தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆபத்தானவர் - விசிக தலைவர் திருமாவளவன் குற்றச்சாட்டு
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆபத்தானவர் என்று வி.சி.க தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆபத்தானவர் என்று வி.சி.க தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பல்வேறு நிகழ்சசிகளில் பங்கேற்பதற்காக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்தார். இந்த நிகழ்ச்சிகளுக்கு முன்பு நாகர்கோவிலில் அவர் நிருபர்களைச் சந்தித்தார்.

அப்போது, அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, " இலங்கை விவகாரத்தில் இந்தியா உதவி செய்கிறோம் என்ற பெயரில் இன்னொரு நாட்டு விவகாரத்தில் தலையீடு செய்ய பார்க்கிறார்கள். இதனை சிங்கள மக்களே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பிற நாடுகளின் உதவியுடன் ஆயுத படைகளை கொண்டு தமிழ் தேசிய போராட்டத்தை நசுக்கியவர் ராஜபக்சே. இந்தியாவில் இது போன்ற நிலை வந்து மக்கள் விரட்டியடிப்பதற்கு முன் பா.ஜ.க. தங்கள் போக்கை மாற்றி கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க : Pulitzer Prize Announcement: கொல்லப்பட்ட டேனிஷ் சித்திக்கி, காஷ்மீரி பெண் புகைப்பட செய்தியாளர் உட்பட இந்தியர்கள் 4 பேருக்கு புலிட்சர் விருது..
ஆளுநர் மிகவும் ஆபத்தானவர் பேசக்கூடாத்தை பேசுகிறார். அரசியல் பேசுகிறார், அரசியல்வாதியைப் போல் பேசுகிறார். அதனால் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் மிகவும் ஆபத்தானவர். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சிறுபான்மை மக்களை முன்னிறுத்தும் இயக்கம், மக்களுக்கு எதிராக இல்லை. ஆளுநர் ஆர்.எஸ்.எஸ்., தலைவரை போல் பேசியுள்ளார். ஆளுநர் பேச்சு அதிர்ச்சியளிக்கிறது" என்றார்.

பின்னர் இளையராஜா மீதான சர்ச்சை பேச்சு தொடர்பாக கீ.வீரமணி மீது தேசிய எஸ்.சி, எஸ்.டி. ஆணையம் வழக்கு பதிய உத்தரவிட்டுள்ளது குறித்த நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அந்த கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், இது பா.ஜ.க. செய்யும் அரசியல் சித்து விளையாட்டு.
தமிழக அரசியலில் இன்னும் பல அரசியல் சார்பற்றவர்களை சர்ச்சைக்குள்ளாக்குவது தான் அவர்களது திட்டம். அம்பேத்கர் குறித்து இளையராஜா எந்த உள்நோக்கத்துடனும் பேசவில்லை. சங்பரிவார், இளையராஜாவை துருப்புச்சீட்டாக பயன்படுத்துகிறார்கள் என்று கூறினார்.
மேலும் படிக்க : `இந்த பாசிஸ்ட்கள் என்னைக் கொலை செய்ய விரும்புகிறார்கள்!’ - ஜிக்னேஷ் மேவானி பேட்டி!
மேலும் படிக்க : OPS: ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல்! 2018ல் சொன்ன ஸ்டாலின்.. இன்று? - பெட்ரோல் விலை குறித்து ஓபிஎஸ் அறிக்கை!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Before You Go
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
ட்ரெண்டிங் செய்திகள்






















