மேலும் அறிய

"புலியை முறத்தால் அடித்துத்துரத்திய பரம்பரையில் இருந்து வந்தவள் நான்" - விமான நிலையத்தில் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி

நமது சகோதரி அவமரியாதை செய்யப்படுகிறார் என்று மகிழும் கூட்டம் இங்கே இருக்கிறது, என்பதுதான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது...

திருச்சி விமான நிலையத்திற்கு வருகை வந்த  தெலுங்கானா - புதுச்சேரி ஆளுநர்  தமிழிசை சௌந்தரராஜன் அவர்களை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இதனை தொடர்ந்து பாஜக கட்சி நிர்வாகிகளை சந்தித்து புகைபடம் எடுத்துக்கொண்டார். பின்பு திருச்சி விமான நிலைய வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பேசும்போது, "கும்பகோணம் அருகே 23 அடி உயரம் இருக்கும்  சிவன் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சிலை உலோகத்தினால் ஆன சிலை ஆகும் . இந்த நிகழ்வு மரியாதைக்குரிய வேலூர் சக்தி அம்மா அவருடன் இணைந்து சிலையை நேரில் சென்று பார்த்துவிட்டு அதன் ஆரம்ப விழாவில் கலந்துகொள்ள உள்ளேன். என்னை பொருத்தமட்டில் தஞ்சாவூர், திருச்சி, தமிழகம் வருவது எனது தாய் வீட்டுக்கு வருவது போன்று ஆகும். நல்லதோர் ஒரு ஆன்மீக நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தற்போது வந்துள்ளேன்” என்றார்.

மேலும் வருங்காலத்தில் தீவிர அரசியலில் ஈடுபட வாய்ப்புள்ளதா என்றால், நான் தற்போது இரண்டு மாநிலங்களின் ஆளுநர் எனது கடமையை  சிறப்பாக செய்து வருகிறேன். மேலும் அன்றைய பணிகளை அன்றே முடித்து விட வேண்டும் என்று நினைப்பவர் நான். சகோதரத்துவத்துடன் அவ்வப்போது தமிழகத்திற்கு வருகை புரிந்து நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கு பெற்று வருகிறேன்.


மேலும் இன்றைய நிலையைப் பொறுத்தவரை கடவுள் எனக்கு அளித்த பணியை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறேன். வருங்காலத்தில் நான் என்ன செய்ய வேண்டும் என்பது ஆண்டவரும், ஆண்டுகொண்டிருப்பவரும் என்ன பணி வைத்துள்ளார்கள் என்பது எனக்கு தெரியாது காலம் தான் பதில் சொல்லும்.  தெலங்கானாவில் ஆளுநர் புறக்கணிக்கப்படுகிறார் என குற்றச்சாட்டு எழும்பியுள்ளது என்ற கேள்வி?? அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் இருந்து ஒரு கட்சியின் பத்திரிகை ஏதோ அவர் அவமதிக்கப்பட்டார் என்று எழுதியுள்ளனர். நான் அவமதிக்கப்படவும் இல்லை. அலறவும் இல்லை. நான் எதைக் கண்டும் அலறமாட்டேன். நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன், புலியை முறத்தால் அடித்து துரத்திய தமிழச்சி பரம்பரையில் இருந்து வந்தவள் நான். இன்னொரு மாநிலத்தில் நமது சகோதரி மதிக்கப்படவில்லை என்று சொன்னால் அதை ஒருவர் நமது தமிழ்நாட்டில் இருந்தே அதை எப்படி மகிழ்வாக எடுத்துக்கொள்ள முடியும் என்பது எனக்குத் தெரியவில்லை. அத்தகைய மனநிலை சரியான மனநிலை அல்ல என்றார். ஆனால் அப்படி ஒரு மனநிலையில் இருப்பவர்களை நான் ஒன்றும் செய்ய முடியாது. ஏதோ நான் அவமதிக்கப்பட்டேன் அலறினேன் என்று எதுவும் கிடையாது.

கலாச்சாரம் என்பது ஒரு இடத்தில் உறவினர்களோ அல்லது வேண்டியவர்களோ வந்தால் அவர்களை வரவேற்கக்கூடிய கலாச்சாரம் பாரத தேசத்தின் கலாச்சாரமாகும். தமிழகத்தின் கலாச்சாரம் ,தெலங்கானாவின் கலாச்சாரம், அதை சரியாக பொதுமக்கள் பின்பற்றப்படவில்லை என்பது தான் எனது கருத்து.  மூன்று ஆண்டுகள் முடிந்து நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன். இந்த காலகட்டத்தில் என்னென்ன நல்லது நடந்தது, எது நடக்கவில்லை என்பதை அனைத்தையும் தெளிவுபடுத்தினேன். மேலும் பழங்குடியினர் 6 மாவட்டங்களை தத்தெடுத்துள்ளேன், அவர்களுக்கு கோழிகள் வழங்கி, முட்டைகள் கொடுத்து ஊட்டச்சத்துக்களை அதிகப்படுத்துவதற்காக வழிவகை செய்துள்ளேன். மேலும் மருத்துவமனை, கல்லூரிகள்,பள்ளிகள் மற்றும்  மகளிர் ,பொதுமக்களை சந்திக்கின்றேன். இதுபோன்று நல்லதெல்லாம் நடந்து கொண்டிருக்கும்போது ஆளுநர் இப்படியும் அவமதிக்கப்படுகிறார் என்பதை தான் நான் சொன்னேன்.


என்னை மதித்தாலும், மதிக்காமல் இருந்தாலும் எனது பணியை நான் தொடர்ந்து செய்வேன். இந்த அவமரியாதை என்னை ஒன்றும் செய்யாது. ஆனால் அங்கு அவமரியாதை செய்யப்படுகிறார்கள் என்று மகிழும் கூட்டம் இங்கே இருக்கிறது, என்பதுதான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.  நம்மை சார்ந்தவர்கள் எங்கேயாவது அவமதிக்கப்பட்டால் துடிப்பது நமது ரத்தமாக தான் இருக்கும். தெலுங்கானாவில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து ஆலோசனைகள் செய்யப்பட்டு புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான நடவடிக்கையை அதிகாரிகள் எடுத்து வருகிறார்கள். தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை முழுமையாக படித்தபிறகு கருத்துக்களை தெரிவிக்கவேண்டும். மேலும் 3 மர்றும் 5 வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பொதுத்தேர்வு என்பது பலகட்ட ஆலோசனைக்கு பிறகு தான் கொண்டுவந்துள்ளனர். தேர்வு எழுத மாணவர்கள் தயாராக உள்ளனர்” என்றார்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Salem Power Shutdown: சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
Sabarimala: ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் -  புது அறிவிப்பு இதோ
ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் - புது அறிவிப்பு இதோ
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Embed widget