TVK Vijay: ”நான் இளைய காமராஜரா?.. 2026 பற்றி பேசாதீங்க!” கல்வி விருது விழாவில் விஜயின் எச்சரிக்கை
யாரும் தப்பா எடுத்துக்க வேணாம், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மேடையில் பேசுவதை குறைத்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று விஜய் கூறினார்.

தன்னை காமராஜர் என்றோ இளைய காமராஜர் என்றோ அழைக்க வேண்டாம் என்று கல்வி விருது வழங்கும் விழாவில் பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு வேண்டுகோள் வைத்தார்.
தவெக கல்வி விருது விழா:
தவெகவின் கல்வி விருது வழங்கும் விழா மூன்றாம் கட்டமாக இன்று சென்னையில் நடந்து வருகிறது. விழாவின் தொடக்கத்தில் பேசிய விஜய் “நேற்று குஜராத்தில்மிகப்பெரிய சோகமான நிகழ்வு நேற்று நடந்து. அந்த விபத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை பார்க்கும் எனது மனம் பதறுகிறது. அடுத்த நொடி நிச்சயம் இல்லாத வாழ்க்கை என்று கூறியப்பின் விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக மேடையில் இரண்டு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
மக்களுக்கான தலைவர் என்று நாங்கள் சொல்வதற்கான காரணம் இதுதான்🥺🫶#தலைவர்விஜய் #TVKForTN #VijayHonorsStudents pic.twitter.com/VVJWeUF5q8
— 𝕵𝖔𝖍𝖓 𝕵𝕽™ (@vetrimaran_of) June 13, 2025
விஜய் வைத்த வேண்டுகோள்:
அஞ்சலி செலுத்திய பின் மீண்டும் பேசிய விஜய் எல்லோரும் ரொம்ப தூரத்தில் இருந்து வந்து இருக்கீங்க, உங்கள் அனைவரையும் நேரில் சந்தித்து பேசுவேன். இருந்தாலும் உங்களிடம் ஒரு சின்ன வேண்டுகோள், யாரும் தப்பா எடுத்துக்க வேணாம், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மேடையில் பேசுவதை குறைத்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று விஜய் கூறினார்.

காமராஜர் என கூப்பிடாதீங்க:
இதன் பிறகு விருது வழங்கும் விழா தொடங்கி நடைப்பெற்றது, அப்போது வால்பாறை பகுதியை சேர்ந்த மாணவனுக்கு தங்க மோதிரத்தை பரிசாக வழங்கினார். இதன் பிறகு பேசிய மாணவனின் தந்தையை விஜயின் வேண்டுகோளை மீறி விஜயை எம்.ஜி.ஆர், விஜயகாந்த் ஆகியோருடன் புகழ்ந்து பேசினார்.
தன்னை இளைய காமராஜர்
— K.மோகன் குப்புசாமி (@mohan3011k) June 13, 2025
என அழைக்க வேண்டாம் பள்ளி மாணவர்களுக்கு...!!
தலைவர் தளபதி அன்பு கட்டளை..!!#TVKVijay #TVKForTN pic.twitter.com/STAzfFZmLd
அவரின் பேச்சுக்கு பிறகு மைக்கை வாங்கி பேசிய விஜய், “உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு வேண்டுக்கொள் வைக்கிறேன்.”2026 தேர்தலைப்பற்றி பேச வேண்டாம், அதே போல் என்னை காமராஜர் என்றோ இளைய காமராஜர் என்றோ அழைக்க வேண்டாம். அதற்கு பதிலாக உங்கள் பள்ளி மற்றும் பள்ளிக்கூட ஆசிரியர்களை பற்றி பேசுங்கள் என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு கோரிக்கை வைத்தார்.






















