மேலும் அறிய

Ramadoss: போராட்டத்தை அறிவித்தார் ராமதாஸ்.. வன்னியர்கள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் பரபரப்பு

வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் தமிழ்நாடு இதுவரை பார்த்திராத போராட்டம் நடத்தப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

வன்னியர் சங்கம் நடத்திய சித்திரை முழு நிலவு மாநாடு மாமல்லபுரத்தில் நடந்தது. இந்த மாநாட்டிற்கு தலைமை தாங்கி பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், நாம் 12 ஆண்டுகளுக்கு முன்பு கூடினோம். இப்போது மீண்டும் கூடுகிறோம். குறிஞ்சி மலர் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் என்று சொல்வார்கள். மகாமகம் அப்படி நடக்கும். மாவீரன் குரு இருந்தால் தொடர்ந்து இந்த மாநாட்டை தொடர்ந்த இந்த மாநாட்டை நடத்தியிருப்பார்.

அவர் இல்லை என்ற ஏக்கத்துடன் இந்த மாநாட்டை நடத்திக் கொண்டிருக்கிறோம். முழு ஒத்துழைப்பு கொடுத்த அரசுக்கும், காவல்துறைக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். 10.5 சதவீத இட ஒதுக்கீடு சொல்லிக்கொண்டே இருக்கிறீர்களே தவிர கொடுக்குற மாதிரி இல்லை. அதனால் போராட்டத்தை அறிவியுங்கள் என்று எதிர்பார்த்து வந்துள்ளீர்கள் என்று எனக்கு தெரியும். 

நிச்சயமாக போராட்டத்தை அறிவிப்போம். இதுவரை நடந்திராத போராட்டம் அதுவாகத்தான் இருக்கும். மயிலே மயிலே என்றால் இறகு போடாது. இந்த போராட்டத்திற்காக நாம் எவ்வளவு தியாகத்தையும் செய்வதற்கு தயாராக இருக்கிறோம்.

45 ஆண்டுகாலமாக உங்களுக்காக இந்த மக்களுக்காக எல்லா சமுதாய மக்களுக்காக 324 சமுதாயங்கள் தமிழ்நாட்டில் உள்ளது. அத்தனை சமுதாய மக்களுக்காகவும் தொடர்ந்து உழைத்து வருபவன் ராமதாஸ். இந்தியாவிலே ஜெயபாஸ்கர் எழுதி புஷ்பவனம் குப்புசாமி பாடியிருப்பார். இதுவரை ஒரு மனிதர் கண்டதுண்டா? என்று எழுதியிருப்பார்கள். நானும் இப்போது கேட்கிறேன். 

34 வகையான அமைப்புகள், போராட்டங்கள், இட ஒதுக்கீடு போராட்ங்கள், சமூக நீதி போராட்டங்கள் இந்தியாவில் வேறு யாரும் செய்திருக்கிறார்களா? என்னைப் போல யாரும் இல்லை. ஆனால், நான் இந்த சமுதாயத்தில் பிறந்ததால் வெளிச்சம் போட்டு காட்ட யாரும் இல்லை. என்னைப் போன்று ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கு, இந்திய மக்களுக்கு உழைத்த ஒரு தலைவர் கண்டதுண்டா? என்று புஷ்பவனம் குப்புசாமி பாடினாரே.. இந்தியாவில் யாருமே இல்லை. இதை நான் பெருமையாக சொல்ல தயாராக இருக்கிறேன். 

45, 50 ஆண்டுகள் உங்களுக்காக தொடர்ந்து உழைத்து வருகிறேன். 95 ஆயிரம் கிராமங்கள் தமிழ்நாடு முழுவதும் என் கால் படாத கிராமங்களே இல்லை. ஓடி ஓடி உழைத்தேன். குடும்பத்தை மறைத்தேன். 5 நாள் சம்பாதித்து 3 ரூபாய்க்கு ஊசி போட்டு வீட்டிற்கு கொடுத்துவிட்டு, ஊர் ஊராக சென்று சாப்பாடு இல்லாமல் இரவு பகலாக இந்த மக்களுக்காக பாடுபட்டேன். பாடுபடுகிறேன். ஆனாலும் இந்த மக்கள் நன்றியுள்ள மக்கள். 

நாமும் ஒரு முறை தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்று என் பேச்சை கேளுங்கள். நான் ஆளப்போவதும் இல்லை. எனக்கு அந்த ஆசையும் இல்லை. அந்த ஆசை இருந்திருந்தால் நான் ஆளுநராக இருந்திருப்பேன், இந்தியாவிலே பல முறை அமைச்சராக இருந்திருப்பேன், தமிழ்நாட்டையும் ஆண்டிருப்பேன். அனைத்தையும் செய்திருப்பேன். எனக்கு அந்த ஆசை இல்லை. மக்களுக்காக வாழ்ந்தேன். உங்களுக்காக வாழப்போகிறேன். 

இவ்வாறு அவர் பேசினார்.

 

 

 

 

தலைப்பு செய்திகள்

நடிகர் தனுஷின் திடீர் அரசியல் நகர்வு! பின்னணியில் நடப்பது என்ன? உளவுத்துறைக்கு பறந்த அவசர உத்தரவு!
நடிகர் தனுஷின் திடீர் அரசியல் நகர்வு! பின்னணியில் நடப்பது என்ன? உளவுத்துறைக்கு அவசர உத்தரவு!
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
ஆளுநர் அல்ல... பாஜக ஏஜெண்ட்! - புதுச்சேரி அரசியலில் புயலைக் கிளப்பிய நாராயணசாமியின் வீடியோ!
ஆளுநர் அல்ல... பாஜக ஏஜெண்ட்! - புதுச்சேரி அரசியலில் புயலைக் கிளப்பிய நாராயணசாமியின் வீடியோ!
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Embed widget