மேலும் அறிய
Minister Durai Murugan: 'காவிரி நீர் விவகாரத்தில் ஓரிரு நாட்களில் முடிவு எடுக்கப்படும்..' நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தகவல்!
மணிப்பூர் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி வாய் திறந்ததோடு மட்டும் இல்லாமல் விரைவில் நடவடிக்கை எடுத்து அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசினார்.

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்
டெல்லியில் நேற்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்த தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.
அமைச்சர் துரைமுருகன் பேட்டி
சென்னை : தமிழ்நாட்டிற்கு மாதந்தோறும் குறிப்பிட்ட அளவு தண்ணீரை வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது ஆனால் அந்த அளவிற்கு நீர் திறக்கப்படவில்லை. ஜூன் மாதத்தை பொருத்தவரை 26 டிஎம்சி நீர் வழங்க வேண்டும். ஆனால் மூன்று டிஎன்சி நீரை மட்டுமே திறந்து விடப்பட்டது. அதனுடைய விளைவு எவ்வளவுதான் தண்ணி குறைத்து மேனேஜ் செய்தாலும், 20 நாள் மட்டுமே பயிர்களுக்கு தண்ணீர் வழங்க முடியும். எனவே, இதை முன் குற்றிய உணர்ந்துதான், கடந்த ஐந்தாம் தேதியே டெல்லி சென்று ஒன்றிய நீர்வளத் துறை அமைச்சரை சந்தித்து காவிரி மேலாண்மை ஆணைக்கு உத்தரவிடுங்கள் என்று கேட்டுக் கொண்டேன். தண்ணீரை சரியாக காவிரியில் விடவில்லை என்றால் அல்லது இரண்டு மாநிலங்களிலும் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதனால் கூட அதனை எப்படி பங்கிட்டு கொள்வது என காவேரி மேலாண்மை ஆணையம் முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளது. இந்த அதிகாரத்தை சரியாக பயன்படுத்த உத்தரவிடுங்கள் என கூறுவதற்கு தான் கடந்த ஐந்தாம் தேதி டெல்லி சென்று மத்திய நீர்வளத் துறை அமைச்சரை சந்தித்தோம்.
காவிரி மேலாண்மை ஆணையம்
இதற்காகத்தான் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதி கொடுத்தார். அதனை எடுத்துக் கொண்டு நேற்று மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து கடிதத்தையும் கொடுத்து சூழ்நிலை விளக்கினை அவரும் புரிந்துகொண்டு. இரண்டு ,ஒரு நாட்களில் காவிரி மேலாண்மை ஆணைய அதிகாரிகளை கூப்பிட்டு இருக்கக்கூடிய நீரை எப்படி பங்கிட்டு வழங்க வேண்டும் அதனை விரைவில் வழங்குங்கள் நான் உத்தரவிடுகிறேன் என தெரிவித்தார் எனவே அதை நம்பிக்கையோடு வந்திருக்கிறேன் அந்த நம்பிக்கையை செயல்படுத்தினால் தஞ்சை போன்ற பகுதிகளில் பயிர்களை காப்பாற்றப்படும்.
மணிப்பூர் கலவரம் தொடர்பான கேள்விக்கு? அமைச்சர் பதில்:
பிரதமர் மோடி வாய் திறந்ததோடு இல்லாமல் விரைவில் நடவடிக்கை எடுத்து அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.மணிப்பூர் கலவரம் தொடர்பாக பிரதமர் தற்போது தான் வாய் திறந்து இருக்கிறார் மணிப்பூர் கலவரம் கடந்த 10 நாட்கள் நடந்து வருகிறது. மணிப்பூரும் பெரிய மாநிலம் அல்ல சின்ன மாநிலம் தான் அதனை முன்கூட்டியே அறிந்து சரி செய்து இருக்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
தமிழ்நாடு
ஆட்டோ
Advertisement
Advertisement