இலங்கைக்கு அனுப்ப இந்த பொருட்கள் எல்லாம ரெடி...! - பட்டியலிட்ட பால்வளத்துறை அமைச்சர் நாசர்
இலங்கையில் தவிக்கும் மக்களுக்கு 4 ஆயிரம் மெட்ரிக் டன் ஆவின் பால் பவுடர் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இலங்கைக்கு அனுப்ப தயார் நிலையில் உள்ளது-பால்வளத்துறை அமைச்சர் நாசர் பேட்டியளித்தார்.
தற்போது பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை மாவட்டம் அம்மாபாளையம் பகுதியில் இயங்கி வரும் ஆவின் பால் தொழிற்சாலையில் இலங்கைக்கு அனுப்பப்படும் பொருட்கள் குறித்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆய்வு மேற்கொண்டார்.
பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில்....
தற்போது பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் 4 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி மற்றும் 500 மெட்ரிக் டன் ஆவின் பால் பவுடர், மருத்துவ உபகரணங்கள் மற்றும் நிதி உதவிகள் அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும்,500 மெட்ரிக் டன் பால் பவுடர் அம்மாபாளையத்தில் உள்ள பால் பவுடர் தொழிற்சாலையில் மூன்று சுழற்சி முறையில் 150 மெட்ரிக் டன் பால் பவுடர் உற்பத்தி செய்யப்பட்டு பேக்கிங் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளதாகவும்,அதேபோல் சேலம் பால் பவுடர் தொழிற்சாலை மூலமாக 150 மெட்ரிக் டன் பால் பவுடர் தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், ஈரோடு பால் பவுடர் தொழிற்சாலை மூலமாக 200 மெட்ரிக் டன் பால் பவுடர் தயாரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர்
தமிழக முதல்வர் நிவாரண பொருட்களை அனுப்பி வைக்கும் தேதி அறிவித்தவுடன் 500 மெட்ரிக் டன் பால் பவுடர் அனைத்தும் அனுப்புவதற்கு தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் பால் உற்பத்தியில் சேலம் மாவட்டம் முதல் இடத்தில் உள்ளதாகவும், கடந்த ஆட்சிக்காலத்தில் இந்த ஆட்சி காலத்தில் இருபத்தி ஒரு லட்ச லிட்டர் பால் உற்பத்தி செய்யப் படுவதாகவும் ஆவின் மூலமாக நெய் பால் பவுடர் ஐஸ்கிரீம் போன்ற 150 பொருட்கள் தயார் செய்து வருவதாகவும் திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் விவசாயிகளிடம் இருந்து பால் கொள்முதல் செய்யப்படுவதாக, கடந்த ஆட்சி காலத்தில் தீபாவளி பண்டிகைகாக 40 நாட்கள் வாணிபங்கள் செய்தார்கள் அதில் 53 கோடி ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்தனர். இல்லாமல் இதில் 8டன் அளவிற்கு பொருட்களை வேஷ்டு செய்துள்ளனர் என்றும், இந்த முறை நடைப்பெற்ற தீபாவளி பண்டிகைக்கு 17 நாட்கள் வாணிபம் செய்து 87 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளோம் என்றார்.
தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து கோவில்களிலும் பயன்படுத்தக்கூடிய நெய் ஆவின் நெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என்றும், பால்வளத் துறை முன்னாள் அமைச்சர் மீது உள்ள குற்றச்சாட்டிற்கு கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து நெய் மற்றும் பால் பவுடர் நிறுவனங்களை விட ஆவின் பால் நெய் பால் பவுடர் மிகவும் தரமாகவும் சுத்தமாகவும் இருக்கும் என்றார். கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் இறைவன் உணவு அளிப்பது போல் தமிழக முதல்வர் தாயுள்ளத்தோடு இலங்கை மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் இந்த ஆய்வில் சட்டமன்ற துணை சபாநாயகர் கூ பிச்சாண்டி நாடாளுமன்ற உறுப்பினர் சி என் அண்ணாதுரை சட்டமன்ற உறுப்பினர் கிரி மற்றும் பேசுதி சரவணன் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.