மேலும் அறிய

Thalapathy Vijay: “குடியுரிமை திருத்தச் சட்டம் ஏற்கத்தக்கது அல்ல”.. மத்திய அரசை சீண்ட தொடங்கிய விஜய்..!

கடந்த 2019 ஆம் ஆண்டு பாஜக மக்களவை தேர்தலில் தொடர்ந்து இரண்டாவது முறையாக வென்று ஆட்சிக்கு வந்தது. ஆட்சிக்கு வந்த கையோடு அவசர அவசரமாக குடியுரிமை திருத்த மசோதாவை சட்டமாக மத்திய அரசு நிறைவேற்றியது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (Citizenship Amendment Act) தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

குடியுரிமை திருத்தச் சட்டம் 

கடந்த 2019 ஆம் ஆண்டு பாஜக மக்களவை தேர்தலில் தொடர்ந்து இரண்டாவது முறையாக வென்று ஆட்சிக்கு வந்தது. ஆட்சிக்கு வந்த கையோடு அவசர அவசரமாக குடியுரிமை திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில்  சட்டமாக மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த சட்டம் என்ன சொல்கிறது என கேட்டால், ‘2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்பாக பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற அண்டை நாடுகளில் இருந்து மத ரீதியிலான துன்புறுத்தலால் இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சி இனத்தவர், கிறிஸ்தவர்கள் ஆகியோர் இந்தியாவுக்கு வருகை தந்து இந்தியாவில் இந்தியாவில் குறைந்தது 5 ஆண்டுகள் வசித்தாலே அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் குடியரசுத்தலைவர் ஒப்புதல் பெறப்பட்ட இந்த சட்டமானது 2020 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக இருந்தது. ஆனால் இந்த சட்டத்தால் என்ஆர்சி எனப்படும் தேசிய மக்கள் பதிவேட்டில் பலரது குடியுரிமை பறிக்கப்படும் ஆபத்து இருப்பதாக பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தினர். குறிப்பாக மத்திய அரசு சுட்டிக்காட்டிய சட்டத்தில் இஸ்லாமிய மதம் இல்லாதது மிகப்பெரிய சர்ச்சைகளை கிளப்பியது. மேலும் இலங்கை வாழ் அகதிகளும் இடம்பெறாதது பல கேள்விகளை எழுப்பியது. நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தது. 

கொரோனா பாதிப்பால் போராட்டங்கள் நிறுத்தப்பட்ட நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டம் விதிகள் வகுக்கப்பட்ட பிறகு அமலுக்கு வரும் என மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் இச்சட்டம் அமலுக்கு வந்துள்ளது மீண்டும் பூதாகரமாக பிரச்சினை வெடிக்க காரணமாக அமைந்துள்ளது. பலரும் மத்திய அரசுக்கு எதிராக கண்டனங்களை பதிவிட்டு வரும் நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் அறிக்கை ஒன்றை தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்டுள்ளது. அதில், “சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் வாழும் சூழலில் பிளவுவாத அரசியலை முன்னிறுத்தி செயல்படுத்தப்படும் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 (Citizenship Amendment Act) போன்ற எந்த சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல. தமிழ்நாட்டில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக பாஜக தலைவர்கள் என்ன மாதிரியான எதிர்வினை ஆற்றப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

ஏற்கனவே விஜய், தான் நடித்த மெர்சல் படத்தில் மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை குறித்து வசனம் ஒன்றை பேசினார். இது கடும் சர்ச்சைகளை கிளப்பியது. குறிப்பாக விஜய்யை அவர் சார்ந்த மதத்தை வைத்து முன்னணி பாஜக தலைவர்கள் வம்பிழுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Breaking News LIVE: பாஜக உட்கட்சி பூசல்.. தமிழிசையை அழைத்துப்பேசிய அமித்ஷா கண்டித்தாரா? வீடியோ வைரல்
Breaking News LIVE: பாஜக உட்கட்சி பூசல்.. தமிழிசையை அழைத்துப்பேசிய அமித்ஷா கண்டித்தாரா? வீடியோ வைரல்
Aadhaar Fraud Fact Check: தொட்டா போச்சு.. ஆதார் பெயரில் மோசடி முயற்சி.. மாட்டிக்காதீங்க மக்களே!
தொட்டா போச்சு.. ஆதார் பெயரில் மோசடி முயற்சி.. மாட்டிக்காதீங்க மக்களே!
Parliament Session: 18ஆவது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம்.. ஜூன் 24ஆம் தேதி கூடுகிறது!
24ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற கூட்டம்.. அசுர பலத்துடன் தயாராகும் எதிர்க்கட்சிகள்.. சமாளிக்குமா பாஜக அரசு?
MP Salary Benefits: எம்.பி., சம்பளத்தை விடுங்க, சலுகைய கவனிங்க..! ரயில் - விமானம், தண்ணீர் - மின்சாரம் எல்லாமே ஃப்ரீ..!
எம்.பி., சம்பளத்தை விடுங்க, சலுகைய கவனிங்க..! ரயில் - விமானம், தண்ணீர் - மின்சாரம் ஃப்ரீ
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

MK Stalin Plan : தள்ளிப்போன உதயநிதியின் பட்டாபிஷேகம்! ஸ்டாலின் பக்கா பிளான்Selvaperunthagai | ’’திமுக நிழலில் காங்கிரஸ்?’’என்ன பேசினார் செ.பெருந்தகை?BJP new president | BJP-க்கு இளம் தலைவர்? மோடி ட்விஸ்ட்!கதிகலங்கும் சீனியர்கள்!Senji Masthan Vs Ponmudi | செஞ்சி மஸ்தானுக்கு கல்தா! பொன்முடி HAPPY அண்ணாச்சி! அலறவிட்ட ஸ்டாலின்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Breaking News LIVE: பாஜக உட்கட்சி பூசல்.. தமிழிசையை அழைத்துப்பேசிய அமித்ஷா கண்டித்தாரா? வீடியோ வைரல்
Breaking News LIVE: பாஜக உட்கட்சி பூசல்.. தமிழிசையை அழைத்துப்பேசிய அமித்ஷா கண்டித்தாரா? வீடியோ வைரல்
Aadhaar Fraud Fact Check: தொட்டா போச்சு.. ஆதார் பெயரில் மோசடி முயற்சி.. மாட்டிக்காதீங்க மக்களே!
தொட்டா போச்சு.. ஆதார் பெயரில் மோசடி முயற்சி.. மாட்டிக்காதீங்க மக்களே!
Parliament Session: 18ஆவது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம்.. ஜூன் 24ஆம் தேதி கூடுகிறது!
24ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற கூட்டம்.. அசுர பலத்துடன் தயாராகும் எதிர்க்கட்சிகள்.. சமாளிக்குமா பாஜக அரசு?
MP Salary Benefits: எம்.பி., சம்பளத்தை விடுங்க, சலுகைய கவனிங்க..! ரயில் - விமானம், தண்ணீர் - மின்சாரம் எல்லாமே ஃப்ரீ..!
எம்.பி., சம்பளத்தை விடுங்க, சலுகைய கவனிங்க..! ரயில் - விமானம், தண்ணீர் - மின்சாரம் ஃப்ரீ
Stock Market Today: ஐ.டி. பங்குகள் உயர்வு;புதிய உச்சம் தொட்ட நிஃப்டி; இன்றைய பங்குச்சந்தை நிலவரம்!
ஐ.டி. பங்குகள் உயர்வு;புதிய உச்சம் தொட்ட நிஃப்டி; இன்றைய பங்குச்சந்தை நிலவரம்!
BJP TamilNadu : “இஷ்டத்திற்கு பேசக் கூடாது – தலைமைக்கு கட்டுப்படனும்” பாஜக மேலிடம் போட்ட உத்தரவு இதுதான்..!
BJP TamilNadu : “இஷ்டத்திற்கு பேசக் கூடாது – தலைமைக்கு கட்டுப்படனும்” பாஜக மேலிடம் போட்ட உத்தரவு இதுதான்..!
Latest Gold Silver Rate:மீண்டும் உயர்ந்த தங்கம் விலை;எவ்வளவு தெரியுமா?
Latest Gold Silver Rate:மீண்டும் உயர்ந்த தங்கம் விலை;எவ்வளவு தெரியுமா?
Chandrababu Naidu: ஆந்திர முதலமைச்சராக இன்று சந்திரபாபு நாயுடு பதவியேற்பு - பவன் கல்யாண் துணை முதலமைச்சர்?
ஆந்திர முதலமைச்சராக இன்று சந்திரபாபு நாயுடு பதவியேற்பு - பவன் கல்யாண் துணை முதலமைச்சர்?
Embed widget