மேலும் அறிய

Anbumani Ramadoss: பாமக ஆட்சி செய்ய காலம், நேரம் வந்துவிட்டது..! நீங்கள் எல்லோரும் ஆதரவு தாருங்கள்- அன்புமணி ராமதாஸ்

ஒரு கட்சியை 35 ஆண்டு காலம் வெற்றிகரமாக நடத்துவது சாதாரண செயல் கிடையாது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை : வேளச்சேரி பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் 35 ஆம் ஆண்டு தொடக்க விழா, கொடி ஏற்றும் நிகழ்ச்சிகள் மற்றும்  மாணவ மாணவிகளுக்கு கல்வி நல உதவி வழங்குகின்ற விழா நடைபெற்றது. இந்த விழாவில் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு கொடி ஏற்றி வைத்து, நல உதவிகளை வழங்கி பேசியதாவது:

இன்று எங்களுக்கு பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் எல்லாம் ஒன்றாக கலந்த மகிழ்ச்சியான நாள். காரணம் இன்று பாட்டாளி மக்கள் கட்சி துவங்கிய நாள். தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே முக்கியமான ஒரு நாள். ஜூலை 16ஆம் தேதி 1989 ஆம் ஆண்டு மெரினா கடற்கரையில் ஸ்ரீரணி அரங்கத்தில், 10 லட்சம் பேர் மத்தியில் பெருமைமிக்க பாட்டாளி மக்கள் கட்சி துவங்கிய நாள். 

Anbumani Ramadoss: பாமக ஆட்சி செய்ய காலம், நேரம் வந்துவிட்டது..!  நீங்கள் எல்லோரும் ஆதரவு தாருங்கள்- அன்புமணி ராமதாஸ்

சாதாரண செயல் கிடையாது

35 ஆண்டு காலம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிற்கே பல நன்மைகள் சாதனைகள் செய்து வருகிறது பாட்டாளி மக்கள் கட்சி. ஒரு கட்சியை 35 ஆண்டு காலம் வெற்றிகரமாக நடத்துவது சாதாரண செயல் கிடையாது.  எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தமிழக மக்கள் முன்னேற வேண்டும், தமிழகம் முன்னேற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் பாட்டாளி மக்கள் கட்சியை நடத்தி வருகிறார் மருத்துவர் ராமதாஸ். 

உண்மையான சாதனை

ஆட்சி அதிகாரம் வருவதற்கு முன்பாகவே தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே எத்தனையோ சாதனைகளை நாங்கள் செய்திருக்கிறோம். நீங்கள் பாட்டாளி மக்கள் கட்சியின் சாதனைகளை தெரிந்து கொள்ள வேண்டும். ஆட்சியில் இருந்து சாதனை செய்வது பெரிய காரியம் அல்ல, ஆட்சி வருவதற்கு முன்பே எதிர்க்கட்சியாக இருந்து சாதனை செய்வது தான் உண்மையான சாதனை. அதனை தான் நாங்கள் செய்து கொண்டு இருக்கிறோம். முதலமைச்சர் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு கையெழுத்து போட்டால் அது பெரிய சாதனையாக நான் பார்க்கவில்லை. அதே முதலமைச்சரை கையெழுத்து போட வைப்பது தான் பாட்டாளி மக்கள் கட்சி சாதனை. சமூக நீதிக்காக தொடங்கப்பட்ட கட்சி, சமத்துவத்திற்காக தொடங்கப்பட்ட கட்சி பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ்நாட்டில் எங்கே கேட்டாலும் யாரை கேட்டாலும் மதுவிலக்கா, மக்கள் மனதில் வருவது பாட்டாளி மக்கள் கட்சி. , நீர் மேலாண்மையா மக்கள் மனதில் வருவது பாட்டாளி மக்கள் கட்சி. புகையிலை எதிர்ப்பா மக்கள் மனதில் வருவது பாட்டாளி மக்கள் கட்சி. சமச்சீர் கல்வியா மக்கள் மனதில் வருவது பாட்டாளி மக்கள் கட்சி, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்தின் விழிப்புணர்வா, மக்கள் மனதில் வருவது பாட்டாளி மக்கள் கட்சி.

108 ஆம்புலன்ஸ்

என்.எல்.சி போராட்டமா மக்கள் மனதில் வருவது பாட்டாளி மக்கள் கட்சி, சேலம் ரயில்வே கோட்டமா மக்கள் மனதில் வருவது பாட்டாளி மக்கள் கட்சி. தமிழ்நாட்டு அனைத்து ரயில் பாதைகளையும் பிராட் கேஜ் பாதையாக மாற்ற வைத்தது பாட்டாளி மக்கள் கட்சி, காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க செய்தது பாட்டாளி மக்கள் கட்சி. இந்தியாவின் சாதனை 108 ஆம்புலன்ஸ் என்று சொன்னால் மக்கள் மனதில் வருவது பாட்டாளி மக்கள் கட்சி, தேசிய கிராமப்புற சுகாதார திட்டம், உலக அளவில் மிகப்பெரிய பொது சுகாதாரத் திட்டம், ஐநா சபையிடம் பாராட்டு வாங்கிய திட்டம் கொண்டு வந்தது பாட்டாளி மக்கள் கட்சி, இப்படி இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் எத்தனையோ சாதனைகளை பாட்டாளி மக்கள் செய்துள்ளது. 

Anbumani Ramadoss: பாமக ஆட்சி செய்ய காலம், நேரம் வந்துவிட்டது..!  நீங்கள் எல்லோரும் ஆதரவு தாருங்கள்- அன்புமணி ராமதாஸ்

அடுக்கடுக்காக நாம் சொல்லிக் கொண்டிருக்கலாம், எத்தனையோ சாதனைகளை பாட்டாளி மக்கள் கட்சி செய்திருக்கிறது, செய்து கொண்டிருக்கிறது, இனியும் செய்யும். தமிழக மக்களே புரிந்து கொள்ளுங்கள், எங்களுக்கு அங்கீகாரம் கொடுங்கள், எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள், நாங்களும் பலமுறை கேட்டுக் கொண்டிருக்கிறோம், ஒரே ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள். ஐந்து ஆண்டு காலம் எங்களை ஆட்சியில் அமர வையுங்கள், உங்களுடைய ஒவ்வொருவரின் தலையெழுத்தையும் நாங்கள் மாற்றிக் காட்டுவோம். எங்களால் மாற்ற முடியும். 

50 ஆண்டுகாலம் ஆட்சி 

இன்று அவதிப்பட்டு கொண்டிருக்கிறீர்கள், அல்லல்பட்டு கொண்டிருக்கிறீர்கள், ஒரு பக்கம் விவசாயிகள் அவதிப்பட்டு கொண்டிருக்கிறார்கள். 50 ஆண்டுகாலம் ஆட்சி செய்த இந்த இரு கட்சிகளும் நீர் மேலாண்மைக்கு என்ன செய்தார்கள்? நீர் பாசன திட்டத்திற்கு என்ன செய்தார்கள்? தெலுங்கானாவில் ஒன்றரை லட்சம் கோடி நீர் மேலாண்மைக்கு ஒதுக்கீடு செய்துள்ளார்கள். ஆந்திராவில் 56 ஆயிரம் கோடி ரூபாய் நீர் மேலாண்மைக்கு ஒதுக்கீடு செய்து உள்ளார்கள். கர்நாடகாவில் சொல்லத் தேவையில்லை, மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் லட்சக்கணக்கான கோடி ரூபாய்களை நீர் மேலாண்மைக்கும் நீர் பாசன திட்டத்திற்கும் ஒதுக்கீடு செய்து வருகிறார்கள். இதனால் தான் அங்கே விவசாயிகள் மகிழ்ச்சியாக உள்ளார்கள். 

Anbumani Ramadoss: பாமக ஆட்சி செய்ய காலம், நேரம் வந்துவிட்டது..!  நீங்கள் எல்லோரும் ஆதரவு தாருங்கள்- அன்புமணி ராமதாஸ்

துடித்துக் கொண்டிருக்கிறோம்

தமிழக மக்களுக்காகவும் தமிழ்நாட்டுக்காகவும் செய்வதற்காக துடித்துக் கொண்டிருக்கிறோம். எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள், 35 ஆண்டுகாலமாக உங்களுக்காக நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். உங்களுக்கு நல்லது செய்ய வாய்ப்பு கொடுங்கள், எத்தனையோ பேருக்கு வாய்ப்பு கொடுத்து விட்டீர்கள், இப்போது எங்களுக்கு கொடுக்கின்ற அந்த நேரம் வந்திருக்கிறது. அந்த காலம் வந்திருக்கிறது. அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எங்களால் மட்டும் தான் தமிழ்நாட்டிற்கு உண்மையான முன்னேற்றத்தை தர முடியும்.  இவர்கள் கொண்டு வருகின்ற திட்டங்கள் எல்லாம் மேலோட்டமாக இருக்கின்ற திட்டங்கள், இவர்களிடம் ஆழமான திட்டங்கள் இல்லை. நீண்ட காலத் திட்டங்கள் இல்லை. அடுத்த தேர்தலுக்கு இந்த திராவிட கட்சிகள் திட்டங்களை உங்களுக்கு கொடுப்பார்கள். ஆனால் பாட்டாளி மக்கள் கட்சி அடுத்த தலைமுறைக்காக திட்டங்களை உங்களுக்கு கொடுப்போம்.

நெற்றியில் வேர்வை வருபவர்கள் அனைவரும் பாட்டாளிகள்

உங்களுக்காக, பாட்டாளிகளுக்காக தொடங்கப்பட்ட இயக்கம் பாட்டாளி மக்கள் கட்சி. மற்ற கட்சிகளின் பெயரை பாருங்கள் திமுக, அண்ணா திமுக, தேமுதிக, மதிமுக, காங்கிரஸ் அதெல்லாம் என்ன பெயர்?. எதற்கு இந்த பெயர், தவறாக நான் சொல்லவில்லை. பாட்டாளி என்றால் யார்? நெற்றியில் வியர்வை வருகின்றவர்கள் எல்லாம் பாட்டாளிகள். விவசாயிகள் முதல் இங்கு உள்ள அனைவருமே பாட்டாளிகள்.

நேரம் வந்துவிட்டது

பாட்டாளி மக்கள் கட்சி நிச்சயமாக தமிழகத்தை ஆட்சி செய்யும். செய்கின்ற காலம், நேரம் வந்துவிட்டது. அதற்கு நீங்கள் எல்லோரும் ஆதரவு அளிக்க வேண்டும் என உங்களை அன்போடு, பாசத்தோடு கேட்டுக்கொள்கிறேன். நன்றியோடு விடைபெறுகிறேன்" என அன்புமணி பேசினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget