மேலும் அறிய

கோவை : எடப்பாடி பழனிசாமியை கண்டித்து ஒட்டப்பட்ட போஸ்டர்கள்; தொடரும் அதிமுக போஸ்டர் யுத்தம்..!

உள்ளாட்சி இடைத் தேர்தலில் கட்சி சின்னத்தை பெற ஓபிஎஸ் கையெழுத்து போட தயார் என அழைத்தும், கையெழுத்து போட மறுத்து இரட்டை இலை சின்னத்தை முடக்கிய எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் பூதாகார பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. ஒற்றைத்தலைமை என்ற கோரிக்கையை அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் சுவர் விளம்பரங்கள், கட்சி அலுவலகங்களில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் பெயரோ, புகைப்படமோ இருக்கக்கூடாது என, அ.தி.மு.க. நிர்வாகிகள் அதனை அழித்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதேபோல எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக ஒரு தரப்பினரும், ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக மற்றொரு தரப்பினரும் பல்வேறு மாவட்டங்களில் அதிமுகவினர் போஸ்டர்கள் ஓட்டி வருகின்றனர்.

கோவை : எடப்பாடி பழனிசாமியை கண்டித்து ஒட்டப்பட்ட போஸ்டர்கள்; தொடரும் அதிமுக போஸ்டர் யுத்தம்..!

கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை மாநகர பகுதிகளில் பல்வேறு பகுதிகளில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. கோவை ரயில் நிலையம்,உக்கடம், டவுன் ஹால்,பெரிய கடை வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒட்டியுள்ளனர். அதிமுக கோவை மாநகர மாவட்ட செயலாளரும், கோவை வடக்கு தொகுதி சட்ட மன்ற உறுப்பினருமான அம்மன் அர்ஜுனன் சார்பில், அவரது புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர், அண்ணா ஆகியோரின் புகைப்படங்களும் அதில் இடம் பெற்றுள்ளன. அதேசமயம் ஓ.பன்னீர்செல்வத்தின் புகைப்படம் இடம் பெறவில்லை. இபிஎஸ் என்பதற்கு எவர்கிரீன் பவர்ஃபுல் ஸ்டார் என விளக்கம் அளிக்கும் வகையிலான வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் ’கழகம் காக்க வந்த காவலரே, தலைமை ஏற்க வா’ என்ற வாசகங்களும் இடம்பெற்று இருந்தன.

கோவை : எடப்பாடி பழனிசாமியை கண்டித்து ஒட்டப்பட்ட போஸ்டர்கள்; தொடரும் அதிமுக போஸ்டர் யுத்தம்..!

இந்நிலையில், கோவை மாநகர பகுதிகளில்  எடப்பாடி பழனிசாமியை கண்டித்து, சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி சார்பில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்களில், முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் உள்ளாட்சி இடைத் தேர்தலில் கட்சி சின்னத்தை பெற ஓபிஎஸ் கையெழுத்து போட தயார் என அழைத்தும், கையெழுத்து போட மறுத்து இரட்டை இலை சின்னத்தை முடக்கிய எடப்பாடி பழனிசாமிக்கு கடும் கண்டனம் என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

சசிகலா ஆதரவு போஸ்டர்கள்

கோவை : எடப்பாடி பழனிசாமியை கண்டித்து ஒட்டப்பட்ட போஸ்டர்கள்; தொடரும் அதிமுக போஸ்டர் யுத்தம்..!

கோவையில் எடப்பாடி பழனிசாமி மற்றும்  ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு அதிமுகவினர் தொடர்ந்து மாறி மாறி போஸ்டர்கள் ஒட்டி வரும் நிலையில், சசிகலா ஆதரவாளர்களும் போஸ்டர்கள் ஓட்டியுள்ளன. சசிகலாவிற்கு ஆதரவாக போத்தனூர், சுந்தராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலா உள்ளிட்டோரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் ‘அதிமுக பொதுச்செயலாளர் சின்னம்மா தலைமை ஏற்போம்’ என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நான் சாதிப்பெருமை பேசுபவன் அல்ல; திடீரென மது ஒழிப்பு கூவல் ஏன்? - மாநாட்டில் கர்ஜித்த திருமா!

இஸ்ரேலுக்கு ஆதரவாக வந்த அமெரிக்கா.! ஈரானுக்கு ஆதரவாக வந்த ரஷ்யா: பதற்றத்தில் பிராந்தியம்: அடுத்து என்ன?

Breaking News LIVE OCT 2 :சாதி, மத பெருமை பேசுபவர்கள் அல்ல, புத்தரின் கொள்கையை பேசுபவர்கள்- மாநாட்டில் திருமாவளவன் உரை

”காந்தி மண்டபத்தில் ஆளுநர் கண்களுக்கு மதுபாட்டில் தெரிந்திருக்கிறது ” அமைச்சர் ரகுபதி ரியாக்ட்

ABP Premium

வீடியோ

Pradeep Yadhav IAS : ”தம்பியை பார்த்துக்கோங்க”சீனியர் IAS-ஐ அழைத்த ஸ்டாலின்!யார் இந்த பிரதீப் யாதவ்?Jayam Ravi shifted Mumbai : விடாப்பிடியாக நிற்கும் ஆர்த்தி மும்பைக்கு நகர்ந்த ஜெயம் ரவிப்ளான் என்ன?Siddaramaiah Shoes Video : முதல்வரின் அதிகார திமிர்..காங். மரியாதைக்கு வேட்டு தேசிய கொடிக்கு கலங்கம்ADMK Vs AMMK : ’’யார் பெருசுனு அடிச்சு காட்டு!’’ Jayakumar vs TTV Dhinakaran..வம்பிழுத்த ஆதரவாளர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நான் சாதிப்பெருமை பேசுபவன் அல்ல; திடீரென மது ஒழிப்பு கூவல் ஏன்? - மாநாட்டில் கர்ஜித்த திருமா!
நான் சாதிப்பெருமை பேசுபவன் அல்ல; திடீரென மது ஒழிப்பு கூவல் ஏன்? - மாநாட்டில் கர்ஜித்த திருமா!
இஸ்ரேலுக்கு ஆதரவாக வந்த அமெரிக்கா.! ஈரானுக்கு ஆதரவாக வந்த ரஷ்யா: பதற்றத்தில் பிராந்தியம்: அடுத்து என்ன?
இஸ்ரேலுக்கு ஆதரவாக வந்த அமெரிக்கா.! ஈரானுக்கு ஆதரவாக வந்த ரஷ்யா: பதற்றத்தில் பிராந்தியம்: அடுத்து என்ன?
Breaking News LIVE OCT 2 :சாதி, மத பெருமை பேசுபவர்கள் அல்ல, புத்தரின் கொள்கையை பேசுபவர்கள்- மாநாட்டில் திருமாவளவன் உரை
Breaking News LIVE OCT 2 :சாதி, மத பெருமை பேசுபவர்கள் அல்ல, புத்தரின் கொள்கையை பேசுபவர்கள்- மாநாட்டில் திருமாவளவன் உரை
”காந்தி மண்டபத்தில் ஆளுநர் கண்களுக்கு மதுபாட்டில் தெரிந்திருக்கிறது ” அமைச்சர் ரகுபதி ரியாக்ட்
”காந்தி மண்டபத்தில் ஆளுநர் கண்களுக்கு மதுபாட்டில் தெரிந்திருக்கிறது ” அமைச்சர் ரகுபதி ரியாக்ட்
Vettaiyan Trailer : ஹண்டர் வந்துட்டார்... வெளியானது ரஜினியின் வேட்டையன் பட டிரைலர்

வெள்ள நீரில் தரையிறங்கிய இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்: அதிர்ச்சியை ஏற்படுத்தும் காட்சிகள்.!

GST Collection: செப்டம்பர் மாத ஜி.எஸ்.டி.வரி  ரூ.1.73 லட்சம் கோடி வசூல்!

Thailand Bus Fire: பற்றி எரிந்த பள்ளி பேருந்து..! மழலைகள் உட்பட  23 பேர் உயிரிழப்பு - சரணடைந்த ஓட்டுநர் செய்த தவறு?

Embed widget