மேலும் அறிய

வார்த்தைப்போரில் செந்தில் பாலாஜி, அண்ணாமலை.. தொடரும் உஷ்ணம்.. என்ன காரணம்?

தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜியும் பாஜக தலைவர் அண்ணாமலையும் வார்த்தைப் போரில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால், கொங்கு மண்டலம் கொழுந்துவிட்டு எரிகிறது.

தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜியும் பாஜக தலைவர் அண்ணாமலையும் வார்த்தைப் போரில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால், கொங்கு மண்டலம் கொழுந்துவிட்டு எரிகிறது. இதற்கு என்ன காரணம் என்று விசாரித்தோம். 

அமைச்சர் செந்தில் பாலாஜி மின்சாரத் துறையில் ஊழலை மேற்கொண்டதாக அண்ணாமலை கடந்த சில மாதங்களுக்கு முன்னால் குற்றம் சாட்டியிருந்தார். அதற்கு செந்தில் பாலாஜியும் கடுமையான வார்த்தைகளால் பதில் கூறியிருந்தார். இதனால் அப்போதே ட்விட்டரில் வார்த்தைப் போர் வெடித்தது. 

இந்த சூழலில், மதுரையில் அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை, ”தமிழக மின்சார வாரியத்தின் ரூ.4,442 கோடி மதிப்பிலான மின் திட்ட ஒப்பந்தம், அனைத்து விதிகளையும் மீறி பி.ஜி.ஆர். என்னும் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில்பாலாஜி பிஜிஆர் நிறுவனத்தின் ஊழியர் போல் பேசுகிறார். பிஜிஆர் நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கியது தொடர்பாக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்.

ஊழல் செய்ய ஆரம்பிக்கும் போது அதை தட்டிக்கேட்டால் சிறைக்கு அனுப்புவோம் என்றால் தயவு செய்து அனுப்புங்கள். சந்தோஷமாக சிறைக்கு சென்று, திரும்பி வந்ததும் திமுக அரசின் ஒவ்வொரு ஊழல்களையும் வெளிப்படுத்துவேன். திமுக மட்டும் ஆட்சியில் இல்லை. பாஜகவும் ஆட்சியில் உள்ளது என்பதையும் திமுகவுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று காட்டமாக விமர்சித்தார்.

இதற்கு டிவிட்டரில் பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, ”பி.ஜி.ஆர். நிறுவனம் டெண்டர் எடுத்த ஆண்டு 2019. டெண்டர் கொடுத்த ஆட்சி அதிமுக. 

வாழ்ந்த 13700+  சொச்ச நாட்களில் 20000 புத்தகம் வாசித்திருக்கும் அதிமேதாவி ஆர்வக்கோளாறுகளுக்கு புரிதல் வேண்டும் அல்லது புரிந்துகொள்ளப் பக்குவம் வேண்டும். அரைவேக்காடுகளுக்கு இரண்டும் இல்லை” என்று பதிலடி கொடுத்திருந்தார். 


வார்த்தைப்போரில் செந்தில் பாலாஜி, அண்ணாமலை.. தொடரும் உஷ்ணம்.. என்ன காரணம்?

இந்த சூழலில், ஒரே ஊரைச் சேர்ந்த (கரூர்), ஒரே சமூகத்தைச் சேர்ந்த (கவுண்டர்) இரண்டு பெரும் கட்சிகளைச் சேர்ந்த செந்தில் பாலாஜியும் அண்ணாமலையும் எலியும் பூனையுமாக இருப்பது ஏன் என்பது குறித்து கேள்வி எழுந்தது. 

இதுகுறித்து பாஜக தரப்பில் விசாரித்தபோது, ''திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு நெருக்கமானவராக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வலம் வருகிறார். செந்தில் பாலாஜி அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. அதேபோல தற்போது மின்சார வாரியத்தில் ஊழல் நடைபெறுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 

இதை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள பாஜக தலைமை திட்டமிட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் காய் நகர்த்தி, அவர் மூலம் திமுக ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டு வருகிறது. இதற்காக ஒரே ஊர்க்காரரான அண்ணாமலை மற்ற அமைச்சர்களை எல்லாம் விட்டுவிட்டு செந்தில் பாலாஜியைக் குறிவைத்துள்ளார்'' என்று கூறினர். 

எது எப்படியோ, இரு கட்சிகளுக்கு இடையேயான போக்கால் கொங்கு மண்டலம் கொழுந்து விட்டு எரிகிறது.

தலைப்பு செய்திகள்

CM Vijay Karur Visit: முதலமைச்சர் விஜயின் இன்றைய கரூர் விசிட் - எங்கு தொடங்கி எங்கு முடியும்? - முழு பயண விவரம்
முதலமைச்சர் விஜயின் இன்றைய கரூர் விசிட் - எங்கு தொடங்கி எங்கு முடியும்? - முழு பயண விவரம்
பள்ளிக்கரணையைச் சூறையாடத் துடிப்பதா? - ரியல் எஸ்டேட் லாபிக்கு இரையாக வேண்டாம் ; தமிழக அரசுக்கு அன்புமணி எச்சரிக்கை!
பள்ளிக்கரணையைச் சூறையாடத் துடிப்பதா? - ரியல் எஸ்டேட் லாபிக்கு இரையாக வேண்டாம் ; தமிழக அரசுக்கு அன்புமணி எச்சரிக்கை!
அரசு வேலை கொடுக்க கூடாது.! அறிவிப்பை நிறுத்துங்க- சிஎம் விஜய்யை நெருக்கும் சிபிஎம்
அரசு வேலை கொடுக்க கூடாது.! அறிவிப்பை நிறுத்துங்க- சிஎம் விஜய்யை நெருக்கும் சிபிஎம்
திண்டிவனம் அதிமுக கூட்டத்தில் சலசலப்பு: சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் வெளிநடப்பு!
திண்டிவனம் அதிமுக கூட்டத்தில் சலசலப்பு: சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் வெளிநடப்பு!

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GK Vasan: விஜயை எதிர்க்கும் அரசியல் கட்சிகள்.. சப்போர்ட் செய்த ஜி.கே.வாசன்.. தவெக கூட்டணிக்கு சிக்னலா?
GK Vasan: விஜயை எதிர்க்கும் அரசியல் கட்சிகள்.. சப்போர்ட் செய்த ஜி.கே.வாசன்.. தவெக கூட்டணிக்கு சிக்னலா?
CM Vijay Karur Visit: முதலமைச்சர் விஜயின் இன்றைய கரூர் விசிட் - எங்கு தொடங்கி எங்கு முடியும்? - முழு பயண விவரம்
முதலமைச்சர் விஜயின் இன்றைய கரூர் விசிட் - எங்கு தொடங்கி எங்கு முடியும்? - முழு பயண விவரம்
JanaNayagan: CM விஜயின் ஜனநாயகன் படத்திற்கு 12 கன்டிஷன்கள் - சென்சார் குழு போட்ட ரூல்ஸ் என்ன? - முழு லிஸ்ட்
CM விஜயின் ஜனநாயகன் படத்திற்கு 12 கன்டிஷன்கள் - சென்சார் குழு போட்ட ரூல்ஸ் என்ன? - முழு லிஸ்ட்
Chezhiyan: காலையிலேயே அதிர்ச்சி.. தேசிய விருது பெற்ற இளம் இயக்குநர் மரணம்.. என்ன ஆச்சு?
Chezhiyan: காலையிலேயே அதிர்ச்சி.. தேசிய விருது பெற்ற இளம் இயக்குநர் மரணம்.. என்ன ஆச்சு?
EV Car Battery: 15 வருட பேட்டரி வாரண்டி, ரேஞ்ச்? இந்தியாவின் நம்பகமான டாப் 5 மின்சார கார்கள் - விலை எப்படி?
15 வருட பேட்டரி வாரண்டி, ரேஞ்ச்? இந்தியாவின் நம்பகமான டாப் 5 மின்சார கார்கள் - விலை எப்படி?
Udhayanidhi Stalin: மிஸ்டர் உதயநிதி.. இல்லாததை எல்லாம் சொல்லாதீங்க.. வெளுத்து வாங்கிய கர்நாடகா அமைச்சர்!
Udhayanidhi Stalin: மிஸ்டர் உதயநிதி.. இல்லாததை எல்லாம் சொல்லாதீங்க.. வெளுத்து வாங்கிய கர்நாடகா அமைச்சர்!
Gold and silver rate today : நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! மீண்டும் உயர்ந்தது தங்கத்தின் விலை.- இன்றைய விலை நிலவரம் இதோ..
நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! மீண்டும் உயர்ந்தது தங்கத்தின் விலை.- இன்றைய விலை நிலவரம் இதோ..
TN Weather Update: இன்றும் சென்னையில் கனமழை? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? - தமிழக வானிலை அறிக்கை
இன்றும் சென்னையில் கனமழை? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? - தமிழக வானிலை அறிக்கை
Embed widget