavalavan - Vijay: முதலமைச்சர் விஜய்க்கு திருமாவளவன் திடீர் கோரிக்கை! என்ன தெரியுமா?
Thirumavalavan - Vijay: முதலமைச்சர் விஜய்க்கு திருமாவளவன் திடீர் கோரிக்கை! என்ன தெரியுமா?
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!

வீடியோ

Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
CAT 2026: IIM கனவை நனவாக்கலாம்- எம்பிஏ படிப்பில் சேர ஆக.3 முதல் பதிவு, முழு விவரம்!
CAT 2026: IIM கனவை நனவாக்கலாம்- எம்பிஏ படிப்பில் சேர ஆக.3 முதல் பதிவு, முழு விவரம்!
Thirumavalavan - Vijay: முதலமைச்சர் விஜய்க்கு திருமாவளவன் திடீர் கோரிக்கை! என்ன தெரியுமா?
Thirumavalavan - Vijay: முதலமைச்சர் விஜய்க்கு திருமாவளவன் திடீர் கோரிக்கை! என்ன தெரியுமா?
CM Vijay Karnataka Visit : ’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
US Iran War: “நிறுத்தி இருக்கோம், ஆனா நிறுத்தல“ ஈரான் மீதான தாக்குதல் குறித்து வெள்ளை மாளிகை முக்கிய அறிக்கை
“நிறுத்தி இருக்கோம், ஆனா நிறுத்தல“ ஈரான் மீதான தாக்குதல் குறித்து வெள்ளை மாளிகை முக்கிய அறிக்கை
Maruti Safest Cars: 5 ஸ்டார் ரேட்டிங் இருக்குற மாருதியோட பாகுபலி கார்கள் எது எதுன்னு தெரியுமா.? இந்தாங்க லிஸ்ட்
5 ஸ்டார் ரேட்டிங் இருக்குற மாருதியோட பாகுபலி கார்கள் எது எதுன்னு தெரியுமா.? இந்தாங்க லிஸ்ட்
Iran Vs Ukraine: இது என்னடா புது தலைவலி.?! வர்த்தக கப்பல் மீது தாக்குதல்; உக்ரைனுக்கு ஈரான் எச்சரிக்கை; நடந்தது என்ன.?
இது என்னடா புது தலைவலி.?! வர்த்தக கப்பல் மீது தாக்குதல்; உக்ரைனுக்கு ஈரான் எச்சரிக்கை; நடந்தது என்ன.?
ஒரே சார்ஜில் 140 கி.மீட்டர் மைலேஜ்.. இளைஞர்களின் இதயமாகும் Odysse Evoqis இ பைக் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 140 கி.மீட்டர் மைலேஜ்.. இளைஞர்களின் இதயமாகும் Odysse Evoqis இ பைக் - விலை எவ்ளோ?
Embed widget