மேலும் அறிய

“துரோகிகள் திருந்த வேண்டும்; அப்போதான்...” - ஓபிஎஸ்க்கு பச்சை கொடி காட்டிய டிடிவி தினகரன்

அனைவரும் இணக்கமாக செயல்பட வேண்டும் என்ற ஓபிஎஸ் கருத்தை வரவேற்பதாக அமமுக தலைவர் டிடிவி தினகரன் தஞ்சையில் பேட்டியளித்துள்ளார்.

அனைவரும் இணக்கமாக செயல்பட வேண்டும் என்ற ஓபிஎஸ் கருத்தை வரவேற்பதாக அமமுக தலைவர் டிடிவி தினகரன் தஞ்சையில் பேட்டியளித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், ”துரோகிகள், துரோக சிந்தனை கொண்டவர்கள் திருந்தினால்தான் மற்றவர்களின் எண்ணங்கள் நிறைவேறும்” என்றார். 

ஓ. பன்னீர் செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கில் கடந்த 17 ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது.

இந்த தீர்ப்பின்படி, அ.தி.மு.க.வில் ஜூன் 23-ந் தேதி இருந்த நிலையே நீடிக்கும் என்று அறிவித்துள்ளது. அ.தி.மு.க.வின் செயற்குழு கூட்டம், பொதுக்குழு கூட்டம் எதுவும் தனித்தனியாக நடத்தப்படக்கூடாது என்றும், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் பொதுக்குழு கூட்டத்தை கூட்ட வேண்டும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. மேலும், நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் பொதுக்குழுவை கூட்ட ஒரு ஆணையரை நியமிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், ஜூலை 11-ந் தேதி எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இது எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. இதன்மூலம், கடந்த 11-ந் தேதி பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட அனைத்து முக்கிய முடிவுகளும் தானாகவே ரத்தாகிவிட்டது.

இதனால், கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட பதவிகள் தானாகவே ரத்தாகிவிட்டது. இதன்மூலம், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன் எம்.பி. ரவீந்திரநாத் மற்றும் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் நீக்கப்பட்டது அனைத்தும் தானாகவே செல்லாத நிலைக்கு வந்துவிட்டது.

இந்த தீர்ப்புக்கு பின் ஓபிஎஸ் மெரினாவில் உள்ள அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர்,

அதிமுக நிறுவன தலைவர் எம்.ஜி ஆர்  , ஜெயலலிதா , ஆன்மாக்களுக்கு மரியாதை செலுத்தினேன் இந்த வெற்றி ஒன்றரை கோடி தொண்டர்களுக்கு கிடைத்த வெற்றி கட்சியின் நிறுவனரான எம் ஜி ஆர் அவர்கள இந்த இயக்கத்தை தொண்டர் இயக்கமாக மாற்றினார் அவருக்கு பின் ஜெயலலிதா அவர்கள் இந்த தொண்டர்கள் இயக்கத்தை யாராலும் வெல்ல முடியாத இயக்கமாக மாற்றினார்.

உயர் நீதிமன்ற தீர்ப்பின் மூலம் கிடைத்த இந்த வெற்றியை ஒன்றரை கோடி தொண்டர்களுக்கு காணிக்கையாக்குகிறேன். கடந்த சில மாதங்கள் அசாதாரணமான சூழலிருந்து சென்னை உயர்நீதிமன்றம் டெல்லி உச்ச நீதிமன்ற அறிவுறுதலோடு இந்த வழக்கில் தீர்ப்பை வழங்கி உள்ளது.

பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானம் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கி உள்ளது. தொண்டர்கள் இயக்கத்தை யார் பிளவு படுத்த நினைத்தாலும் நடக்காது. கடந்த அர் ஜூன் மாதம் 22 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் யார் யார் என்னென்ன பதவியில் இருந்தார்களோ அவர்கள் அதே பதவியில் தொடர்வதாக தெரிவித்தார்.

பொதுக்குழுவில் தன்னை பல பேர் அவமதித்தாலும் ஒரு தலைமை பொறுப்பில் இருக்கக்கூடியவர்கள் இத்தகைய அவமானங்களை எல்லாம் கருத்தில் கொள்ள கூடாது என அண்ணா தெரிவித்துள்ளதாக கூறினார். பொதுக்குழு நடத்த வேண்டுமா என்பது குறித்து அவசியம் ஏற்பட்டால் கலந்து பேசி முடிவெடுக்கப்படும் என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: குவிக்கப்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் - வேலூரில் பரபரப்பு
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: குவிக்கப்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் - வேலூரில் பரபரப்பு
மக்களே மறந்து போன மதகஜராஜா! 12 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் - என்னய்யா சொல்றீங்க?
மக்களே மறந்து போன மதகஜராஜா! 12 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் - என்னய்யா சொல்றீங்க?
ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்
ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஹெல்மெட் போட்டா தங்க காசு! NEW YEAR சர்ப்ரைஸ்! துள்ளிக் குதித்த வாகன ஓட்டிகள்Zomato Search in 2024 | ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato |‘’முகுந்தனுக்கு பதவி உறுதி!’’  அடித்து சொன்ன ராமதாஸ்   அதிர்ச்சியில் பாமகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: குவிக்கப்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் - வேலூரில் பரபரப்பு
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: குவிக்கப்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் - வேலூரில் பரபரப்பு
மக்களே மறந்து போன மதகஜராஜா! 12 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் - என்னய்யா சொல்றீங்க?
மக்களே மறந்து போன மதகஜராஜா! 12 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் - என்னய்யா சொல்றீங்க?
ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்
ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
Watch  video: அதே ஆள்.. அதே பந்து..  ஸ்லிப்பில் மீண்டும் அவுட்டான கோலி!
Watch video: அதே ஆள்.. அதே பந்து.. ஸ்லிப்பில் மீண்டும் அவுட்டான கோலி!
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
Tamilnadu Roundup: பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்! துரைமுருகன் வீட்டில் ரெய்டு - தமிழ்நாட்டில் 10 மணி வரை!
Tamilnadu Roundup: பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்! துரைமுருகன் வீட்டில் ரெய்டு - தமிழ்நாட்டில் 10 மணி வரை!
Embed widget