மேலும் அறிய

Polur TVK MLA : நக்கல் வேணாம்.. அதிகாரியிடம் எப்படி பேசனும் தெரியாதா.? மிரட்டும் தவெக எம்எல்ஏ- அதிர்ச்சி வீடியோ

Polur TVK MLA : தமிழகத்தில் தவெக ஆட்சியை பிடித்துள்ள நிலையில், தவெகவினர் அடுத்தடுத்து பல இடங்களில் ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் போளூர் எம்எல்ஏ தொழிலாளியை மிரட்டும் தொனியில் பேசிய வீடியோ ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தவெக ஆட்சி- ஆய்வில் நிர்வாகிகள்

தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியை பிடித்துள்ளது. இதனையடுத்து முதலமைச்சராக விஜய் பதவியேற்றார். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் தவெகவினர் மருத்துவமனை, கல்குவாரி, உணவுப்பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் சோதனை நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் கடந்த வாரம் தாம்பரம் அரசு மருத்துவமனைக்குள் சென்ற அப்போது எம்எல்ஏவாக இருந்த சரத்குமார், மருத்துவர்கள், செவிலியர்கள், ஒப்பந்த பணியாளர்களை மிரட்டும் வகையில் பொதுமக்கள்  முன்னிலையில் பேசினார். இதனையடுத்து தேனியில் 100க்கும் மேற்பட்ட தவெக தொண்டர்களோடு அணிவகுத்த எம்எல்ஏக்கள் மருத்துவமனையில் உள்ளே சென்று ஆய்வு என்ற பெயரில் நோயாளிகளுக்கு தொந்தரவு செய்தனர்.

போளூர் எம்எல்ஏ கல்குவாரியில் ஆய்வு

இதே போல தென்காசி மருத்துவமனையில் தவெக மருத்துவ அணியை சேர்ந்த பெண்மனி ஒருவர் டாக்டர் கோட் அணிந்து மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்த வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தொழிலாளர்களை மிரட்டும் தவெக எம்எல்ஏவின் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தொகுதியில் தவெக சார்பாக போட்டியிட்ட அபிஷேக் வெற்றி பெற்று எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  கடந்த சில தினங்களுக்கு முன்பாக அந்த பகுதியில் உள்ள கல்குவாரிக்கு சென்று சோதனை நடத்தியுள்ளார். அப்போது அங்கிருக்கும் ஊழியர்களிடம் மிரட்டும் தொனியில் அபிஷேக் பேசிய வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒருமையில் மிரட்டும் எம்எல்ஏ

கல் குவாரியில் பணியாற்றும் ஊழியர்களிடம் ஆவணங்கள் தொடர்பாக கேட்டறிந்துள்ளார் எம்எல்ஏ அபிஷேக், அப்போது தந்தை மகன் என குடும்பத்தோடு வேலை செய்து வருபவர்களிடம், தந்தை முன்பே மகனை எம்எல்ஏ மிரட்டும் வகையில் பேசியுள்ளார். அந்த வீடியோவில்,  

எம்எல்ஏ- நக்கல் வேண்டாம் தம்பி .. நக்கல் இங்கு வேண்டாம். உங்க பேரு என்ன.?

தொழிலாளியின் மகன்- பாலாஜி

எம்எல்ஏ- ஒழுங்கா நிற்க மாட்டீங்களா.?

தொழிலாளியின் தந்தை- (தனது மகனிடம்)நீ ஏன் இடையில் வாரே - சம்பந்தபட்டவர்கள் பேசிக்கொள்வார்கள்.

எம்எல்ஏ- சும்மா சைலண்டா போறவனா.? இந்த நக்கல் இங்கு பன்ன கூடாது. கம்முனு இங்கு ஒழுங்கு செய்யுங்க இங்கு வந்திருக்கேன்

எம்எல்ஏ- என்ன வயசு 
தொழிலாளியின் மகன்- 24

எம்ல்ஏ- எனக்கு என்ன வயசு தெரியுமா.? உன் வயசை தாண்டி தான் வந்திருப்பேன். உன்னை போல் எத்தனை பேர் பாத்திருப்பேன். எத்தனை பேரிடம் நான் நக்கலாக நின்றிருப்பேன். டெட்டனேட்டர் சொல்ல தெரியுது. படிக்க தெரியாதா.? வேறு எங்காவது வைச்சிக்கோ, அதிகாரிங்க வந்தா எப்படி பேசுனும் முதலில் தெரிஞ்சுக்கோ, பனிவாக பேசுனா தான் வேலை நடக்கும்.

உன்னை கெஞ்ச சொல்லவில்லை, உங்க அப்பா எப்படி மரியாதையா பேசுறாங்க, உங்க பசங்களுக்கு சொல்லி கொடுக்க மாட்டீங்களா.? என அடுத்தடுத்து மிரட்டும் தொனியில் எம்எல்ஏ பேசும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில் நெட்டிசன்கள் எம்எல்ஏவின் மிரட்டும் வகையிலான பேச்சுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள். மாற்றம் என கேட்டீர்களே இப்போது நல்ல மாற்றம் கிடைத்துள்ளது என கிண்டல் செய்து வருகிறார்கள். 

Advertisement

தலைப்பு செய்திகள்

DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
வேளாண் பட்ஜெட்: உழவர்களுக்குப் பெரும் ஏமாற்றம் - அன்புமணி கண்டனம்
வேளாண் பட்ஜெட்: உழவர்களுக்குப் பெரும் ஏமாற்றம் - அன்புமணி கண்டனம்
TN Budget: தமிழ்நாட்டிற்கு நடப்பாண்டில் 20 ஆயிரம் கோடி கூடுதல் வருமானம்.. எப்படி தெரியுமா?
TN Budget: தமிழ்நாட்டிற்கு நடப்பாண்டில் 20 ஆயிரம் கோடி கூடுதல் வருமானம்.. எப்படி தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget