“மக்கள் மேல் பாசம்; 40 ஆண்டுகள் உழைப்பு; கேப்டனுக்கே மக்கள் வாய்ப்பு தரவில்லை” - பிரேமலதா உருக்கம்
தமிழகத்தில் கள்ளச்சாராயம் தலைவிரித்து ஆடுகிறது. சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் கேள்விக்குறியாக உள்ளது என வேலூரில் தேமுதிக மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டியளித்தார்.
வேலூர் மாவட்டம், வேலூரில் பல்வேறு இடங்களில் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்க்கு பெண்கள் ஆரத்தி எடுத்து மாலை அணிவித்து வரவேற்றனர். மேலும் இரு இடங்களில் தேமுதிக கட்சி கொடியை ஏற்றி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து வேலூர் அடுத்த விருப்பாட்சிபுரத்தில் மறைந்த வேலூர் மாவட்ட தேமுதிக முன்னால் செயலாளர் வி.பி.வேலு அவர்களின் இல்லத்திற்கு சென்று அவர் இது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பின்னர் அவர் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து நிதி உதவியை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் “நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓர் ஆண்டு உள்ளது. நிச்சயமாக ஆறு மாத காலத்திற்கு முன்பே தேமுதிகவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து கேப்டன் அறிவிப்பார். பலமுறை எங்கள் கட்சி சார்பில் பல பேர் போட்டியிட்டு உள்ளனர். அந்த மாதிரி நிச்சயமாக இந்த முறையும் தேமுதிக சார்பாக போட்டியிடுவார்கள். யார் போட்டியிட போகிறார்கள் எந்த தொகுதி என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக கேப்டன் விஜயகாந்த் தலைமை கழகத்தின் மூலமாக அறிவிப்பார். கள்ளச்சாராயம் தமிழகத்தில் கரைபுரண்டு ஓடுகிறது. இதுவரையில் எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகு கள்ளச்சாராயத்தினால் மரணங்கள். அதுமட்டுமில்லாமல் சாலைகளில் பட்டப்பகலில் வெட்டி படுகொலைகள் நடைபெறுகின்றன. எல்லா ஊர்களிலும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
அதேபோல் பெண்கள் தைரியமாக வெளியே செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. பாலியல் வன்கொடுமை நடைபெறுகின்றது. காரணம் என்னவென்றால் எல்லா இடங்களிலும் டாஸ்மாக் கடைகள் அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் மது அதிகமாகியுள்ளது. போதை அதிகமாகியுள்ளது. கஞ்சா ஒருபுறம் இவையெல்லாம் இருப்பதினால் சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் மிகப்பெரிய ஒரு கேள்விக்குறியாக சென்று கொண்டுள்ளது. பெட்ரோல் குண்டு வீச்சு ரவுடிசம் எல்லாமே தமிழகத்தில் உள்ளது.
திருநெல்வேலியில் அருகே ஒரு நாளைக்கு ஆயிரம் லோடு மணல் கன்னியாகுமரிக்கு கடத்துகின்றனர். ஆலங்குளம் என்னும் ஊரில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தப் போகிறோம் என அறிவித்த பிறகு அன்றைய தினம் அந்த மணல் குவாரிக்கு சென்று பார்வையிட போவதாக கூறியதை அடுத்து போலீசை குவித்து வைத்துள்ளனர். சட்டம் ஒழுங்கு ஒரு பெரிய கேள்விக்குறியாக உள்ளது. கிராம நிர்வாக அலுவலர் சரியாக கடமை செய்த ஒருவரை வீடு புகுந்து வெட்டுகின்றனர். அதேபோல் துறையூர் திருச்சி பகுதியில் மணல் கடத்தல் செய்கிறீர்கள் என்று கூறியதற்கு தாக்குகின்றனர். செந்தில் பாலாஜியின் வீட்டிற்கு ரெய்டு வருகின்றனர். ஏன் முன்கூட்டி அறிவித்து வரவில்லை, போலீஸ் பாதுகாப்பு கொடுப்போம் என்கின்றனர். எந்த ஊரில் ரெய்டு வருபவர்கள் அறிவித்து விட்டு வருகின்றனர். புதிய விளக்கத்தை இவர்கள் தான் கொடுக்கின்றனர். கேட்டால் திராவிட மாடல் என்று கூறுகின்றனர். என்ன திராவிட மாடல், செந்தில் பாலாஜி மட்டும் என்ன ஸ்பெஷலா? இங்கு எல்லாரைப் போல தான் எங்க வீட்டிற்கு கூட தான் ரைட் வந்துள்ளனர். சொல்லாமல் கொள்ளாமல் வருபவர்கள் கேட் எகிறி குதித்து தான் வருவார்கள். அது அவர்களின் கடமை அவர்களை அடிப்பது அவர்கள் வண்டிகளை சேதப்படுத்துவது அதிகாரிகளை அடிப்பது அதனால் தான் இன்று இவ்வளவு தூரம் சென்றுள்ளது.செந்தில் பாலாஜி ஊழல் செய்ததினால் தான் அவர் வீட்டிற்கு ரெய்டு செல்கின்றனர். அவரை உடனடியாக கொண்டு சென்று ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கின்றனர். அரசு மருத்துவமனையின் மீது நம்பிக்கை இல்லையா அரசிற்கு? காவேரி மருத்துவமனைக்கு ஏன் மாற்றுகிறீர்கள்?” என கேள்வி எழுப்பினார்.
“மக்கள் மட்டும் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் மந்திரிகள் தனியார் மருத்துவமனைக்கு போக வேண்டுமா? அதிலேயே தரம் எப்படி இருக்கின்றது என்று தெரிகிறது. இது போன்று தான் தமிழகத்தில் இப்பொழுது உள்ளது. வெளிநாடுகளுக்கு பயணம் போகின்றார். கேட்டால் புரிந்துணர்வு ஒப்பந்தம் என்கின்றார். எவ்வளவோ லட்சம் கோடிக்கு தொழிற்சாலைகள் வரும் என்கின்றனர். எங்கேயாவது ஒரு தொழிற்சாலை இரண்டரை ஆண்டுகள் ஆகி திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இந்த மாவட்டத்தில ஒரு தொழிற்சாலை காண்பியுங்கள் பார்ப்போம். துபாய், சிங்கப்பூர் ஜப்பான், ஆகிய நாடுகளுக்கு முதல்வர் சென்றார் என்ற தொழிற்சாலை தமிழகத்திற்கு வந்தது எவ்வளவோ இளைஞர்கள் என்று வேலைவாய்ப்பு இல்லாமல் உள்ளனர். படித்தவர்கள் படிக்காதவர்கள் என்ன வேலை வாய்ப்பு உருவாக்கி கொடுத்து உள்ளார்கள்.
மின் கட்டண உயர்வு என அறிவிக்கின்றனர். அதில் மத்திய அரசு அறிவித்தபடி என்ற வார்த்தையை சேர்க்கின்றனர். ஏனென்றால் இது இவர்கள் மீது தவறு வராது என்று இதுவரையில் கடந்த 10 ஆண்டுகளில் எங்கேயாவது மின்வெட்டு நடைபெற்றதா? இப்பொழுது எல்லா ஊரிலும் மின்வெட்டு சென்னை உட்பட அனைத்து இடங்களிலும் நான் கூறுகிறேன். என்ன இவர்கள் நிர்வாகம் செய்கின்றனர். எல்லாமே விலைவாசி உயர்ந்துவிட்டது. எல்லா வரியும் உயர்ந்து விட்டது. இப்பொழுது மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்துகின்றனர். இது மிகப்பெரிய ஒரு தவறான முன்னுதாரணம் விலைவாசி உயர்வு வரிகள் உயர்வு லஞ்சம் உயர்வு சட்டம் ஒழுங்கு சீர்கேடு மிகப் பெரிய அளவில் மக்கள் பாதித்துள்ளனர். 500 டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டோம் என கூறுகின்றனர். எங்கேயாவது உதாரணம் காண்பிக்க சொல்லுங்கள் பார்க்கலாம். கண்துடைப்பு நாடகம் நடத்துகின்றனர்.
கோயம்புத்தூரில் ஒரு தனியார் பேருந்தை பெண் ஓட்டுநர் பேருந்தை இயக்குகின்றார். வாழ்த்துக்கள். பாஜக வானதி சீனிவாசன் அவர்கள் தொகுதி என்பதால் ஒரு பெண் ஓட்டுனர் என்பதால் பார்த்து செல்ல சென்றார். உடனே அது ஒரு அரசியல் ஆக்குகின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி செல்கிறார், அது ஒரு அரசியல் வேலையை விட்டு விலகச் சொல்லி திமுகவை சேர்ந்த பேருந்து நிறுவனத்தில் வேலையில் அமர்த்துகின்றனர். அது ஒரு அரசியல். பேருந்தில் பயணிக்க டிக்கெட்டுக்கு காசு இல்லாமல் பேருந்தில் ஏறியுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி. டிக்கெட்டுக்கு காசு கேட்டால் அவரிடம் இல்லை.
இதே கேப்டன் விஜயகாந்த் ஒரு தடவை பேருந்து கட்டண உயர்வற்காக சென்னையில் தனது வீட்டில் இருந்து பல்லாவரம் வரையில் அரசு அரசு பேருந்தில் கேப்டன் விஜயகாந்த் உடன் ஒரு 50 பேர் பயணித்தனர். அனைவருக்கும் கேப்டன் விஜயகாந்த் டிக்கெட் எடுத்தார். அது ஒரு நியாயம், தர்மம். அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக மக்களை ஏமாற்றுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். யாராக இருந்தாலும் லஞ்சம் ஊழல் இல்லாத ஒரு நேர்மையான ஆட்சியை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
கமல்ஹாசன் ஷர்மிளாவுக்கு கார் கொடுத்ததும் ஒரு அரசியல் தான். எல்லாருமே முதலமைச்சர் என்றால் அப்பொழுது முதலமைச்சர் என்ற பதவியே மதிப்பு இல்லாமல் போய்விடும். அதற்கான தகுதி உழைப்பு மக்கள் மேல் அன்பு பாசம் வைத்திருக்கும் கேப்டன் விஜயகாந்த் போல் 40 ஆண்டுகாலம் உழைத்தவருக்கே மக்கள் வாய்ப்பு கொடுக்கவில்லை. இங்கே அரசியலில் பல விஷயங்கள் உள்ளது இங்கு ஓட்டிற்கு பணம் கொடுப்பவர்கள் பின்னால் மக்கள் ஓடுகின்றனர்.லஞ்சம் ஊழல் உள்ளது ஈரோடு தேர்தல் நீங்கள் பார்த்திருப்பீர்கள் பலவிதமான விஷயங்கள் இங்கு உள்ளது பார்க்கலாம் பாலம் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்நடிகர் விஜயின் அரசியல் பயணம் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை. படித்தவர்களுக்கு உதவி செய்துள்ளார் நல்ல விஷயம் வாழ்த்துக்கள்” எனக் கூறினார்.