மேலும் அறிய

Abp Nadu Exclusive: "ஒற்றை தலைமை நோக்கி பாமக".. பைத்தியக்காரர்கள்.. ராமதாஸ் - அன்புமணி மோதல் போட்டுடைத்த கணேஷ்குமார்

பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சனை குறித்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கணேஷ்குமார் அளித்த பிரத்யேக பேட்டி.

பாட்டாளி மக்கள் கட்சியில் உட்கட்சி பிரச்சனை ஏற்பட்டுள்ள நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் குமார் ஏ.பி.பி நாடு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டி பின்வருமாறு :

கேள்வி : 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி முடிவாகியுள்ள நிலையில், பாமகவின் நிலைப்பாடு என்ன ?. அதிமுக - பாஜக கூட்டணியில் பாமக பயணிக்க வாய்ப்பு உள்ளதா ?

கணேஷ்குமார், பாமக: நாடாளுமன்ற தேர்தலை பொருத்தவரை 2014 ஆம் தேர்தலில் இருந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் பயணித்து வருகிறோம். சட்டமன்றத் தேர்தலில் சூழலுக்கு ஏற்ப, தேர்தல் முடிவுகளை எடுத்து வருகிறோம். கூட்டணி குறித்து அன்புமணி மற்றும் ராமதாஸ் ஆகியோர் இணைந்து முடிவு எடுப்பார்கள். 

கேள்வி: சித்திரை முழு நிலவு மாநாடு தேர்தலை முன்னிட்டு நடத்தப்பட்டதாக பார்வை உள்ளது. மாநாடு முடிந்த பிறகும் உட்கட்சி பூசலால் கூட்டணி குறித்து முடிவு எடுக்க முடியாத சூழல் உள்ளதே ?

கணேஷ்குமார், பாமக : தேர்தலுக்கு வன்னியர் சங்க மாநாடு நடத்தப்படவில்லை. வன்னியர் சங்கம் காலம் துவங்கியதிலிருந்து இந்த மாநாடு நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு கூட இந்த மாநாடு நடத்த முயற்சி செய்தும் அண்ணன் முடியவில்லை. 13 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற பிரச்சனையை காரணமாக மாநாட்டுக்கு அனுமதி தராமல், ஏமாற்றி வந்தார்கள். ஆனால் கலவரம் செய்தவர்கள் திண்டிவனம் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஒரு பாமகவினர் கூட தண்டனை பெறவில்லை. 

கேள்வி: தொடர் உட்கட்சி பிரச்சனைக்கு காரணம் தான் என்ன ? மாநாட்டிற்கு பிறகு இணைந்து செயல்படுவார்கள் என எதிர்பார்த்த நிலையில் பிரச்சனை ஏன் ?

கணேஷ்குமார், பாமக : பிரச்சனை என்று முழுமையாக சொல்லி விட முடியாது. கட்சியில் ஒரு அசாதாரண சூழல் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இது போன்ற அசாதான சூழல் எல்லா கட்சிகளும் தான் இருக்கும். இது வெளிப்பட்டு விட்ட காரணத்தால் பூதாகரம் படுத்தப்படுகிறது.

கேள்வி: மருத்துவர் ராமதாஸ் மற்றும் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் இருவருக்கும் என்னதான் பிரச்சனை ? மக்கள் மட்டுமில்லாமல் கட்சி நிர்வாகிகள் குழப்பத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்காக பிரச்சனை குறித்து சொல்ல முடியுமா ?

கணேஷ்குமார், பாமக : ஒரு சில சின்ன சின்ன அஜெண்டா தொடர்பான பிரச்சனைகள் மட்டுமே இருக்கிறது. பொதுக்குழுவில் இளைஞரணி தலைவர் நிர்வாகி நியமனத்தில் இருந்தது. மிக விரைவில் இந்த பிரச்சனை சரியாக வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 

கேள்வி : ராமதாஸ் ஆலோசனைக் கூட்டத்தை நிர்வாகிகள் புறக்கணிக்கிறார்கள். ஒருவேளை கட்சியில் ராமதாஸின் செல்வாக்கு குறைகிறதா ?

கணேஷ்குமார், பாமக : இந்த விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் தெளிவாக இருக்கிறோம். எல்லாருக்கும் ஆனா நிறுவனர் மற்றும் வழிகாட்டி மருத்துவர் அய்யா அவர்கள்தான். பாமகவின் தலைவராக அன்புமணி ராமதாஸ் இருந்தாலும், அவருக்கும் சேர்த்து தலைவர் மருத்துவர் அய்யாதான். 

அவரைக் குறைத்து எடை போடுவதோ, அவரது செல்வாக்கு குறையும் நினைப்பதெல்லாம் தன்னை தானே ஏமாற்றிக் கொள்கிற நிலைமை தான். காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இந்த பிரச்சனை இருந்துகொண்டுதான் இருக்கிறது. இலவு காத்த கிளி போல் ஏமாந்து விடுவார்கள். 

கேள்வி: பாமக வருகின்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியில் இடம்பெறவில்லை என்றால், 2016 தேர்தலைப் போல் தனித்துப் போட்டியிட போகிறீர்களா ?

கணேஷ்குமார், பாமக : பாமக நேற்று தொடங்கிய கட்சி கிடையாது. 40 ஆண்டுகாலம் அதனுடைய அரசியல் பின்புலம் உள்ளது. மிகப்பெரிய வெற்றியை சந்தித்த பாமக அதே போன்று மிகப்பெரிய தோல்வியும் சந்தித்து இருக்கிறது. இதேபோன்று திமுக மற்றும் அதிமுக கட்சிகளும் மிகப்பெரிய வெற்றியை பெற்று தோல்வியையும் சந்தித்திருக்கின்றன.

திமுக மற்றும் அதிமுகவுக்கு பிறகு தோல்வியடைந்த பிறகும் இயங்கிக் கொண்டிருக்கிற கட்சி பாட்டாளி மக்கள் கட்சி தான். எங்களுக்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன. மக்கள் நலன் சார்ந்த விஷயங்களில் கூட்டணி வைக்கின்றோம். 

கேள்வி: பாமகவில் இருந்து வெளியேறியவர்கள் மற்றும் குரு அவருடைய மகள் தொடர்ந்து பாமகவை விமர்சனம் செய்கிறார்கள். அது குறித்து உங்களுடைய பார்வை என்ன ?

கணேஷ்குமார், பாமக : உண்மை என்பது அந்த அவர்கள் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவருக்கும் தெரியும். எங்களைப் பொறுத்தவரை மருத்துவரை மற்றும் மருத்துவர் சின்னையா ஆகியோர் எங்கள் வாயைக் கட்டி வைத்திருக்கிறார்கள். அவர்களை விமர்சிக்க வேண்டாம். சின்ன பசங்க பேசிட்டு போறாங்க என்பதால் நாங்கள் விமர்சனம் செய்யவில்லை. 

கேள்வி கேட்கலாம் என்றால் ஆயிரம் கேள்விகள் கேட்கலாம். அவர்களுடைய வீட்டில் இருந்தால் மருத்துவ வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டது. அவர் மருத்துவமனைக்கு அழைத்து வரும்போது மயக்கம் நிலையில், அவர் வீட்டில் இருந்து தான் அழைத்துவரப்பட்டார். அவர்கள் பேசினா பேசி விட்டு போகிறார்கள், தீவிர விசுவாசி மாவீரன் குரு அவர்கள். அவர் சொன்ன ஒரு வார்த்தை மரணம் தான், பிரிக்கும் என கூறினார் அதே படி நின்று காட்டினார். 

சமூக வலைதளங்களை பொருத்தவரை பேசுபவர்கள் பேசிக்கொண்டு தான் இருப்பார்கள். அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டுமென்றால், அதை மட்டும் தான் வேலையாக செய்ய வேண்டும். பாமகவில் சில காலம் இருந்தவர்கள் கூட நிறைய பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் சீமான் பாணியில் பதில் சொல்ல வேண்டுமென்றால், உனக்கு என்னப்பா நீ பைத்தியம் என்ன வேணாலும் பேசலாம் நாங்க அப்படி பேச முடியுமா ?. பைத்தியம் போல் பேசிக் கொண்டிருப்பவர்களுக்கு என்ன பதில் சொல்ல முடியும்.

கேள்வி: பாட்டாளி மக்கள் கட்சி ஒற்றை தலைமையை நோக்கி பயணிக்கிறதா ?

கணேஷ் குமார், பாமக: பாட்டாளி மக்கள் கட்சி எப்போதுமே ஒற்றை தலைமையில் தான் இயங்கி வருகிறது. மருத்துவர் அய்யா மற்றும் மருத்துவர் சின்னையா ஆகிய இருவரும் தான் அந்த ஒற்றை தலைமை. எங்களுக்கு இருவரும் வெவ்வேறு ஆட்கள் கிடையாது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget