Prashant Kishor Promise: தவெக விழா மேடையில் பிரஷாந்த் கிஷோர் செய்த சத்தியம்.!!
தமிழக வெற்றிக் கழகத்தின் 2ம் ஆண்டு தொடக்க விழாவில் பேசியபோது, தொண்டர்களிடம் பிரஷாந்த் கிஷோர் ஒரு சத்தியம் செய்தார்.

மாமல்லபுரத்தில் பிரமாண்டமாக நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் 2ம் ஆண்டு தொடக்க விழாவிற்கு, சிறப்பு விருந்தினராக, தேர்தல் வியூக வகுப்பாளரான பிரஷாந்த் கிஷோர் வந்திருந்தார். பின்பு, விழா மேடையில் பேசிய அவர், தொண்டர்களிடையே ஒரு சத்தியம் செய்தார். அது குறித்து தற்போது பார்க்கலாம்.
விஜய்யின் கொள்கைகளை புகழ்ந்த பிரஷாந்த் கிஷோர்
தவெக விழாவில் உரையாற்றிய பிரஷாந்த் கிஷோர், தான் விஜய்யிடம் பேசியபோது, தமிழக மக்களை பல்வேறு விதங்களில் முன்னேற்ற விரும்பும் அவரது குறிக்கோளால் கவரப்பட்டதாக தெரிவித்தார். மேலும், அவரது கொள்கைகள், கோட்பாடுகளும் தனக்கு பிடித்திருந்ததாலேயே, அவருடன் பணியாற்ற வந்ததாக தெரிவித்தார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்கள், கவுரவமாகவும், சாதி, மத வேறுபாடுகள் இல்லாமல் அனைவரும் சம உரிமையுடன் வாழவும், அவர்களுக்கான வாய்ப்புகளை வழங்குவதுமே விஜய்யின் குறிக்கோளாக உள்ளதாக பிரஷாந்த் கிஷோர் தெரிவித்தார். அவரது இந்த சிந்தனைக்காகவே, ஏதாவது ஒரு விதத்தில் அவருக்கு உதவ வந்ததாகவும் கூறினார்.
தமிழில் உரையாற்றுவேன் என பிரஷாந்த் கிஷோர் சத்தியம்
மேலும், இந்த விழாவில் பேசியபோது, வணக்கம் என்று கூறி உரையை தொடங்கினாலும், தனக்கு தமிழ் தெரியாது என்றும், சில வார்த்தைகளை மட்டும் புரிந்துகொள்ள முடியும் என்றும் தெரிவித்தார் பிரஷாந்த் கிஷோர். ஆனால், 2026 தேர்தலில் தவெக வெற்றிபெற்ற பிறகு, அந்த வெற்றி விழாவில் தமிழில் உரையாற்றுவேன் என்று அவர் தொண்டர்களிடம் சத்தியம் செய்தார். 2026-ல் விஜய் நிச்சயம் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பார் என்று உறுதியாக கூறிய அவர், அதற்குள் தமிழில் பேசுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு, வெற்றி உரையை தமிழில்தான் ஆற்றுவேன் என்றும் உறுதி அளித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

