TVK PMK Alliance: தவெக - பாமக கூட்டணி? துணை முதல்வர் அன்புமணி ! விஜய் பக்கா ஸ்கெட்ச்
மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் தேர்தலை சந்தித்த பாமக, இந்த முறை தவெக உடன் கூட்டணி அமைக்க திட்டம் தீட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக உடன் கூட்டணி வைக்க பாமக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இந்த கூட்டணி உறுதியானால் அன்புமணி ராமதாஸ்க்கு துணை முதல்வர் பதவி வழங்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் கூட்டணி:
2026 தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறது. திமுகவை எதிர்க்க அதிமுக பாஜக உடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்நிலையில் நாதக, தவெக கட்சிகள் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. பாமக தேமுதிக கட்சிகள் தங்களது கூட்டணி நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்காமல் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் தேர்தலை சந்தித்த பாமக, இந்த முறை தவெக உடன் கூட்டணி அமைக்க திட்டம் தீட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தவெக தனித்து போட்டி:
சட்டமன்ற தேர்தலில் தவெக தனித்து தான் போட்டியிடும் யாருடனும் கூட்டணி கிடையாது என அக்கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து முழக்கமிட்டு வருகின்றனர். எனினும் விக்கிரவாண்டியில் நடைபெற்ற தவெக முதல் மாநாட்டின் போது பேசிய தவெக தலைவர் விஜய், ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்குவதாக வெளிப்படையாக அறிவித்தார்.
பாமக-தவெக கூட்டணி?
இந்நிலையில் தற்போது பாமக யார் தங்களுக்கு 90 சீட் வ்ழங்குகிறார்களோ அவர்களுடன் செல்லலாம் என முடிவு செய்து தவெக உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம். இந்நிலையில் தவெக தரப்பில் விஜய்க்கு நெருக்கமான ஆடிட்டர் ஒருவர் இது தொடர்பாக ராமதாஸிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. இந்த பேச்சுவார்த்தையில் பாமக க்கு 90 சீட்டுகள் வழங்க தவெக ஓகே சொல்லிவிட்டதாகவும் ஆனால் முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு விஜய் முதல்வராக இருக்கட்டும் அடுத்த பாதியில் அன்புமணி முதல்வராக இருக்கட்டும் என பாமக தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால் அதற்கு தவெக தரப்பில் முதல்வர் பதவி குறித்து விஜய் தான் முடிவு செய்யணும் ஆனால் அன்புமணிக்கு துணை முதல்வர் அல்லது அமைச்சர் பதவி வழங்குவதாக உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

