திமுக எப்போது ஆட்சிக்கு வந்தாலும் சாராய உயிரிழப்பு ஏற்படுகிறது - பூவை ஜெகன் மூர்த்தி
பழைய ஓய்வூதிய திட்டத்தினை கொண்டு வருவேன் என கூறி வாக்கு வாங்கிய திமுக அரசு ஆட்சி முடியும் வரை அதனை கொண்டு வரமாட்டார்கள் - பூவை ஜெகன் மூர்த்தி
விழுப்புரம்: திராவிட மாடல் ஆட்சியில் சாலையில் படகு சவாரி செய்ய வேண்டிய நிலை தான் ஏற்பட்டுள்ளதாகவும் திமுக எப்போது ஆட்சிக்கு வந்தாலும் சாராய உயிரிழப்பு ஏற்படுவதாகவும் சென்னையில் 4 ஆயிரம் கோடிக்கு மழைநீர் வடிகால் அமைத்தற்கு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென புரட்சி பாரத கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் புதியபேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் புரட்சி பாரதம் கட்சியின் மனிதம் காப்போம் மாநாடு அக்கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் தங்கமணி, வேலுமணி, கே.பி. முனுசாமி, பெஞ்சமின், சின்னைய்யா உள்ளிட்ட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர்.
புரட்சி பாரதம் தலைவர் ஜெகன்மூர்த்தி பேச்சு:-
மாநாட்டில் பேசிய அக்கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி மனிதம் காப்போம் நாட்டிற்கு தேவையான மாநாடு என்றும் தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் மனிதம் மாண்டு விட்டதாகவும் தென் மாவட்டத்தில் சென்னையைவிட நான்கு மடங்கு அதிக மழை நீர் பெய்துள்ளதாகவும் அரசு அதிகாரிகள் சட்டமன்ற உறுப்பினர்கள் மழை தண்ணீரில் வருவதற்கு தயங்குகிறார்கள் என கூறினார். மழை வெள்ளதில் திமுகவிற்கு வேண்டபட்டவர்களுக்கு மட்டுமே உணவு பொருட்கள் வழங்கபட்டதாகவும், திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வினை ஒழித்துவிடுவோம் என்று கூறினார்கள்.
அதனை செய்யாமல், ஒரே கையெழுத்தில் நீட் தேர்வினை ஒழிப்போம் என கூறிவிட்டு ஊர் ஊராக சென்று கையெழுத்து வாங்குவதாக தெரிவித்தார். சேலத்தில் திமுக மாநாடு நடத்துவதற்கு இயற்கையே முட்டுகட்டை போட்டிருப்பதாகவும் சென்னை மாநகரில் 4 ஆயிரம் கோடி செலவில் வடி நீர் வாய்க்கால் அமைத்தார்கள் அதனால் எந்த பயனும் இல்லை தண்ணீர் வெளியேறவில்லை, ஆயிரம் கோடிக்கு வெள்ளை அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் திராவிட மாடல் ஆட்சியில் சாலையில் படகு சவாரி செய்ய வேண்டிய நிலை தான் ஏற்பட்டுள்ளதாகவும் திமுக எப்போது ஆட்சிக்கு வந்தாலும் சாராய உயிரிழப்பு ஏற்படுவதாக குற்றஞ்சாட்டினார்.
திமுக ஆட்சியில் மலம் கலந்த நீர் வினியோகிக்கப்படுகிறது. ஆனால் இதுவரை மலம் கலந்தவர்களை திமுக அரசு கண்டுபிடிக்கவில்லை, குற்றம் செய்தவர்கள் அரசிற்கு தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் மூடி மறைப்பதாகவும் அதிமுக ஆட்சி காலத்தில் சட்ட ஒழுங்கு சரியாக இருந்தது, ஆனால் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளதாக கூறினார். புரட்சி பாரதம் விழுப்புரத்தில் காலடி எடுத்துவைத்த உடனே ஒரு அமைச்சரின் பதவி காலியாக உள்ளதாகவும் 2024 ஆம் ஆண்டு திமுக ஆட்சி கலையப்போகிறது, எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தபோது தமிழ் நாட்டின் வளர்ச்சிக்காக என்ன செய்யலாம் நாளுக்கு நாள் யோசிச்சி பல திட்டங்களை கொண்டு வந்தார்.
மக்களுக்கு தேவையான திட்டங்களை திமுக அரசு முடக்கியுள்ளதாகவும், பழைய ஓய்வூதிய திட்டத்தினை கொண்டு வருவேன் என கூறி வாக்கு வாங்கிய திமுக அரசு ஆட்சி முடியும் வரை அதனை கொண்டு வரமாட்டார்கள் என்றும் விவசாயிகள், நெசவாளர்கள், அரசு ஊழியர்களையும் திமுக அரசு ஏமாற்றி உள்ளதாகவும், திமுககாரர்களே அதிமுக ஆட்சியின் நல்லா இருந்தது ஆனால் திமுக ஆட்சியில் கஷ்டபடுகிறேன் என்று மன வேதனை படுவதாகவும், தேர்தல் எப்பொழு வருமென்று தமிழக மக்கள் காத்துள்ளதாக தெரிவித்தார்.