மேலும் அறிய

Tasmac: பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டு தலங்களுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடைகள் அகற்றப்படும் - அமைச்சர் செந்தில்பாலாஜி

கோடைகாலத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கவும், தமிழகத்தில் உள்ள மொத்த டாஸ்மாக் கடைகளில் 11 சதவீதம் கடைகளை மூடவும் அரசு நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.

கோடைகாலத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் உள்ள மொத்த டாஸ்மாக் கடைகளில் 11 சதவீதம் கடைகளை மூட அரசு நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக கரூரில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி அளித்துள்ளார். 

Tasmac: பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டு தலங்களுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடைகள் அகற்றப்படும் - அமைச்சர் செந்தில்பாலாஜி

10 கோடி மதிப்பில் நலத்திட்ட பணிகள்:

கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு மற்றும் மேற்கு ஊராட்சிகளுக்கு உட்பட்ட சின்ன ஆண்டாங்கோவில், பெரிய ஆண்டாங்கோவில் உள்ளிட்ட 43 இடங்களில் சாலைகள் அமைத்தல், கழிவு நீர் சாக்கடை அமைத்தல், குடிநீர் தொட்டி, ஆழ்துளை மற்றும் தொட்டி அமைத்தல் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். 10 கோடியே 55 லட்சம் மதிப்பிலான திட்டப்பணிகளை அந்தந்த இடங்களுக்கு நேரில் சென்று தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிகளில் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tasmac: பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டு தலங்களுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடைகள் அகற்றப்படும் - அமைச்சர் செந்தில்பாலாஜி

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது,

500 டாஸ்மாக் கடைகள் குறைக்கப்படும் என்ற அறிவிப்பின் வாயிலாக பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டு தளங்களுக்கு அருகில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றுவதற்கு துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே 96 கடைகள் குறைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கிட்டதட்ட 600 கடைகள் மூடப்படும். இது மொத்தமுள்ள கடைகளில் 11% ஆகும். புதிதாக டாஸ்மாக் கடைகளை திறப்பது இல்லை. இடமாற்றம் செய்யப்படும் கடைகளை புதிய கடைகள் திறப்பதாக தவறாக புரிந்து கொள்கின்றனர்.

அச்சம் வேண்டாம்:

கோடைகாலத்தில் மின் தடை ஏற்படாத வண்ணம் சீரான மின்விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. மின் துறை சார்பாக புகார்கள் ஏதும் இருப்பின் மின்னகம் சேவை மைய எண்ணுக்கு அழைத்து புகார் தெரிவித்தால் உடனடியாக சரி செய்யப்படும். 3 மாதத்திற்கு தேவையான மின்சாரம் தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரம் பெற்றால் 1312 கோடி ரூபாய் தமிழக அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டிருக்கும், முன்னேற்பாடாக டெண்டர் போடப்பட்டதால் தனியாரிடமிருந்து பெறும் போது விலை குறைவாக கிடைக்கிறது. 

Tasmac: பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டு தலங்களுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடைகள் அகற்றப்படும் - அமைச்சர் செந்தில்பாலாஜி

காற்றாலை மின்சாரம் இன்னும் ஒரு சில வாரங்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோடை காலத்தில் சீராக மின்சாரம் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மின்சாரம் கைவசம் கூடுதலாகவே கையிருப்பில் இருக்கிறது என்றார்.

அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.

கரூர் தான்தோன்றி மலையில் மாநகரத்திற்கு பகுதி அதிமுக சார்பில் செயலாளர் ஜெயராஜ் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் வரும் லோக்சபா தேர்தலுக்காக பூத் கமிட்டி உறுப்பினர்களை நியமிப்பது புதிய உறுப்பினர்களை சேர்ப்பது திமுக அரசின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை பொதுமக்கள் மத்தியில் கொண்டு சென்று பிரச்சாரம் செய்வது குறித்து மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசினார்.  மாநில பொதுக்குழு உறுப்பினர் பசுவை சிவசாமி, கரூர் மாநகர மேற்கு பகுதி செயலாளர் சக்திவேல் உள்பட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் ஒன்றிய செயலாளர் இளங்கோமரன் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் கண்ணதாசன் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
Marudhu Alaguraj : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay on TN Assembly : ஆளுநருக்கு கண்டனம்!அதிமுகவுக்கு SUPPORT.. ஆட்டம் காட்டும் விஜய்RN Ravi Walkout : RN ரவியும்.. சட்டப்பேரவையும்அன்றும்... இன்றும் ஸ்டாலின் செய்த சம்பவம் TN AssemblyP Shanmugam CPI (M) History : வாச்சாத்தி போராளி! மாணவன் To தலைவன்! யார் இந்த பெ.சண்முகம்?RN Ravi Walkout : ஆளுநர் ரவி வெளிநடப்பு!’’தேசிய கீதம் அவமதிப்பு’’ உரையை வாசிக்காத ஆளுநர் : TN Assembly

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
Marudhu Alaguraj : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
TN Assembly Session LIVE: ஆளுநர் உரை புறக்கணிப்பு; ஆர்.என்.ரவியின் செயல் சிறுபிள்ளைத் தனமானது - மு.க.ஸ்டாலின் கண்டனம்
TN Assembly Session LIVE: ஆளுநர் உரை புறக்கணிப்பு; ஆர்.என்.ரவியின் செயல் சிறுபிள்ளைத் தனமானது - மு.க.ஸ்டாலின் கண்டனம்
வசூலில்  கலக்கும் டொவினோ தாமஸ் நடித்த IDENTITY..இந்த ஆண்டும் மலையாள சினிமாதான்
வசூலில் கலக்கும் டொவினோ தாமஸ் நடித்த IDENTITY..இந்த ஆண்டும் மலையாள சினிமாதான்
Embed widget