அமைச்சரவையை அவமானப்படுத்தும் செயலாக ஆளுநரின் செயல்பாடு உள்ளது- பாலகிருஷ்ணன், சி.பி.எம்
பாஜக அண்ணாமலை எப்படி ரபேல் கைக்கடிகாரம் வாங்கினேன்னு சொல்லமுடியாமல் தமிழக அரசு துறைகளில் ஊழல் செய்வதால் வளர்ச்சி பாதிக்கப்படுவதாக கூறுவதில் அவருக்கு எந்த தகுதியும் இல்லை-பாலகிருஷ்ணன்
விழுப்புரம்: சட்ப்பேரவையில் ஆளுநரின் செயல்பாட்டில் தமிழக முதலமைச்சரின் நடவடிக்கை கூட்டாட்சியின் தத்துவத்தினை பாதுகாக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும்,தமிழக ஆளுநரை கண்டித்து 20 ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெறுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறுகையில்.... தமிழக ஆளுநரை வெளியேற்ற வலியுறுத்தி வருகின்ற 20 ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளதாகவும், ஏற்கனவே கடந்த பல மாதங்களாக ஆளுநர் தமிழக மக்களுக்கும், உணர்வுகளுக்கும் கூட்டாட்சி தத்துவத்திற்கு விரோதமாகவும்,அரசியல் சாசனத்திற்கு எதிராக பல கருத்துக்களை தெரிவித்து மாநில அரசை கொச்சைப்படுத்தும் செயலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார். அதனை தொடர்ந்து பேசிய அவர் இந்து திணிப்பு உள்ளிட்ட பல்வேறு விரோத கருத்துக்களை ஆளுநர் தெரிவித்துவரும் அவர் ஆர்எஸ்எஸ் சின் அடிமட்ட தொண்டரை போல செயல்பட்டு அரசியல் நாகரிகம் பண்பாடு இல்லாமல் சட்டமன்றத்தில் நடந்து கொண்டுள்ளதாக கூறினார். இந்தியாவில் எந்த ஆளுநரும் செயல்பட்டிராத வகையில் இன்று ஆளுநர் சட்டமன்றத்தில்
அறிக்கையை முழுமையாக படிக்காமல் தமிழ்நாடு என்று படிக்காமல் தமிழகம் என்று படித்து அரசு தயாரித்த முழுமையாக அறிக்கையை படிக்காமல் சென்றுள்ளார். மாநில சுயாட்சி, கூட்டாட்சி கோட்பாட்டிற்கு எதிராக ஆளுநர் செயல்படுவதாகவும், ஆளுநரின் பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கபடுவதே இதுவே முதல்முறை என்றும் அமைச்சரவையை அவமானப்படுத்தும் செயலாக ஆளுநரின் செயல்பாடு உள்ளதாக தெரிவித்தார். ஆளுநரின் இன்று நடந்து கொண்ட செயல்பாட்டில் முதலமைச்சரின் நடவடிக்கை கூட்டாட்சியின் தத்துவத்தினை பாதுகாக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் எதிர்கட்சி தலைவராக இருந்து கொண்டு எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை கண்டிக்க மறுத்து பாஜகவின் மத்திய அரசின் கொத்தடிமையாக எடப்பாடி பழனிசாமி உள்ளார் என்பதை இதில் காட்டுவதாக தெரிவித்தார். ஊழல் எல்லா இடத்திலையும் நடைபெறுகிறது திமுக ஊழல் செய்தால் கண்டிப்பாக கூட்டணி கட்சியாக உள்ள நாங்கள் எதிர்ப்போம் என்றும் பாஜக அண்ணாமலை எப்படி ரபேல் கைக்கடிகாரம் வாங்கினேனு சொல்லமுடியாமல் தமிழக அரசு துறைகளில் ஊழல் செய்வதால் வளர்ச்சி பாதிக்கப்படுவதாக கூறுவதில் அவருக்கு எந்த தகுதியும் இல்லை,தமிழ்நாட்டில் நாங்கள் தான் மக்கள் பிரச்சனையை பேசுகிறோம் என அண்ணாமலை பேசி வருவதாக தெரிவித்தார்.
மேலும் தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவதாக தேர்தல் அறிக்கையில் அறிவித்ததை நிறைவேற்றினால் நல்லதாக இருக்கும், மேலும், நெய்வேலி என்.எல்.சி. நிர்வாகம், தனது 3-வது சுரங்கப்பணிக்காக நிலம் கையகப்படுத்த உள்ளவர்களை அழைத்து பேச வேண்டும். அவர்களுக்கு உரிய இழப்பீடு, பணி வழங்குதல் போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். என்.எல்.சி. நிர்வாகத்தின் கடந்தகால மோசமான அணுகுமுறையால் தற்போது நிலம் கொடுக்க தயங்குகிறார்கள். ஆகவே வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிவிட்டு நிலத்தை கையகப்படுத்த வேண்டும் என பாலகிருஷ்ணன் கூறினார்