மேலும் அறிய

‛மின்தடையில் தவிக்கும் மக்கள்..காய்கறிகள் விலை ஏற்றம்..ரூ.5 ஆயிரம் நிவாரணம் கேட்கும் ஓபிஎஸ்

‛2015 ஆம் ஆண்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் நிவாரணமாக அவர்களது வங்கிக் கணக்கில் 5,000 ரூபாய் செலுத்தியவர் அம்மா...’ -ஓபிஎஸ்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை அப்படியே... 

அண்மையில் பெய்த கனமழை காரணமாக, சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் பெரும்பாலான தெருக்களில் மழைநீர் தேங்கி, அங்குள்ள வீடுகளில் மழைநீர் புகுந்ததன் விளைவாக ஏழை எளிய மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில், காய்கறிகளின் காய்கறிகளின் விலைகள் உச்சத்திற்கு சென்றிருப்பதும், மின்சாரம் இல்லாமல் இருப்பதும். மின்சாரக் கட்டணம் செலுத்த வேண்டியதற்கான காலம் நெருங்குவதும் அவர்களை மேலும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்ப்பதன் காரணமாக, சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காய்கறிகளின் விலை விஷம் போல் உயர்ந்துள்ளது. தீபாவளி தினத்தன்று 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி இன்று 100 ரூபாய், 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும், கேரட் கிலோ 100 ரூபாய்க்கும், பீன்ஸ் கிலோ 90 ரூபாய்க்கும், கத்தரிக்காய் கிலோ 85 ரூபாய்க்கும், குடமிளகாய் கிலோ 150 ரூபாய்க்கும், வெங்காயம் கிலோ 70 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாகவும், இதன் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. இந்தச் சூழ்நிலையில் காய்கறிகளை மலிவு விலையில் விற்பனை செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மாநில அரசு எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே உள்ளது.

‛மின்தடையில் தவிக்கும் மக்கள்..காய்கறிகள் விலை ஏற்றம்..ரூ.5 ஆயிரம் நிவாரணம் கேட்கும் ஓபிஎஸ்

இது ஒரு புறமிருக்க, தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் கனமழை காரணமாக சென்னைக்கு திரும்ப முடியாத சூழ்நிலையில் இருப்பதால், அவர்கள் இந்த மாதத்திற்கான மின் கட்டணத்தை செலுத்த இயலாத நிலையில் இருப்பதாகவும்; இங்குள்ளவர்கள் கனமழை காரணமாக வீட்டில் தேங்கியுள்ள நீரை வெளியேற்றுவதிலும், இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் சென்னையில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை இருக்கும் என்று கணித்துள்ள நிலையில் அதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதிலும் சென்னை வாழ் மக்கள் தங்கள் கவனத்தை செலுத்திக் கொண்டிருப்பதாலும், சாலைகளில் நீர் தேங்கி இருப்பதன் காரணமாக அவர்களால் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை உள்ளதாலும் இந்த மாதம் கட்ட வேண்டிய மின் கட்டணத்தை செலுத்த கூடுதல் அவகாசம் வழங்க வேண்டுமென்ற கோரிக்கை மின் பயனீட்டாளர்களிடையே வலுத்து வருகிறது. இதுமட்டுமின்றி மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும், சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் இரண்டு மூன்று நாட்கள் கழித்து சென்னைக்கு திரும்புமாறு வேண்டுகோளும் விடுத்துள்ளார். எனவே, இந்த மாதம் மின் கட்டணத்தை செலுத்துவதற்கு கூடுதல் அவகாசம் தேவை என்ற கோரிக்கையில் நியாயம் உள்ளதாகவே நான் கருதுகிறேன்.

‛மின்தடையில் தவிக்கும் மக்கள்..காய்கறிகள் விலை ஏற்றம்..ரூ.5 ஆயிரம் நிவாரணம் கேட்கும் ஓபிஎஸ்

மேலும், கனமழை காரணமாக தெருக்களில் தண்ணீர் தேங்கியதன் காரணமாகவும், வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததன் காரணமாகவும், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பெரம்பூர், வில்லிவாக்கம், கே.கே. நகர்,, அசோக் நகர், மேற்கு மாம்பலம், தியாகராய நகர், வேளச்சேரி, பள்ளிக்கரணை போன்ற பகுதிகளில் பாதுகாப்பு காரணமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டாலும், சில இடங்களில் மழைநீர் வடிந்தும் மின் இணைப்பு

அளிக்கப்படவில்லை என்றும், இரண்டு, மூன்று நாட்களாக மின்சாரம் இன்றி பொதுமக்கள் அவதிப்படுவதாகவும் தகவல்கள் வருகின்றன. இரண்டு, மூன்று நாட்கள் மின்சாரமின்றி இருப்பது என்பது மிகுந்த சிரமம். இதுவும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

இதுபோன்ற இயற்கை சீற்றங்களின் போது மக்களுக்கு மலிவு விலையில் காய்கறிகள் கிடைக்கவும், மின்சாரக் கட்டணம் செலுத்துவதற்கு கால அவகாசம் வழங்கவும், மழைநீர் வடிந்த இடங்களில் மின் இணைப்பை விரைந்து அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டியது மாநில அரசின் கடமையாகும். இதுமட்டுமல்லாமல், வீடுகளில் தண்ணீர் புகுந்ததன் காரணமாக பாதிப்பு அடைந்தவர்களுக்கு நிவாரணம் அளிப்பதும் அரசின் தலையாய கடமைகளில் ஒன்று. 2015 ஆம் ஆண்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் நிவாரணமாக அவர்களது வங்கிக் கணக்கில் 5,000 ரூபாய் செலுத்தியவர் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் என்பதை இந்தத் தருணத்தில் நினைவூட்ட விரும்புகிறேன்.

எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் தனிக் கவனம் செலுத்தி, கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் காய்கறிகளை மலிவு விலையில் எழை எளிய மக்களுக்கு வழங்கவும், மின்சாரக் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை இந்த மாத இறுதி வரை நீட்டிக்கவும், வெள்ளம் வடிந்த பகுதிகளில் மின் இணைப்பை விரைந்து அளிக்கவும், இவை எல்லாவற்றிற்கும் மேலாக, வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் நிவாரணமாக 20,000 ரூபாய் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

 “பிரபஞ்சம் இருக்கும் வரை... இதில்தான் கேப்டனின் ஆன்மா சந்தோஷமடையும்” - மனம் உருகி பேசிய பிரேமலதா விஜயகாந்த்
 “பிரபஞ்சம் இருக்கும் வரை... இதில்தான் கேப்டனின் ஆன்மா சந்தோஷமடையும்” - மனம் உருகி பேசிய பிரேமலதா விஜயகாந்த்
பெற்றோர் அச்சமடைய வேண்டாம்: அண்ணா பல்கலை நிர்வாகத்துக்கு ஆளுநர் போட்ட முக்கிய உத்தரவு!
பெற்றோர் அச்சமடைய வேண்டாம்: அண்ணா பல்கலை நிர்வாகத்துக்கு ஆளுநர் போட்ட முக்கிய உத்தரவு!
TNPSC Free coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி?
TNPSC Free coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி?
குடி குடியை கெடுக்குமா? அதுனால என்ன பயன்? - கடிந்து கொண்ட நீதிமன்றம் - என்ன நடந்தது?
குடி குடியை கெடுக்குமா? அதுனால என்ன பயன்? - கடிந்து கொண்ட நீதிமன்றம் - என்ன நடந்தது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
 “பிரபஞ்சம் இருக்கும் வரை... இதில்தான் கேப்டனின் ஆன்மா சந்தோஷமடையும்” - மனம் உருகி பேசிய பிரேமலதா விஜயகாந்த்
 “பிரபஞ்சம் இருக்கும் வரை... இதில்தான் கேப்டனின் ஆன்மா சந்தோஷமடையும்” - மனம் உருகி பேசிய பிரேமலதா விஜயகாந்த்
பெற்றோர் அச்சமடைய வேண்டாம்: அண்ணா பல்கலை நிர்வாகத்துக்கு ஆளுநர் போட்ட முக்கிய உத்தரவு!
பெற்றோர் அச்சமடைய வேண்டாம்: அண்ணா பல்கலை நிர்வாகத்துக்கு ஆளுநர் போட்ட முக்கிய உத்தரவு!
TNPSC Free coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி?
TNPSC Free coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி?
குடி குடியை கெடுக்குமா? அதுனால என்ன பயன்? - கடிந்து கொண்ட நீதிமன்றம் - என்ன நடந்தது?
குடி குடியை கெடுக்குமா? அதுனால என்ன பயன்? - கடிந்து கொண்ட நீதிமன்றம் - என்ன நடந்தது?
Chennai Rain: சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா.! வானிலை மையம் தெரிவித்தது என்ன?
Chennai Rain: சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா.! வானிலை மையம் தெரிவித்தது என்ன?
உடைகிறது பாமக? மேடையில் மோதிக்கொண்ட தந்தை - மகன்!  காரணமான முகுந்தன் யார்?
உடைகிறது பாமக? மேடையில் மோதிக்கொண்ட தந்தை - மகன்!  காரணமான முகுந்தன் யார்?
PMK Meeting: மேடையிலேயே வாக்குவாதம்.. அன்புமணி-ராமதாஸ் மோதல்! பரபரப்பில் பாமக!
PMK Meeting: மேடையிலேயே வாக்குவாதம்.. அன்புமணி-ராமதாஸ் மோதல்! பரபரப்பில் பாமக!
Anna University Issue: அண்ணா பல்கலை. மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு; கல்வி கட்டணமில்லை- நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Anna University Issue: அண்ணா பல்கலை. மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு; கல்வி கட்டணமில்லை- நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Embed widget