மேலும் அறிய

"விஜய் எனக்கு நல்ல நண்பர் தான்" - அதிமுக மேடையில் வெடித்த அரசியல்...

எம்.ஜி.ஆர் நடிகராக இருந்ததால் முதல்வர் ஆகவில்லை, நல்லவர் என்பதால் மக்கள் தேர்ந்தெடுத்தனர். விஜயை சீண்டிய அதிமுக முன்னாள் அமைச்சர்...

எம்.ஜி.ஆர் நடிகராக இருந்ததால் தமிழக முதல்வராக  ஆகவில்லை, நல்லவர் என்பதால் மக்கள் அவர்களை தேர்ந்தெடுதனர் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை, தொண்டாமுத்தூர் பகுதியில் நடைபெற்ற அ.தி.மு.க முப்பெரும் விழாவில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் தி.மு.க அரசுக்கு எதிராக உரையை நிகழ்த்தினார். 

குறிப்பாக, கரூரில் நடைபெற்ற கட்சியின் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தை முன்வைத்து கேள்வி எழுப்பினார். “கட்சியை யார் வேண்டுமானாலும் ஆதரிக்கலாம், அதற்கு உரிமை இருக்கிறது. ஆனால் மக்களுக்காகப் போராட வேண்டும்” என்று  எஸ்.பி.வேலுமணி, தெரிவித்தார். “எம்.ஜி.ஆர் நடிகராக இருந்ததால் முதல்வர் ஆகவில்லை, நல்லவர் என்பதால் மக்கள் அவரைத் தேடி வந்தனர்” எனப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், “கரூரில் த.வெ.க கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்தனர். பலர் உயிருக்குக் காப்பற்றக் கோரிப் போராடி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், அங்குப் பேசிக் கொண்டு இருந்தவர், பின்னால் இறங்கி நேராக கரூர் விமான நிலையத்திற்குச் சென்று விட்டார். சினிமாவில் கேமரா முன்பு நடித்து விட்டுச் செல்வது போல இதுவும் ஆகிவிட்டது” என விஜய்யை நேரடியாக தாக்கினார்.

விஜய் எனக்கு நல்ல நண்பர்

விஜய் குறித்துத் தனிப்பட்ட முறையில் பேசிய வேலுமணி, “விஜய் எனக்கு நல்ல நண்பர் தான். ஒரு படத்தின் வெளியீட்டுச் சிக்கலின் போது நான் தான் அவரை எனது காரில் அழைத்துச் சென்று எடப்பாடியாரிடம் பேச வைத்தேன். அதன் பிறகு தான் அந்தப் படம் தீபாவளிக்கு வெளியானது. நட்பு என்பது வேறு, ஆனால் 41 பேர் உயிரிழந்த போது அவர்களைப் பார்க்காமல் விட்டு, விட்டுச் சென்றவரை எப்படித் தலைவனாக ஏற்க முடியும் ?” என கேள்வி முன் வைத்தார்.

 “கொரோனா உச்சத்தில் இருந்தபோது எடப்பாடியார் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரில் சென்றார். நான் அமைச்சராக இருந்த போது கொடிசியாவில் படுக்கை வசதிகள் செய்தோம், ஆக்சிஜன் சிலிண்டர்கள் கொண்டு வந்து உயிர்களைக் காப்பாற்றினோம். ஜாதி, மத வேறுபாடின்றி ஒவ்வொரு வீட்டிற்கும் உணவுப் பொருட்களைக் கொண்டு சேர்த்தோம். ஒரு மகனாக, தந்தையாக, சகோதரனாக அந்தப் பணியைச் செய்தோம். ஆனால் தன் கட்சிக்காரர்களே உயிருக்குத் துடிக்கும் போது விட்டுச் செல்பவர் வந்தால் நாளை நாடு எப்படி இருக்கும்?” எனச் சிந்திக்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டார்.

இறுதியாக, “அ.தி.மு.க வைத் தவிர வேறு யாருக்கு வாக்களித்தாலும் அது தி.மு.க விற்கே வாய்ப்பாகிவிடும். தி.மு.க எவ்வளவு ? மோசமாக இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். எனவே, இரட்டை இலை சின்னத்திற்கும், கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் வாக்களித்துத் தமிழகத்தில் மாற்றத்தை உருவாக்க வேண்டும்” எனத் தொண்டாமுத்தூர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

இந்திரப் பெருவிழா: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் படைசூழ தேரை வடம் பிடித்து இழுத்த துர்கா ஸ்டாலின்!
இந்திரப் பெருவிழா: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் படைசூழ தேரை வடம் பிடித்து இழுத்த துர்கா ஸ்டாலின்!
OPS: நேத்து வந்த ஓ.பி.எஸ்.க்கு MLA சீட்டா? மன உளைச்சலில் தேனி மாவட்ட திமுக!
OPS: நேத்து வந்த ஓ.பி.எஸ்.க்கு MLA சீட்டா? மன உளைச்சலில் தேனி மாவட்ட திமுக!
விஜய் அதிரடி வாக்குறுதிகள்! மகளிர் தினத்தில் வெளியான 12 முக்கிய அறிவிப்புகள்! முழு விவரம் என்ன?
விஜய் அதிரடி வாக்குறுதிகள்! மகளிர் தினத்தில் வெளியான 12 முக்கிய அறிவிப்புகள்! முழு விவரம் என்ன?
விஜய் அதிரடி அறிவிப்பு! குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2500, இலவச சிலிண்டர்கள் & மேலும் பல!
விஜய் அதிரடி அறிவிப்பு! குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2500, இலவச சிலிண்டர்கள் & மேலும் பல!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Udhayanidhi Stalin | ’’ஐயா உதவி பண்ணுங்க’’காலில் விழுந்த மூதாட்டி பதறிய உதயநிதி | Tenkasi
Bangalore Dog Issue | சிறுநீர் கழித்த வளர்ப்பு நாய்வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் சரமாரி தாக்குதல்!
Ameer slams Vijay | ’’மனைவி மகளை விரட்டிட்டுமகளிர் தின விழா கேக்குதா?’’விஜய்யை கிழித்த அமீர் | TVK
Kiruthiga Udhayanidhi | ”பிரச்சனைல மாட்டிக்காதீங்க”விஜய்க்கு மறைமுக ADVICE?கிருத்திகா உதயநிதி அதிரடி
Vijay Sangeetha Divorce | PRESS MEET-க்கு ரெடி!அதிரடி காட்டும் சங்கீதா இறங்கி வந்த விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs NZ T20 WC Final: டி20 உலகக் கோப்பை; சாதிப்பார்களா சூர்யா பாய்ஸ்.?! இரு பெரும் சாதனைகளை படைக்க வாய்ப்பு...
டி20 உலகக் கோப்பை; சாதிப்பார்களா சூர்யா பாய்ஸ்.?! இரு பெரும் சாதனைகளை படைக்க வாய்ப்பு...
ICAI CA 2026: ஆடிட்டர் ஆகலாம்.. வெளியான சிஏ தேர்வு முடிவுகள்: இன்ட்டர், பவுண்டேஷன் முடிவுகளை உடனே அறிவது எப்படி?
ICAI CA 2026: ஆடிட்டர் ஆகலாம்.. வெளியான சிஏ தேர்வு முடிவுகள்: இன்ட்டர், பவுண்டேஷன் முடிவுகளை உடனே அறிவது எப்படி?
அதிமுக பிரமுகர் காரை ஏற்றி கொலை முயற்சி! பரபரப்பு சம்பவம், காரணம் என்ன? போலீசார் விசாரணை
அதிமுக பிரமுகர் காரை ஏற்றி கொலை முயற்சி! பரபரப்பு சம்பவம், காரணம் என்ன? போலீசார் விசாரணை
Iran Attack Arab Nations: அண்டை நாடுகள தொடர்ந்து அடிப்போம்; ஈரான் நீதித்துறை தலைவர் அதிரடி; அப்போ மன்னிப்பு கேட்டது..?!
அண்டை நாடுகள தொடர்ந்து அடிப்போம்; ஈரான் நீதித்துறை தலைவர் அதிரடி; அப்போ மன்னிப்பு கேட்டது..?!
TAPS: ’’இன்னும் அமலாகாத புது ஓய்வூதிய திட்டம்: திமுகவின் ஏமாற்று வேலை’’- அன்புமணி ஆத்திரம்!
TAPS: ’’இன்னும் அமலாகாத புது ஓய்வூதிய திட்டம்: திமுகவின் ஏமாற்று வேலை’’- அன்புமணி ஆத்திரம்!
TVK Vijay: அவ்வளவு ஒர்த் இல்ல.. சங்கீதாவை சொன்னாரா விஜய்? - உண்மையில் நடந்தது என்ன?
TVK Vijay: அவ்வளவு ஒர்த் இல்ல.. சங்கீதாவை சொன்னாரா விஜய்? - உண்மையில் நடந்தது என்ன?
குடியரசுத்தலைவரை மதிக்காத அரசு.. டென்ஷனான பிரதமர் மோடி - பதிலடி கொடுத்த மம்தா!
குடியரசுத்தலைவரை மதிக்காத அரசு.. டென்ஷனான பிரதமர் மோடி - பதிலடி கொடுத்த மம்தா!
வாக்குறுதி நல்லாருக்கு.. ஆட்சிக்கு வருவாரா விஜய்? - வானதி சீனிவாசன் கொடுத்த பதில்!
வாக்குறுதி நல்லாருக்கு.. ஆட்சிக்கு வருவாரா விஜய்? - வானதி சீனிவாசன் கொடுத்த பதில்!
Embed widget