ஸ்டாலின் இதை முதல்ல செய்யுங்க... ஜி.கே. வாசனிடம் இருந்து வந்த முக்கிய அறிக்கை என்ன ?
Gk Vasan: போதைப்பொருள் சாக்லேட் கட்டியானது ரூ.5,000 முதல் 10,000 வரை விற்கப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழக அரசு, மாநிலம் முழுவதும் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு போதைப்பொருள் விற்பனையை முழுமையாக தடுக்க வேண்டும் தமிழகத்தில் போதைப்பொருள் இல்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது : தமிழக அரசு, மாநிலத்தில் போதைப்பொருள் விற்பனைக்கு இடம் இல்லை என்ற நிலையை ஏற்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் போதைப்பொருள் கலந்த சாக்லேட், மாத்திரை, மருந்துகள், கஞ்சா ஆயில் விற்பனை செய்யப்படுகின்றன.
போதைப்பொருள் சாக்லேட்
சில மாணவர்கள், சில இளைஞர்கள் கஞ்சா உள்ளிட்ட போதை மாத்திரைகளை கவலைக்குரியது. பயன்படுத்துவதும், விற்பனையில் ஈடுபடுவதும் தற்போது போதைப்பொருள் விற்பனை அதிகமாகி, போதைப் பழக்கத்திற்கு மாணவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் அடிமையாகி உடல் ரீதியாக, மனம் ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள். போதைப்பொருள் சாக்லேட் கட்டியானது ரூ.5,000 முதல் 10,000 வரை விற்கப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
உயர்ரக போதைப்பொருள்கள்
டாஸ்மாக் கடைகளின் மூலம் கிடைக்கும் மதுபானங்கள் உள்ளிட்ட சாதாரண போதைப்பொருளே உடல் நலனுக்கு கேடு ஏற்படுத்தும் போது உயர்ரக போதைப்பொருள்கள் புழக்கத்தில் இருப்பது மக்களுக்கும், மாநிலத்திற்கும் பேரிழப்பை ஏற்படுத்தும். தமிழக அரசு போதைப்பொருளால் ஏற்படும் விளைவுகளை மக்களிடம் விழிப்புணர்வு மூலம் தெரியப்படுத்த, போதைப்பொருள் விற்பனையை, கடத்தலை முற்றிலும் தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போதைப்பொருள் கலாச்சாரம்
அண்டை மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்படும் போதை மருந்துகளை கண்டு பிடிக்க, தடுக்க கண்காணிப்பு நடவடிக்கைகள் அவசியம் தேவை. அவ்வப்போது போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வந்தாலும் தொடர்ந்து போதைப்பொருள் கலாச்சாரம் நீடிக்கிறது, அதிகரிக்கிறது.
மாணவர்களும், இளைஞர்களும், பெரியவர்களும் போதைப்பொருளால் ஏற்படும் உடல்நலப் பாதிப்பை கவனத்தில் கொண்டு போதைப்பொருளுக்கு எதிரானப் போக்கை கடைபிடிக்க வேண்டும். எனவே தமிழகத்தில் போதைப்பொருள் கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவர இக்கால மாணவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் உள்ளிட்ட வருங்கால சந்ததியினரையும் பாதுகாக்க தமிழக அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.