மேலும் அறிய

TN Assembly: கலைஞரும் பாஜக-வும்.. வானதி Vs செல்வப்பெருந்தகை Vs துரைமுருகன்!

110 விதியின் கீழ் பேசிய முதலமைச்சர், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து நினைவுகளை பகிர்ந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின், கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றார்.

கடந்த மாதம் 18-ஆம் தேதி கூடிய தமிழக சட்டப்பேரவை நிகழ்வின்போது, 2022-2023ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். தொடர்ந்து 19-ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தொடர்ந்து 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை பட்ஜெட் மீது விவாதம் நடைபெற்று பேரவை கூட்டம் முடிவடைந்தது. இந்நிலையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் கடந்த 6-ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மானியக்கோரிக்கை மீது இன்று விவாதம் நடைபெற்றது. அப்போது, 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து நினைவுகளை பகிர்ந்துகொண்ட ஸ்டாலின், கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றார்.

இந்நிலையில், சட்டப்பேரவையில் பேசிய பாஜகவின் வானதி சீனிவாசன், ”கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழகத்தில் காங்கிரஸூக்கு மாற்றாக தேசிய அளவிலே எந்தவொரு கட்சிகளும் அரசாங்கத்தை ஐந்தாண்டுகள் முழுமையாக நடத்திவிட முடியாது என்கின்ற கருத்தியில் இருந்த காலகட்டத்தில்,  ஐந்தாண்டுகாலம் மறைந்த பாரத பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கு உறுதுணையாக இருந்து, கமலாலய தலைவர்களோடு கூட்டணி வைத்து, அத்தனை தலைவர்களையும் அரவணைத்து அந்த ஆட்சியை ஐந்தாண்டுகாலம் வெற்றிகரமாக நடத்திச் செல்ல உறுதுணையாக இருந்த தலைவர் கலைஞர், அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாத போதும், பிரதமர் அவர்கள் நேரடியாக வந்து கோபாலபுரத்தில் பார்த்ததும், அதே போல கலைஞரின் அரசியல் ஆளுமை காரணமாக நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இல்லாதபோதும், பாஜக தலைமையிலான மத்திய அரசு அந்த நாடாளுமன்றத்தை ஒத்திவைத்து மரியாதை செய்ததும் அரசின் மாண்பின் வழியாக இதைப்பார்த்து வரவேற்கிறோம்” என தெரிவித்திருக்கிறார்.

தொடர்ந்து பேசிய காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, “பிரதமர் மோடி மட்டும் கோபாலபுரத்திற்கு வரவில்லை. யாரெல்லாம் பிரதமராக இருந்தார்களோ அவர்களெல்லாம் கோபாலபுரத்திற்கு வந்து பேசி உள்ளனர். மன்மோகன் சிங் வந்திருக்கிறார், வருங்கால பிரதமர் வந்து வாழ்த்து பெற்று சென்றிருக்கிறார். பெருமைக்குரிய தலைவருக்குத்தான் விழா எடுக்கிறோம். காங்கிரஸ் இதை வரவேற்கிறது” என தெரிவித்திருக்கிறார்.

வீடியோவைக் காண:

இப்படி மாறி மாறி கருத்துகள் வெளியாகி வந்த நிலையில், அமைச்சர் துரைமுருகன் பேசினார். அவர் பேசும்போது, “ஒரு ப்ரோகிராம் போட்டு, அதற்குள் வாஜ்பாயை வரவைத்துதான் இவர் நகர்கிறார். இது ஒப்புக்கொள்ள வேண்டிய விஷயம். எந்நிலையிலும், தன்நிலையை இழக்காத மாபெரும் தலைவர் கலைஞர்” என பேசினார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

த.வெ.க., ஆட்சியில் இனி லஞ்சம் வாங்கவோ ,கை நீட்டவோ பயப்படனும் - கார்த்திகேயன் எம்.எல்.ஏ., பேச்சு !
த.வெ.க., ஆட்சியில் இனி லஞ்சம் வாங்கவோ ,கை நீட்டவோ பயப்படனும் - கார்த்திகேயன் எம்.எல்.ஏ., பேச்சு !
Jana Nayagan: எச்.வினோத் கேள்விக்கு
Jana Nayagan: எச்.வினோத் கேள்விக்கு "பதில் சொல்லுங்கள் ஃப்ராடுகளே.." கரூர் விவகாரத்தில் தவெக கேள்வி!
NEET: நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்; நாளை தாக்கல் செய்யப்பட உள்ள சட்டத்திருத்த மசோதா - என்ன இருக்கிறது?
NEET: நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்; நாளை தாக்கல் செய்யப்பட உள்ள சட்டத்திருத்த மசோதா - என்ன இருக்கிறது?
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
டேங்கை நிரப்பினா 497 கி.மீட்டர் மைலேஜ்.. TVS Apache RTR 160 4V பைக் வாங்கலாமா?
டேங்கை நிரப்பினா 497 கி.மீட்டர் மைலேஜ்.. TVS Apache RTR 160 4V பைக் வாங்கலாமா?
Iran Vs Trump: ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
EPS ADMK : அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
Embed widget