(Source: ECI/ABP News/ABP Majha)
OPS Speech: அதிமுக சட்ட விதிகளை காலில் போட்டு மிதிக்கின்ற செயலை செய்தவர் இபிஎஸ் - ஓபிஎஸ் காட்டம்
மீண்டும் பொதுக்குழுவை கூட்டி மீண்டும் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான் என்ற தீர்மானத்தை நிறைவேற்றுவோம்.
சேலத்தில் ஓபிஎஸ் தரப்பில் தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. பின்னர் கூட்டத்தில் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இந்தக் கூட்டத்தின் மூலம் சேலம் எடப்பாடி பழனிசாமி இல்லை. திராவிடத்தின் பரிமாண வளர்ச்சி தான் தந்தை பெரியார், அண்ணா, புரட்சித் தலைவர் எம்ஜிஆர், ஜெயலலிதா. தொண்டர்களின் உரிமையை எந்த காலத்தில் நம்ம யாராலும் பறிக்கக்கூடாது என்பதற்காக தான் அதிமுக இயக்கத்தை உருவாக்கி அதற்காக சட்ட விதியை உருவாக்கினார். அதிமுகவின் உச்சபட்ச பதவி பொதுச்செயலாளரை தீர்மானிக்க இந்த பொறுப்பு அதிமுகவின் தொண்டர்கள் தான் என்றார்.
தொண்டர்களின் வாக்களிக்கும் மூலமாக பதவியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று எம்ஜிஆர் பல்வேறு சட்ட விதிகளை உருவாக்கினார். ஆனால் தொண்டர்கள் தான் அதிமுகவின் பொது செயலாளர் பொறுப்பை தேர்வு செய்ய வேண்டும் என்பது எம்ஜிஆர் எண்ணமாகவும், ஜீவானந்தான உரிமையாக இருந்தது அந்த உரிமையை மாற்றியுள்ளனர். யாராலும் அழிக்க முடியாது இயக்கமாக ஜெயலலிதா உருவாக்கிக் காட்டினார். அதிமுகவை மாபெரும் இயக்கமாக தொண்டர்களைக் கொண்ட இயக்கமாக உருவாக்கிய பெருமை ஜெயலலிதாவே சேரும். அதிமுக தாய் பாசத்துடன் சகோதரப் பார்க்கப்பட்டிருந்த இயக்கம். தற்போது நம்பிக்கை துரோகத்தால் கவலையிட செய்துள்ளது. அதிமுக சட்ட விதிகளை காலில் போட்டு மிதிக்கின்ற செயலை எடப்பாடி பழனிசாமி செய்துள்ளார். தான் கழகத்தின் பொதுச்செயலாளராக பதவி சூட்ட வேண்டும் என்ற நற்பாசியால் தான் சட்ட விதிகளை மாற்றியுள்ளார். பொதுச்செயலாளராக ஜெயலலிதா என்ற நிலையில் மீண்டும் நாம் உருவாக்குவோம் என்று கூறினார்.
தொண்டர்களிடமிருந்து பறித்த உரிமையை மீண்டும் அவர்களிடமே கொண்டு சேர்ப்போம், மீண்டும் பொதுக்குழுவை கூட்டி மீண்டும் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான் என்ற தீர்மானத்தை நிறைவேற்றுவோம். அதிமுகவில் மட்டும்தான் தொண்டர் முதலமைச்சராக முடியும் ஆனால் மற்ற கட்சிகளில் வழி வழியாக இருப்பவர்கள் தான் பதவிக்கு வருவார்கள். தாயுள்ளத்துடன் இருந்த கட்சியை சின்னாபனமாக ஆக்கி அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆக சாதாரண தொண்டர் ஆக்கி இருக்கலாம், இன்றைக்கு நிலைமை என்ன 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழியவும், பத்து மாவட்ட செயலாளர்கள் வழிமொழிய வேண்டும் என்று சட்ட திட்டங்களை மாற்றி உள்ளார்கள். இதற்கு தங்கமணி வேலுமணி பணத்தை குவித்து வைத்துள்ளார்கள் அவர்கள் மட்டும்தான் செய்ய முடியும். இதனை மீட்பதற்காக தான் மக்களை தொண்டர்களை தேடி வந்துள்ளேன். நிரந்தர ஜெயலலிதா பொதுச் செயலாளர் நிலை நிறுத்த வேண்டும் என்பதுதான் நம்முடைய இலக்காக இருக்க வேண்டும். நான் மோசடி செய்து நீங்கள் நிரூபித்தால் நான் அரசியலை கேட்டு விலகி விடுகிறேன் சவால். ஒரு சதவீத மக்கள் கூடஎடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு இல்லை என்ற நிலையை எடுத்துள்ளார்கள். அதற்கு ஒரு உதாரணம் தான் சேலம். அண்ணாமலை தொலைபேசியை தொடர்பு கொண்டு ஈரோடு கிழக்கு தொகுதியில் இருந்து வேட்பாளரை வாபஸ் பெற செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். உடனே வாபஸ் பெற்றேன் ஆனால் ஈரோடு கிழக்கு தொகுதி படும் தோல்வியடைந்தது. ஈரோடு கிழக்கு தொகுதியில் இரட்டை இலை தோற்கடிக்கப்பட்டது என்றால் அது எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் கொடுத்த தோல்வி. தமிழகத்தின் பாஜகவின் ஆதரவுடன் தான் அதிமுக நான்கரை ஆண்டுகாலம் ஆட்சியை நடத்தியது. எனக்கு பின்னாலும் நூறு ஆண்டு காலம் அதிமுக கழகம் வாழும் என்று ஜெயலலிதா உருவாக்கியதை எடப்பாடி பழனிசாமி முடித்துவிட்டார். எடப்பாடி பழனிசாமி தலைமையை விரும்பாத தொண்டர்கள், மக்களால் தான் தொடர்ந்து தோல்வி கொடுத்து கொண்டு இருக்கின்றனர் என்பதுதான் தற்போதைய நிலை. எத்தனை முறை நீதிமன்ற தீர்ப்புகள் அவர்களுக்கு சாதகமாக வந்தாலும் அதை விமர்சிப்பதில்லை நீதிமன்றத்தை மதிப்பவன் தான் ஒரு நாள் நீதி வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.