மேலும் அறிய

“பாஜக-வின் புதுக்கோட்டை வேட்பாளர் ஆர்.ஜீவானந்தம்?” அறிவிப்பு எப்போது ?

”தாமரை தமிழ்நாட்டில் மலரவே மலராது என்றும், பாஜகவிற்கு தீவிர எதிர்ப்பு இருந்த நிலையிலும் 2006 தேர்தலிலேயே ஆலங்குடி தொகுதியில் 10 ஆயிரம் வாக்குகளுக்கும் மேல் பெற்றவர் ஜீவானந்தம்”

தேசிய ஜனநாயக கூட்டணியில் 27 இடங்களில் போட்டியிடும் பாஜக விரைவில் வேட்பாளர்களை அறிவிக்கவுள்ளது. இந்த தொகுதிகளில் மிக முக்கியமாக கருதும் திருச்செந்தூர், ராமநாதபுரம், நாகர்கோவில், மதுரை தெற்கு, சாத்தூர் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட தொகுதிகளில் மிக நிச்சயமாக வெற்றி பெற வேண்டுமென்பதில் பாஜக உறுதியுடன் இருக்கிறது. அதனால், வெற்றி பெற வாய்ப்புள்ள, தொகுதியில் செல்வாக்குள்ள நபர்களை மட்டுமே வேட்பாளராக நிறுத்தவும், சிபாரிசின் அடிப்படையில் வேட்பாளர் அறிவிப்பு இருக்கக் கூடாது என்பதிலும் பாஜக தலைமை உறுதியுடன் இருக்கிறது.

அதனடிப்படையில், கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து நெல்லை தொகுதியில் போட்டியிட மாநிலத் தலைவர் நாயினார் நாகேந்திரனே, அதிமுகவிடமிருந்து நெல்லைத் தொகுதியை கேட்டு வாங்காமல், சாத்தூர் தொகுதியை பெற்று அந்த தொகுதியில் போட்டியிடவிருக்கிறார்.

புதுக்கோட்டையை குறி வைத்த பாஜக – வேட்பாளர் யார் ?

இந்நிலையில், தொண்டமான் சமஸ்தான மன்னர் ஆட்சியில் இருந்த புதுக்கோட்டை தொகுதியை பாஜக முக்கியமான தொகுதியாக பார்க்கிறது. இந்த தொகுதியில் வெற்றி பெற்றால், தமிழ்நாட்டில் பாஜகவின் எதிர்காலம் பிரகாசகமாக இருக்கும் என்பதால், புதுக்கோட்டை தொகுதிக்கான வேட்பாளரை பாஜக பல கட்ட ஆலோசனைகளுக்கு பின்னர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

பாஜக வேட்பாளராக ஆர்.ஜீவானந்தம் அறிவிக்கப்பட வாய்ப்பு

அந்த வகையில், கடந்த 2006 தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு, 10 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்ற, பாஜக செயற்குழு உறுப்பினர் ஆர்.ஜீவானந்தம், புதுக்கோட்டை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட பாஜக தலைமை முடிவு எடுத்திருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏன் ஜீவானந்தம் ?

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜீவானந்தம் செல்வாக்குள்ள நபராகவும், முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவராகவும் இருப்பதால், அவர் புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டால் திமுக உள்ளிட்ட எந்த கட்சி வேட்பாளர் எதிர்த்துப் போட்டியிட்டாலும் அவர் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. அதனால், ஜீவானந்தத்திற்கு இந்த முறை புதுக்கோட்டை தொகுதியில் வாய்ப்பு கொடுத்து, அவரை வெற்றி பெற வைக்க பாஜக தலைமை முடிவு செய்திருப்பதாக கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கிறன.

புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு நன்கு அறிந்த முகம் ஜீவானந்தம்

பாஜக செயற்குழு உறுப்பினராகவும், எம்.ஏ.எல்.எல் பி படித்த வழக்கறிஞராகவும் அவர் இருப்பதால் தொகுதி மக்களுக்கு மத்திய அரசின் நலத் திட்டங்கள் கிடைக்கவும், சட்ட உதவிகளை இலவசமாக வழங்கியும் வந்திருக்கிறார். இதனால், புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆர்.ஜீவானந்தம் மக்கள் மத்தியில் நன்கு பரிட்சியமான முகமாக இருப்பதாலும், ஏற்கனவே தமிழ்நாட்டில் தாமரை மலரே மலராது என்றும் பாஜகவிற்குக் எதிரான கடுமையான எதிர்ப்புகள் நிலவியபோதுமே ஆலங்குடியில் 10 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்றவர் என்பதால், இப்போதைக்கான சூழலில் புதுக்கோட்டை தொகுதியில் ஜீவானந்தத்தை வேட்பாளராக களம் இறக்கினால் நிச்சயம் வெற்றி பெறலாம் என பாஜக தலைமை திட்டமிட்டிருக்கிறது

தலைப்பு செய்திகள்

பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
சட்டசபையில நாளைக்கு இருக்கு.! தைரியம் இருந்தால் CM விஜய் பதில் சொல்லட்டும்- சீறிய உதயநிதி
சட்டசபையில நாளைக்கு இருக்கு.! தைரியம் இருந்தால் CM விஜய் பதில் சொல்லட்டும்- சீறிய உதயநிதி
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
ஆன்லைன் மதுபான திட்டம்  இதுதான் விஜய் அரசின் புரட்சிகரமான திட்டமா? - ஆர்.பி.உதயகுமார் காட்டம் !
ஆன்லைன் மதுபான திட்டம்  இதுதான் விஜய் அரசின் புரட்சிகரமான திட்டமா? - ஆர்.பி.உதயகுமார் காட்டம் !

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
Holiday Special Bus : 2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
Embed widget