மேலும் அறிய

Tamil Nadu BJP Meeting : ‘2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு இப்போதே தயாராகும் அண்ணாமலை’ விரைவில் வெளியாகிறது தமிழக பாஜகவின் புதிய நிர்வாகிகள் பட்டியல்..!

’2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பழைய நிர்வாகிகளை வைத்து ‘பல்லக்கு’ தூக்க முடியாது என்பதை உணர்ந்த அண்ணாமலை, அதிரடி மாற்றங்களை அறிவிக்க முடிவெடுத்திருக்கிறார்’

தமிழ்நாடு பாஜகவின் மாநிலத் தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டது முதலே கட்சியை மற்ற தலைவர்கள் இங்கு வளர்த்தெடுத்ததை காட்டிலும் பெரிய அளவில் மக்கள் மத்தியில் கொண்டுச் சேர்க்க வேண்டும், கட்சியின் செல்வாக்கை உயர்த்த வேண்டும், அதோடு தேர்தலில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க வேண்டும் என்ற திட்டத்துடன் செயல்பட்டு வருகிறார்.

Tamil Nadu BJP Meeting : ‘2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு இப்போதே தயாராகும் அண்ணாமலை’ விரைவில் வெளியாகிறது தமிழக பாஜகவின் புதிய நிர்வாகிகள் பட்டியல்..!
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

தமிழக பாஜகவில் பல்வேறு சீனியர்கள் இருந்தாலும் அவர்களுக்கெல்லாம் கிடைக்காத மாநிலத் தலைவர் பதவி அண்ணாமலைக்கு கிடைந்த நிலையில், அதிருப்தியில் இருந்த அவர்கள் அத்தனை பேரவையும் தற்போது தனது ஆதரவாளர்களாக மாற்றிக்கொண்டு ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து ஒரிஜினல் அரசியல்வாதியாக தேர்தல் களத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறார் அண்ணாமலை.Tamil Nadu BJP Meeting : ‘2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு இப்போதே தயாராகும் அண்ணாமலை’ விரைவில் வெளியாகிறது தமிழக பாஜகவின் புதிய நிர்வாகிகள் பட்டியல்..!

ஏற்கனவே நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்து போட்டியிட வேண்டும் என்ற துணிகர முடிவை எடுத்து அதில் உறுதியாக நின்றது, ஆளுங்கட்சி திமுகவிற்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக முன்னெடுக்க தயங்கும் அல்லது காலதாமதாக்கும் விஷயங்களுக்கு உடனடியாக ரியாக்ட் செய்வது, அறிக்கை விடுவது, ஆர்ப்பாட்டம் நடத்துவது என அதிரடி அரசியல் செய்து ஊடகங்களில் தினந்தோறும் பேசுபொறுளாவது என அதிரடி ஆக்‌ஷனில் இறங்கியிருக்கும் அண்ணாமலை, அதே பாணியில் தனது கட்சி கட்டமைப்பிலும் சில உறுதியான முடிவுகளை எடுத்து செயல்படுத்த முனைந்துள்ளார்.Tamil Nadu BJP Meeting : ‘2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு இப்போதே தயாராகும் அண்ணாமலை’ விரைவில் வெளியாகிறது தமிழக பாஜகவின் புதிய நிர்வாகிகள் பட்டியல்..!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் மட்டும் ஆக்டிவ் அரசியல் செய்தால் தமிழ்நாட்டில் பாஜகவின் ஜம்பம் எடுபாடாது என்பதை தெள்ளத் தெளிவாக உணர்ந்துவைத்துள்ள அண்ணாமலை, எதையும் ‘பிளான் பண்ணாம செய்யக் கூடாது’ என்பதையும் தெரிந்து வைத்துள்ளார். அதன்விளைவாக, 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு தமிழ்நாடு பாஜகவை தயார் செய்யும் விதமாக இப்போது நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளார்.Tamil Nadu BJP Meeting : ‘2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு இப்போதே தயாராகும் அண்ணாமலை’ விரைவில் வெளியாகிறது தமிழக பாஜகவின் புதிய நிர்வாகிகள் பட்டியல்..!

இது தொடர்பாக, கடந்த 23ஆம் தேதி டெல்லிக்கு சென்ற அண்ணாமலை, பாஜகவின் தேசிய தலைவர்கள், மத்திய அமைச்சர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி, தனது பரிந்துரைகளுக்கு அனுமதியும் பெற்று வந்திருக்கிறார். இதன் மூலம் விரைவில் தமிழ்நாடு பாஜகவில் அதிரடியாக நிர்வாகிகள் மாற்றம் நடைபெறவுள்ளது.

அண்ணாமலை தலைவராக பொறுப்பேற்ற பிறகே கட்சியில் நிர்வாகிகள் மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தல், நகர்புற உள்ளாட்சி தேர்தல் என அடுத்தடுத்து தேர்தல்கள் வந்ததால் பழைய நிர்வாகிகள் அப்படியே தொடர்ந்தனர். ஆனால், வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பழைய நிர்வாகிகளை வைத்துக்கொண்டு ‘பல்லக்கு’ தூக்க முடியாது என்பதால், துடிப்புள்ள, களத்திற்கு சென்று பணியாற்றும் ஆர்வமுள்ள புதிய நிர்வாகிகளை நியமிக்க அண்ணாமலை முடிவு செய்துள்ளார்.Tamil Nadu BJP Meeting : ‘2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு இப்போதே தயாராகும் அண்ணாமலை’ விரைவில் வெளியாகிறது தமிழக பாஜகவின் புதிய நிர்வாகிகள் பட்டியல்..!

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் சரியாக பணி செய்யாத 9 மாவட்ட பாஜக தலைவர்களை மாற்றி அமைத்து, அவர்களுக்கு பதிலாக புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை பாஜக மாநில மையய குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் பாஜக தமிழ்நாடு பொறுப்பாளர் சிடி ரவி, மாநில தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், சிபி ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட குழுவின் முக்கியமான உறுப்பினர்கள் பங்கேற்கவுள்ளனர்.Tamil Nadu BJP Meeting : ‘2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு இப்போதே தயாராகும் அண்ணாமலை’ விரைவில் வெளியாகிறது தமிழக பாஜகவின் புதிய நிர்வாகிகள் பட்டியல்..!

இந்த கூட்டத்தின் ஆலோசனைக்கு பிறகு புதிய மாநில நிர்வாகிகள் அறிவிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. அதேபோல், மாவட்ட தலைவர்களும், அணிகளின் பிரிவு தலைவர்களும் மாற்றம் செய்யப்படவுள்ளனர்.

I am a seasoned journalist with over 12 years of experience across the visual and digital media landscape. Throughout my career, I have taken up diverse editorial responsibilities—from content writing and ticker management to heading desk and assignment operations. My on-ground reporting includes in-depth coverage of political, cultural, and social affairs. I have had the opportunity to interview several influential figures from politics, arts, and public life. Known for delivering impactful exclusives, I was one of the first to break major stories like the TNPSC scam, cementing my commitment to responsible and fearless journalism.

Read More

தலைப்பு செய்திகள்

CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
நடிகர் தனுஷின் திடீர் அரசியல் நகர்வு! பின்னணியில் நடப்பது என்ன? உளவுத்துறைக்கு பறந்த அவசர உத்தரவு!
நடிகர் தனுஷின் திடீர் அரசியல் நகர்வு! பின்னணியில் நடப்பது என்ன? உளவுத்துறைக்கு அவசர உத்தரவு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
Free Wi-Fi scheme : இலவசமாக WiFi.! மெரினா, பெசன்ட் நகர் பீச் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.! இணைப்பை பெறுவது எப்படி.?
இலவசமாக WiFi.! மெரினா, பெசன்ட் நகர் பீச் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.! இணைப்பை பெறுவது எப்படி.?
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Embed widget