மேலும் அறிய

TN BJP Clash: பார்சல் பண்ணத் துடிக்கும் சீனியர்ஸ்.. அடம் பிடிக்கும் அண்ணாமலை.. வெற்றி யாருக்கு.?

அண்ணாமலையை மேலிடத்திற்கு பார்சல் செய்துவிட்டு, மாநில அரசியலை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர பாஜக சீனியர்ஸ் முயன்று வருவதாகவும், அண்ணாமலையின் பிளான் வேறு விதமாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

பாஜக மாநில தலைவராக இருக்கும் அண்ணாமலைக்கு, மத்திய அமைச்சர் பதவியை கொடுத்து, அவரை மாநில அரசியலில் இருந்து ஓரங்கட்டுவதற்கான வேலைகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இதன் பின்னணியில் பாஜக சீனியர்களின் ஸ்கெட்ச் இருப்பதாக கூறப்படும் நிலையில், மாநில அரசியலை விட்டு போக மாட்டேன் என அண்ணாமலை அடம்பிடித்து வருவதாக சொல்கின்றனர்.

அண்ணாமலையை மாற்ற பாஜக சீனியர்ஸ் ஸ்கெட்ச்

2026 சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பக்கம் அதிமுகவை இழுக்கும் முயற்சியில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், கூட்டணிக்கு முட்டுக்கட்டையாக இருப்பதாக அண்ணாமலை தான் என கூறப்படுகிறது. பாஜக உடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்றால், அண்ணாமலை தமிழக மாநிலத் தலைவராக இருக்கக் கூடாது என்றும், அவரை நீக்கிவிட்டு, தங்களுடன் இணக்கமாக இருக்கும் ஒரு நபரைத் தான் பாஜக தலைவராக நியமிக்க வேண்டும் என்றும் அதிமுக கண்டிஷன் போட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படி, கூட்டணிக் கணக்கை கருத்தில் கொண்டு, தற்போது பாஜக தமிழக தலைவராக இருக்கும் அண்ணாமலையை நீக்கிவிட்டு, அதிமுகவுடன் இணக்கமான போக்கை கடைபிடிக்கும் நயினார் நாகேந்திரனை பாஜக தலைவராக நியமிக்க டெல்லி தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, தலைவருக்கான ரேஸில் கருப்பு முருகானந்தமும் குதித்த நிலையில், அவர் மீது 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதால், தலைமை யோசித்து வருவதாகவும், அதனால் நயினாருக்கே வாய்ப்புகள் அதிகம் என்றும் தெரிகிறது. இதற்கிடையே, அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பொறுப்பையும் வழங்க பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளதாக பேச்சு அடிபடுகிறது. இந்த சம்பவங்களுக்குப் பின்னணியில் பாஜக தமிழக சீனியர்களின் ஸ்கெட்ச் இருப்பதாக சொல்கின்றனர்.

சீனியர்களுக்கு கைகொடுக்கும் அதிமுக கூட்டணி விவகாரம்

அண்ணாமலை மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டதிலிருந்து, சீனியர் தலைவர்களான தமிழிசை சவுந்தரராஜன், பொன் ராதகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோரை ஓரம் கட்டிவிட்டு, தமிழகத்தில் பாஜகவை தன்னுடைய முழு கட்டுப்பாட்டில் அவர் கொண்டுவந்ததால், அவர்கள் கடுப்பில் இருந்ததாக கூறப்பட்டது. இதனால், சீனியர்கள் பேச்சை கேட்காமல் தன்னிச்சையாக செயல்படும் அண்ணாமலையை ஓரம்கட்டுவதற்காக, அவரது செயல்பாடுகள் குறித்து டெல்லி தலைமையின் காதுகளுக்கும் அவர்கள் புகாரை கொண்டு சென்றதாக தெரிகிறது.

இந்த நேரத்தில் அதிமுக கூட்டணி விவகாரம் பாஜக சீனியர்களுக்கு பெரும் ப்ளஸ்ஸாக அமைந்துள்ளது. இந்த விவகாரத்தை வைத்து, அண்ணாமலையிடம் இருந்து மாநில தலைவர் பதவியை பிடுங்கிவிட்டு, தேசிய அரசியல் பக்கம் அவரை திருப்பிவிட்டால், தமிழக சட்டப்பேரவை தேர்தலின்போது தங்களுடைய பேச்சு தான் எடுபடும் எனத சீனியர்கள் கணக்கு போட்டுள்ளனர். அதேபோல், 2026 தேர்தலை குறிவைத்து, தமிழ்நாட்டில் இருந்து ஒருவருக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்தால், அது தேர்தல் நேரத்தில் கைகொடுக்கும் என்ற எண்ணமும் பாஜக தலைமைக்கு இருப்பதாக தெரிகிறது. 

மேலிடத்தில் அடம்பிடித்துவரும் அண்ணாமலை.?

ஆனால், மாநில அரசியல் தான் எனக்கு வேண்டும் என அண்ணாமலை அடம்பிடித்து வருவதாகவும், 2026 தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று கேட்டு, டெல்லி தலைமையிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மற்றொரு பக்கம் அண்ணாமலையை மாநில அரசியிலில் இருந்து ஓரம் கட்டினால்தான், தங்கள் அரசியல் வாழ்க்கைக்கு நல்லது என்று நினைத்து, சீனியர்கள் உள்ளடி வேலைகளை பார்த்து வருவதாக கூறுகின்றனர். இதனால், தமிழகத்தில் பாஜகவினர் இரண்டு தரப்பாக மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் வெற்றி யாருக்கு என்பது, வரும் 9-ம் தேதி டெல்லியில் நடைபெறும் பாஜக கூட்டத்தில் தெரிந்துவிடும் என கூறப்படுகிறது. அதுவரை பொறுத்திருப்போம்...

தலைப்பு செய்திகள்

திமுகவுக்கு கெட்அவுட்.. தவெகவுக்கு கட் அவுட்... விஜய்யுடன் கரம்கோர்க்கும் திருமாவளவன் - அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அதிர்ந்த மாநாடு
திமுகவுக்கு கெட்அவுட்.. தவெகவுக்கு கட் அவுட்... விஜய்யுடன் கரம்கோர்க்கும் திருமாவளவன் - அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அதிர்ந்த மாநாடு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Mahindra Thar Record Sales: விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
Embed widget