நீட் தேர்வு விலக்கு, கல்வி கொள்கை... பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சந்திப்பு..!
செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்ற பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.
செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்ற பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் நேற்று மாலை சென்னையிலிருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். இன்று காலை அவர் குடியரசு தலைவர், குடியரசு துணைத் தலைவரை நேரில் சந்தித்ததை தொடர்ந்து பிரதமர் மோடியை தற்போது சந்தித்தார்.
முதலில் செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்ற பிரதமர் மோடியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த மு.க ஸ்டாலின், நீட் விலக்கு, காவிரி, புதிய கல்வி கொள்கை, மேகதாது விவகாரம் தொடர்பாக பேசியுள்ளார். மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட, தற்போது மத்திய அரசிடம் நிலுவையில் உள்ள நீட் தேர்வுக்கு எதிரான மசோதா போன்ற மசோதாக்களுக்கு ஒப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய பட்டியலையும் பிரதமர் மோடியிடம் ஸ்டாலின் வழங்கினார்.
மேலும், கச்சத்தீவு இலங்கையிடம் இருந்து மீட்பது, தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை மீட்டெடுத்தல், தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வு மைய திட்டத்தை கைவிட வேண்டும், தேசிய கல்விக் கொள்கை, காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகாவின் மேகதாது அணை திட்டத்துக்கு மாநில அரசின் எதிர்ப்பு போன்றவற்றை பற்றியும் பேசியுள்ளார்.
View this post on Instagram
முன்னதாக குடியரசு தலைவர், குடியரசு துணைத் தலைவர் பதவியேற்ற பிறகு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களை சந்திக்க வருவது இதுவே முதல் முறை. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், “நான் அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்தேன். தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தாலும், சூழ்நிலை காரணமாக முர்மு மற்றும் தங்கரின் பதவியேற்பு விழாவில் தன்னால் பங்கேற்க முடியவில்லை.
குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் உடனான சந்திப்பு திருப்திகரமாக இருந்ததாகவும் ஸ்டாலின் தெரிவித்தார். மேலும், மத்திய அரசிடம் நிலுவையில் உள்ள தமிழகத்தின் நீட் எதிர்ப்பு மசோதா, தேசிய கல்விக் கொள்கை 2020, மின்சாரச் சட்டம் (திருத்தம்) மசோதா, காவிரி நதிநீர் பிரச்னை மற்றும் கர்நாடகாவின் மேகதாது அணை விவகாரம் குறித்து பேசியதாகவும், மாநிலத்துக்குத் தேவையான திட்டங்களைப் பெறுவதற்காகவே தனது டெல்லி பயணம் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்