மேலும் அறிய

ADMK MLA Joins TVK: உடையும் அதிமுக... 3 எம்.எல்.ஏ-க்கள் திடீர் ராஜினாமா.. அசுர வளர்ச்சி அடையும் தவெக

ADMK MLA Joins TVK: எஸ்.பி.வேலுமணி தரப்பு எம்.எல்.ஏ-க்கள் 3 பேர் தங்களின் பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகரிடம் கடிதத்தை  வழங்கியவுடன் தவெகவில் இணைந்தனர்

அதிமுக எஸ்.பி வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூன்று ராஜினாமா செய்த நிலையில் உடனடியாக தவெகவில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை  ஏற்ப்படுத்தியுள்ளது. 

இரண்டாக உடைந்த அதிமுக

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு அதிமுக இபிஎஸ்-எஸ்.பி வேலுமணி தரப்பு என இரண்டாக பிரிந்தது அதிமுக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியது. அதன் பின்னர் தவெக ஆட்சியமைக்க சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில்  எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உட்பட 25 எம்.எல்.ஏ-க்கள் தவெக-வுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.அதனால், எஸ்.பி.வேலுமணி தரப்பினருக்கு தவெக அமைச்சர் பதவிகளை தரப்போவதாக தகவல்கள் வெளியாகின. 

மறுபக்கம், எடப்பாடி பழனிசாமியும் எஸ்.பி.வேலுமணி தரப்பினரை கட்சிப் பொறுப்புகளிலிருந்து நீக்கினார். பின்னர், தவெக அமைச்சரவை விரிவாக்கத்தில் எஸ்.பி.வேலுமணி தரப்புக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்த நிலையில், எஸ்.பி.வேலுமணி தரப்பு எம்.எல்.ஏ-க்கள் 3 பேர் தங்களின் பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகரிடம் கடிதத்தை  வழங்கினார்.  

இதையும் படிஙக்: ADMK MLA Resign: அதிர்ச்சி! அதிமுக எம்எல்ஏ-க்கள் 3 பேர் திடீர் ராஜினாமா - யார்? யார்?

தவெகவில் இணைந்தனர்: 

இந்த 3 எம்எல்ஏ-க்களும் தங்களது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையில் நேரில் சந்தித்து அளித்தனர். அவர்களது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்றுக்கொண்டார். 

அதிமுக-வில் நடந்து வரும் சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி மற்றும் எடப்பாடி பழனிசாமி மோதல் காரணமாக தங்களது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்ற காரணத்தால் இவர்கள் தற்போது தங்களது எம்எல்ஏ-க்கள் பதவியை ராஜினாமா செய்து தவெக-வில் ஐக்கியமாகியுள்ளனர். 

இணைந்தது யார் யார்? 

மதுராந்தகம் எம்எல்ஏ-வாக இருந்த மரகதம் குமரவேல் தவெக வேட்பாளர் எழில் கேத்ரின் எழில்மலையை காட்டிலும் 7 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். தாராபுரம் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த சத்யபாமா திமுக வேட்பாளர் இந்திராணியைக் காட்டிலும் 16 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெருந்துறை எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த ஜெயக்குமார் திமுக வேட்பாளர் வெங்கடாச்சலத்தைக் காட்டிலும் 10 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

இணைந்து பயணிப்போம்:

தவெகவில் இணைந்த முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்களிடம் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, ஒரு குடும்பமாக தவெகவில் இணைந்து பயணிக்கலாம் என்று கூறியுள்ளார். மேலும் இணைந்துள்ள மூவருக்கும் இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கபடலாம் என்று கூறப்படுகிறது.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Embed widget