மேலும் அறிய

Sasikala | ‛சசிகலா விலகி இருந்ததால் ஜெ ஆத்மா சாந்தியடையும்’ -கே.பி.முனுசாமி பேட்டி

அவர் சசிகலாவின் பேச்சுக்கு ஒரு அதிமுக தொண்டர் கூட செவி சாய்க்க மாட்டார்கள் - கே.பி.முனுசாமி

கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளியில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் சசிகலாவின் பேச்சுக்கு ஒரு அதிமுக தொண்டர் கூட செவி சாய்க்க மாட்டார்கள் என்று கூறினார். அதிமுகவை திசை திருப்பி தொண்டர்களை குழப்ப சசிகலா முயற்சி செய்கிறார் என்றும், அவரது எண்ணம் எப்போதும் ஈடேராது என்று குறிப்பிட்டார். ஒரு தொண்டரும் சசிகலாவிடம் பேசவில்லை மாறாக சசிகலா தான் அவர்களோடு பேசி வருகிறார். சசிகலா பேசும் நபர்கள் அமமுகவை சேர்ந்தவர்கள், ஜெயலலிதா ஆன்மா சாந்தியடையவாவது சசிகலா குடும்பம் அதிமுகவில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று கடுமையாக சாடினார். 

Sasikala | ‛சசிகலா விலகி இருந்ததால் ஜெ ஆத்மா சாந்தியடையும்’ -கே.பி.முனுசாமி பேட்டி

மேலும் பேசிய அவர் கோவையில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் ஆய்வுக்கு சென்ற முதல்வருக்கு எதிராக GobackStalin என்று கூறுவது நாகரிகமான செயல் இல்லை. ஆனால் இது ஏற்கனவே பிரதமருக்கு இவர்கள் செய்தது அதனால் பாதிக்கப்பட்டவர்கள் இவ்வாறு செய்யலாம். கொரோனாவை அரசியல் ஆக்காமல் கொரோனாவை விரட்ட அரசுக்கு, எதிர்கட்சி உறுதுணையாக இருக்க வேண்டும் அவர் கூறினார்.

'நான் மீண்டும் வருவேன்.. கட்சியை சரி செய்வேன்' - தொண்டரிடம் செல்போனில் பேசிய சசிகலா!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை நிறைவு பெற்று கடந்த பிப்ரவரி மாதம் சசிகலா, கர்நாடக மாநில சிறையில் இருந்து விடுதலை ஆனார். அவருக்கு அவரது ஆதரவாளர்களும், அ.ம.மு.க. தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனால், அவர் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவார், மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Sasikala | ‛சசிகலா விலகி இருந்ததால் ஜெ ஆத்மா சாந்தியடையும்’ -கே.பி.முனுசாமி பேட்டி

ஆனால், திடீரென அரசியலில் இருந்து ஒதுங்குகிறேன் என்று அறிக்கை வெளியிட்டார். இதனால், அவரது ஆதரவாளர்களும், தொண்டர்களும் அதிர்ச்சியடைந்தனர். மேலும், சட்டசபை தேர்தல் குறித்தும், தன்னுடைய அரசியல் நிலைப்பாடு குறித்தும் எந்தவொரு கருத்தையும் தெரிவிக்காமல் அமைதியாகவே இருந்துவந்தார்.
சட்டசபை தேர்தலில் பா.ஜ.க., பா.ம.க. ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்த அ.தி.மு.க. கூட்டணி 70க்கும் மேற்பட்ட இடங்களை மட்டுமே கைப்பற்றி எதிர்க்கட்சியானது. ஆனால், தேர்தல் முடிவுகளுக்கு பிறகும் சசிகலா அ.தி.மு.க.வின் தோல்வி குறித்து எந்தவொரு கருத்தையும் வெளியிடவில்லை.

Sasikala | ‛சசிகலா விலகி இருந்ததால் ஜெ ஆத்மா சாந்தியடையும்’ -கே.பி.முனுசாமி பேட்டி

இந்த நிலையில், சசிகலாவின் தீவிர ஆதரவாளர் ஒருவர் சில தினங்களுக்கு முன்பு அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, அந்த தொண்டரிடம் பேசிய சசிகலா, '’நல்லா இருக்கீங்களா..? வீட்டில் எல்லாம் நன்றாக உள்ளனரா? சீக்கிரம் வந்துவிடுவேன். ஒன்றும் கவலைப்பட வேண்டாம். கண்டிப்பாக கட்சியை சரி செய்துவிடலாம். 

தைரியமாக இருக்க வேண்டும். நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். நிச்சயம் வருவேன்” என்று பேசினார். சட்டசபை தேர்தல் முடிந்து இத்தனை நாட்களாக எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடாத சசிகலா, தான் மீண்டும் வருவேன் என்று இந்த தொலைபேசி உரையாடலில் கூறியிருப்பது அவரது தொண்டர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. சசிகலா பேசிய தொலைபேசி ஆடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பெங்களூரு குண்டுவெடிப்பு! வெளியான குற்றவாளிகளின் புகைப்படங்கள் - தகவல் தருபவர்களுக்கு வெகுமதி அறிவிப்பு!
பெங்களூரு குண்டுவெடிப்பு! வெளியான குற்றவாளிகளின் புகைப்படங்கள் - தகவல் தருபவர்களுக்கு வெகுமதி அறிவிப்பு!
Lok Sabha Elections 2024: விரலை வெட்டினாலும் மக்கள் இரட்டை இலைக்குத்தான் ஓட்டு போடுவார்கள் - ஆர்.பி. உதயகுமார் உறுதி
விரலை வெட்டினாலும் மக்கள் இரட்டை இலைக்குத்தான் ஓட்டு போடுவார்கள் - ஆர்.பி. உதயகுமார் உறுதி
வரி பயங்கரவாதம்.. ஜனநாயகத்தின் மீது அப்பட்டமான தாக்குதல்.. நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த காங்கிரஸ்!
வரி பயங்கரவாதம்.. ஜனநாயகத்தின் மீது அப்பட்டமான தாக்குதல்.. நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த காங்கிரஸ்!
Sunita Kejriwal: டெல்லி முதலமைச்சராகிறாரா சுனிதா கெஜ்ரிவால்? கவனம் ஈர்க்கும் முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி - யார் இவர்?
டெல்லி முதலமைச்சர் ஆகிறாரா சுனிதா கெஜ்ரிவால்? கவனம் ஈர்க்கும் முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி - யார் இவர்?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Annamalai Nomination Issue : வேட்புமனு சர்ச்சை” இது ஒரு விஷயமே இல்ல” அ.மலையின் புது TWIST | BJPSingai Ramachandran :”அ.மலை மிரட்டி பணம் வசூலித்துள்ளார்” சிங்கை ராமச்சந்திரன் பகீர் | AnnamalaiJothimani Issue -'’5 வருசமா எங்க போனீங்க?’’ ஜோதிமணியை சுத்துப்போட்ட பெண்கள்Sowmiya anbumani - ஹிந்தியில் வாக்கு கேட்ட செளமியா அன்புமணி வைரலாகும் வீடியோ!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பெங்களூரு குண்டுவெடிப்பு! வெளியான குற்றவாளிகளின் புகைப்படங்கள் - தகவல் தருபவர்களுக்கு வெகுமதி அறிவிப்பு!
பெங்களூரு குண்டுவெடிப்பு! வெளியான குற்றவாளிகளின் புகைப்படங்கள் - தகவல் தருபவர்களுக்கு வெகுமதி அறிவிப்பு!
Lok Sabha Elections 2024: விரலை வெட்டினாலும் மக்கள் இரட்டை இலைக்குத்தான் ஓட்டு போடுவார்கள் - ஆர்.பி. உதயகுமார் உறுதி
விரலை வெட்டினாலும் மக்கள் இரட்டை இலைக்குத்தான் ஓட்டு போடுவார்கள் - ஆர்.பி. உதயகுமார் உறுதி
வரி பயங்கரவாதம்.. ஜனநாயகத்தின் மீது அப்பட்டமான தாக்குதல்.. நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த காங்கிரஸ்!
வரி பயங்கரவாதம்.. ஜனநாயகத்தின் மீது அப்பட்டமான தாக்குதல்.. நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த காங்கிரஸ்!
Sunita Kejriwal: டெல்லி முதலமைச்சராகிறாரா சுனிதா கெஜ்ரிவால்? கவனம் ஈர்க்கும் முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி - யார் இவர்?
டெல்லி முதலமைச்சர் ஆகிறாரா சுனிதா கெஜ்ரிவால்? கவனம் ஈர்க்கும் முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி - யார் இவர்?
Karthigai Deepam: கார்த்தி மீது எழும் சந்தேகம்.. அபிராமியை தீர்த்துக்கட்ட தயாராகும் ஐஸ்வர்யா.. கார்த்திகை தீபம் அப்டேட்!
Karthigai Deepam: கார்த்தி மீது எழும் சந்தேகம்.. அபிராமியை தீர்த்துக்கட்ட தயாராகும் ஐஸ்வர்யா.. கார்த்திகை தீபம் அப்டேட்!
Hot Spot Review: நாலு கதை.. ஒவ்வொன்றும் தனி ரகம்.. ரசிகர்களை திருப்திப்படுத்தியதா ஹாட் ஸ்பாட்? முழு விமர்சனம்
Hot Spot Review: நாலு கதை.. ஒவ்வொன்றும் தனி ரகம்.. ரசிகர்களை திருப்திப்படுத்தியதா ஹாட் ஸ்பாட்? முழு விமர்சனம்
கடன் பிரச்னையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை - தேனியில் சோகம்
கடன் பிரச்னையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை - தேனியில் சோகம்
Kanimozhi MP:
Kanimozhi MP: "தி.மு.க.விற்குத்தான் வெற்றி! கோவையில் இரண்டாவது இடத்திற்கு தான் போட்டி" - கனிமொழி எம்.பி. நம்பிக்கை
Embed widget