மேலும் அறிய

Vijay: இரட்டை வேடம் போடுகிறாரா நடிகர் விஜய்? சொல்வது ஒன்று, செய்வது ஒன்றா?- லியோ சிகரெட் காட்சியால் எழும் எதிர்ப்புகள்

திரையுலகைப் பொறுத்தவரை, நடிகர் விஜய்க்குக் குழந்தைகள், மாணவர்கள் என ஃபேமிலி ஆடியன்ஸ் அதிகம்.

மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பேசியதும் அதற்கு அரசியல் தலைவர்களின் எதிர் வினையும் பேசுபொருளாக மாறிய நிலையில், தற்போது லியோ படத்தில் விஜய் சிகரெட் பிடிக்கும் காட்சி வெளியானதால் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. 

நடிகர் விஜய் தற்போது லியோ என்னும் படத்தில் நடித்து வருகிறார். அவரின் 49ஆவது பிறந்தநாள் இன்று (ஜூன் 22) கொண்டாடப்படும் நிலையில், படத்தின் இரண்டாவது லுக் இன்று வெளியாகி உள்ளது. இதில் விஜய் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. அதேபோல பாடல் காட்சிகளில் பெரும்பாலான இடங்களில் விஜ்ய புகை பிடித்தவாறு இருக்கிறார். ஏற்கெனவே ஜூன் 16ஆம் தேதி வெளியான லியோ திரைப்படத்தின்  முதல் லுக்கிலும் நடிகர் விஜய் புகை பிடிக்கும் காட்சி  இடம் பெற்றிருந்தது. 

Vijay: இரட்டை வேடம் போடுகிறாரா நடிகர் விஜய்? சொல்வது ஒன்று, செய்வது ஒன்றா?- லியோ சிகரெட் காட்சியால் எழும் எதிர்ப்புகள்

புகை பிடிப்பதுபோல் நடிக்க மாட்டேன் என்று உறுதியளித்த விஜய்

நடிகர் விஜய் நடிப்பில், துப்பாக்கி படம் 2012-ல் வெளியானபோதும், சர்கார் திரைப்படம் 2018-ல் வெளியானபோதும் இதே சர்ச்சை எழுந்தது. அப்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், இத்தகைய காட்சிகளில் நடிக்கக்கூடாது என்று விஜய்க்குக் கோரிக்கை விடுத்திருந்தார். அதை ஏற்று நடிகர் விஜய்யும் இனிமேல் புகை பிடிப்பதுபோல் நடிக்க மாட்டேன் என்று பேட்டி அளித்திருந்தார். எனினும் தொடர்ந்து விஜய் நடிக்கும் படங்களில் இத்தகைய காட்சிகள் தவறாமல் இடம்பெற்று வருகின்றன. 

Vijay: இரட்டை வேடம் போடுகிறாரா நடிகர் விஜய்? சொல்வது ஒன்று, செய்வது ஒன்றா?- லியோ சிகரெட் காட்சியால் எழும் எதிர்ப்புகள்

இதற்கு அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். லியோ படத்தில் சிகரெட் பிடிக்கும் காட்சியுடன் முதல் லுக் வெளியானபோது எதிர்ப்புத் தெரிவித்த அன்புமணி, ''நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படங்களை  குழந்தைகளும், மாணவர்களும் பார்க்கின்றனர். அவர் புகைப்பிடிக்கும் காட்சியில் நடிப்பதைப் பார்த்து அவர்களும் அப்பழக்கத்திற்கு ஆளாகிவிடக் கூடாது. புகைப் பழக்கத்திலிருந்து பொதுமக்களைக் காக்கும் சமூகப் பொறுப்பும் அவருக்கு உண்டு. சட்டமும் அதைத் தான் சொல்கிறது. 

எனவே, நடிகர் விஜய் கடந்த 2007, 2012-ஆம் ஆண்டுகளில் உறுதியளித்ததைப் போலவே திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதைத் தவிர்க்க வேண்டும்'' என்று தெரிவித்து இருந்தார். எனினும் இன்று வெளியான இரண்டாவது லுக்கில், விஜய் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. 

Vijay: இரட்டை வேடம் போடுகிறாரா நடிகர் விஜய்? சொல்வது ஒன்று, செய்வது ஒன்றா?- லியோ சிகரெட் காட்சியால் எழும் எதிர்ப்புகள்

அரசியலுக்கு அச்சாரம்

நடிகர் விஜய் சார்பில் விஜய் மக்கள் இயக்கத்தினர், தமிழ்நாட்டு மக்களுக்கு மாவட்டங்கள்தோறும் அவ்வப்போது ரத்த தானம், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி, உணவு வழங்கல், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றனர். அதேபோல தமிழக உள்ளாட்சித் தேர்தலில், விஜய் அனுமதியோடு, விஜய் மக்கள் இயக்கத்தினர் சிலர் போட்டியிட்டு வெற்றியும் பெற்றனர். இதனால் தேர்தல் அரசியலுக்குள் வர விஜய் ஆயத்தமாகி வருகிறார் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

மாணவர்களிடம் பேசிய விஜய்

கடந்த ஜூன் 17ஆம் தேதி சென்னை, நீலாங்கரையில் தொகுதி வாரியாக 10, 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ- மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோரைச் சந்தித்த நடிகர் விஜய், கல்வி உதவித்தொகை வழங்கினார். மாணவர்களிடம் பேசிய விஜய், கல்வியின் முக்கியத்துவம் குறித்துக் கூறினார். அம்பேத்கர், காமராஜர், பெரியார் போன்ற தலைவர்கள் குறித்து மாணவர்கள் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். வாக்களிப்பதற்குப் பணம் வாங்கக் கூடாது என்றும் வீட்டில் பெற்றோரிடமும் இதுகுறித்துப் பேச வேண்டும் எனவும் விஜய் அறிவுறுத்தி இருந்தார். 

Vijay: இரட்டை வேடம் போடுகிறாரா நடிகர் விஜய்? சொல்வது ஒன்று, செய்வது ஒன்றா?- லியோ சிகரெட் காட்சியால் எழும் எதிர்ப்புகள்

முன்னதாக இந்த நிகழ்வுக்கு வந்தவர்களிடம் சிகரெட் உள்ளிட்ட போதைப் பொருட்கள் உள்ளனவா என்று வெளியிலேயே பரிசோதனை செய்யப்பட்டது. அவ்வாறு ஏதேனும் இருந்தால் அவற்றை பவுன்சர்கள் பெற்றுக்கொண்டு, விருந்தினர்களை உள்ளே அனுப்பினர். 

எதிர்மறையான தாக்கம்

திரையுலகைப் பொறுத்தவரை, நடிகர் விஜய்க்குக் குழந்தைகள், மாணவர்கள் என ஃபேமிலி ஆடியன்ஸ் அதிகம். பெண்கள், இளம் ரசிகர்களும் விஜய்க்கு அதிகமாக உள்ள சூழலில், அவர் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகள் முன்னிலைப்படுத்தப்படுவது, அவரின் ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். 

Vijay: இரட்டை வேடம் போடுகிறாரா நடிகர் விஜய்? சொல்வது ஒன்று, செய்வது ஒன்றா?- லியோ சிகரெட் காட்சியால் எழும் எதிர்ப்புகள்

புகை பிடிக்க மாட்டேன் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, மீண்டும் அத்தகைய காட்சிகளில் நடிப்பதும், மாணவர்களைச் சந்தித்து கல்வியின் முக்கியத்துவம் குறித்து அறிவுரை வழங்கிய சில நாட்களிலேயே ரத்தம் சொட்டும் காட்சிகளிலும் புகைக்கும் காட்சிகளிலும் நடித்து, அவற்றை முன்னிலைப்படுத்தி,  இணையத்தில் வெளியிடுவதும், நடிகர் விஜய் இரட்டை வேடம் போடுகிறாரா என்ற கேள்வியை அரசியலர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.  இதற்கு நடிகர் விஜய் பதில் சொல்ல வேண்டும் என்பதும் அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
"இந்தியாவுக்கு தகுதி இருக்கு" புகழ்ந்து தள்ளிய ரஷிய அதிபர் புதின்.. மிரண்ட உலக நாடுகள்!
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களே உஷார்... நூதன மோசடி: எச்சரிக்கும் சைபர் க்ரைம் போலீஸ்
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களே உஷார்... நூதன மோசடி: எச்சரிக்கும் சைபர் க்ரைம் போலீஸ்
TNPSC Results: அதிரடி காட்டும் டிஎன்பிஎஸ்சி; 50 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியீடு- காண்பது எப்படி?
TNPSC Results: அதிரடி காட்டும் டிஎன்பிஎஸ்சி; 50 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியீடு- காண்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Seeman | நாதக சீமானுக்கு செக்! விஜய் எடுத்த அதிரடி முடிவு! தவெகவினர் மரணகலாய்Vijay Thiruma meeting | ஒரே மேடையில் விஜய், திருமா! கடுப்பில் விசிக சீனியர்கள்!ஆதவ் அர்ஜூனா அடாவடி!TVK Vijay : வாக்கு தவறிய விஜய் மறந்துட்டாரா? தைரியம் இல்லையா? வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்Aadhav arjuna : ”திருமாவுக்கு அடுத்து நான் தான்” திட்டம் தீட்டும் ஆதவ்! கொந்தளிக்கும் விசிக சீனியர்ஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
"இந்தியாவுக்கு தகுதி இருக்கு" புகழ்ந்து தள்ளிய ரஷிய அதிபர் புதின்.. மிரண்ட உலக நாடுகள்!
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களே உஷார்... நூதன மோசடி: எச்சரிக்கும் சைபர் க்ரைம் போலீஸ்
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களே உஷார்... நூதன மோசடி: எச்சரிக்கும் சைபர் க்ரைம் போலீஸ்
TNPSC Results: அதிரடி காட்டும் டிஎன்பிஎஸ்சி; 50 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியீடு- காண்பது எப்படி?
TNPSC Results: அதிரடி காட்டும் டிஎன்பிஎஸ்சி; 50 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியீடு- காண்பது எப்படி?
உலகமே அழிந்திருக்கிறது; ஆலமரம் அழியாதா? - உதயநிதியை அட்டாக் செய்த செல்லூர் ராஜூ
உலகமே அழிந்திருக்கிறது; ஆலமரம் அழியாதா? - உதயநிதியை அட்டாக் செய்த செல்லூர் ராஜூ
Chennai Airport: பரபரப்பான சென்னை விமான நிலையம்.. உயிர் தப்பிய பயணிகள் - என்ன நடந்தது?
பரபரப்பான சென்னை விமான நிலையம்.. உயிர் தப்பிய பயணிகள் - என்ன நடந்தது?
மாணவர்களே மறக்காதீங்க.. நாளை தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் உண்டு!
மாணவர்களே மறக்காதீங்க.. நாளை தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் உண்டு!
"ஒட்டுண்ணி காங்கிரஸ்.. டிரைவர் சீட்டுக்காக அடிச்சிக்கிறாங்க" மோடி அட்டாக்!
Embed widget