(Source: Poll of Polls)
TN Fact Check: சாதிவாரி கணக்கெடுப்பில் பொய் பரப்பும் அன்புமணி.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்
TN Fact Check: சாதிவாரி கணக்கெடுப்பில் அன்புமணி ராமதாஸ் பொய் பரப்பி வருவதாக தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக, பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். பாமக தலைவரான அன்புமணி ராமதாஸ் தமிழ்நாடு அரசுக்கு சாதியவாரி கணக்கெடுப்பை நடத்த அதிகாரம் இருந்தும் திட்டமிட்டு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தாமல் தாமதப்படுத்தி வருவதாக குற்றம் சாட்டி வருகிறார்.
சாதிவாரிக் கணக்கெடுப்பு:
இந்த நிலையில், மதுரையில் 2வது முறையாக அந்த மாநில அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியுள்ளதாகவும், மாநில அரசுக்கு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த அதிகாரம் இல்லை என்று முதலமைச்சர் பொய் சொல்கிறார் என்றும் இன்று குற்றம் சாட்டினார்.
இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. அவர்கள் அளித்துள்ள எக்ஸ் பக்கத்தில், *கர்நாடகாவில் சாதிவாரி சென்சஸ் நடத்த அனுமதி - தமிழ்நாட்டில் அனுமதியில்லை என்று அன்புமணி பரப்பிய பொய்*
பரவும் செய்தி:
“கர்நாடகாவில் 2வது முறை சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தியுள்ளதாகவும், மாநில அரசுக்கு சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இல்லை என்று முதலமைச்சர் பொய் சொல்கிறார்.” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
*கர்நாடகாவில் சாதிவாரி சென்சஸ் நடத்த அனுமதி - தமிழ்நாட்டில் அனுமதியில்லை என்று அன்புமணி பரப்பிய பொய்*
— TN Fact Check (@tn_factcheck) October 6, 2025
பரவும் செய்தி
“கர்நாடகாவில் 2வது முறை சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தியுள்ளதாகவும், மாநில அரசுக்கு சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இல்லை என்று முதலமைச்சர் பொய்… https://t.co/Gu7Y09ykZH
உண்மை என்ன ?
இது முற்றிலும் தவறான தகவல்
கர்நாடகாவில் தற்போது நடத்தப்பட்டது சாதிவாரி சர்வே ஆகும். சாதிவாரி சென்சஸ் (கணக்கெடுப்பு) அல்ல. ஒன்றிய அரசால் மட்டுமே சாதிவாரி சென்சஸை நடத்த முடியும் என்று அரசியலமைப்பின் 7வது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாநில அரசுகள் 'சர்வே' நடத்த மட்டுமே அரசியலமைப்பு அனுமதித்துள்ளது.
இட ஒதுக்கீடு:
ஒன்றிய அரசு நடத்தும் சென்சஸை மட்டுமே இட ஒதுக்கீட்டுக்காகப் பயன்படுத்த முடியும். மாநில அரசுகள் நடத்தும் சர்வேவை பயன்படுத்த முடியாது. தமிழ்நாடு முதலமைச்சர் சட்டப்பேரவையில் கொண்டு வந்த தனித்தீர்மானத்திலும், 7வது அட்டவணையைச் சுட்டிக்காட்டி ஒன்றிய அரசால் நடத்தப்படும் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்புதான் சட்டப்படி நிலையானது என்று தெரிவித்தார்.
வதந்திகளை நம்பாதீர்!
இவ்வாறு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு சமூகத்தினர் எண்ணிக்கை, பொருளாதார நிலை உள்ளிட்ட பலவற்றை கருத்தில் கொண்டு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. சாதிவாரி கணக்கெடுப்பு முறைப்படி நடத்தப்பட்டால் இட ஒதுக்கீட்டில் அது எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாதிவாரி கணக்கெடுப்பை நடைமுறைப்படுத்துவதில் எந்த கட்சியாக இருந்தாலும் சில சிக்கல்கள் இருப்பதாக அரசியல் நிபுணர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.





















