மேலும் அறிய

Free Model Bicycles : மாணவர்களுக்கு இலவசமாக மாடல் சைக்கிள்.! ரீல்ஸ் போட்டு கதைவிட்ட தவெகவினர்- உண்மையை போட்டுடைத்த நெட்டிசன்கள்

Free Model Bicycles : அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பாக விலை உயர்ந்த ரக New 26T (Mountain Bicycles) வகை சைக்கிள்கள் வழங்கப்படுவதாக  சமூக வலைதளங்களில் தவெகவினர் வீடியோ பரப்பி வரும் நிலையில், இதன் உண்மை நிலை என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.

தமிழக அரசின் கல்வி திட்டங்கள்

தமிழக அரசு கல்விக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மாணவர்களின் கல்வி தடைப்படக்கூடாது என்ற வகையில் தமிழக அரசு பள்ளிகளில் இலவச கல்வி, காலை மற்றும் உணவு திட்டம், இலவச பேருந்து பயணம், இலவச புத்தகம், புத்தகப்பை, கல்வி உதவித்தொகை என பல திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. அதிலும் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பில் இட ஒதுக்கீடு என பல சலுகைகள் வழங்கி வருகிறது. மேலும் தமிழ் புதல்வன், புதுமைப்பெண் என்ற திட்டத்தின் கீழ் மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. 

 தமிழக அரசின் இலவச மிதிவண்டி

அந்த வகையில் நீண்ட தூரம் பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு உதவிடும் வகையில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் இலவச மிதிவண்டி வழங்கப்பட்டு வருகிறது. 2001-02ஆம் ஆண்டில்  ஜெ. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது ஆதி திராவிட மாணவிகளுக்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் 2005-06 ஆம் ஆண்டில் அனைத்து மாணவர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது. கடந்த 2025-26 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 5.34 லட்சம் மாணவ, மாணவியருக்கு ரூ.241 கோடி செலவில் இலவச சைக்கிள் வழங்கப்பட்டது. இந்த திட்டம் தமிழ்நாட்டில் பல லட்சம் மாணவர்களுக்கு பெரும் உதவியாக இருந்து வருகிறது.

அரசு மாணவர்களுக்கு மாடல் சைக்கிள்

அந்த வகையில் தமிழக பள்ளி மாணவர்களுக்கு எப்போதும் Hero, Atlas, Avon, Hercules போன்ற பிரபல பிராண்டுகளின் மாடல்கள் tender அடிப்படையில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் புதிதாக பதவியேற்றுள்ள தவெக அரசு அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்த கல்வியாண்டு முதல்  வழக்கமாக வழங்கப்படும் சாதாரண சைக்கிள்களுக்கு பதிலாக விலை உயர்ந்த ரக New 26T (Mountain Bicycles) வகை சைக்கிள்கள் வழங்கப்படுவதாக  சமூக வலைதளங்களில் வீடியோ பரவியது. இதனை தவெக ஆதரவாளர்கள் தங்களது பக்கங்களில் வெளியிட்டு கொண்டாடி வந்தனர். மாணவர்களின் கல்விக்காக தவெக அரசு புதிய மாடல் சைக்கிளை வழங்கி அசத்தி வருவதாகவும் கூறியிருந்தனர்.

கதை விட்ட தவெகவினர்- போட்டுடைத்த நெட்டிசன்கள்

இந்த நிலையில் தான் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது அரசு சார்பாக வழங்கப்பட்ட சைக்கிள் இல்லையெனவும், தனியார் அமைப்பு மாணவர்களுக்கு இலவசமாக வழங்கிய சைக்கிள் என தெரியவந்துள்ளது. அந்த வகையில், இந்த வீடியோவானது கெங்கபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீபரமேஸ்வர் நினைவு உயர்நிலைப்பள்ளி மாணவர்களின் வீடியோ என கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த பள்ளியின் தாளாளர் கூறுகையில்,

பள்ளி மாணவர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளாக இலவசமாக தனியார் அமைப்புகளின் உதவியோடு மிதி வண்டி இலவசமாக வழங்கி வருவதாகவும், இந்த சைக்கிள் அரசு சார்பாக வழங்கப்பட்டதில்லையெனவும் விளக்கம் அளித்துள்ளார். தனியார் பள்ளியில் தனியார் நிறுவனம் சார்பாக வழங்கப்பட்டஉயர்ந்த ரக New 26T (Mountain Bicycles) வகை சைக்கிள்களை அரசு சார்பாக வழங்கப்பட்டதாக தவெகவினர் பரப்பி வருவதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.  

Advertisement

தலைப்பு செய்திகள்

கல்வி, சமூகநீதிப் போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதைத் தடுக்கக்கூடாது: பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ்
கல்வி, சமூகநீதிப் போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதைத் தடுக்கக்கூடாது: பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ்
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Job Fair Chennai : ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
Kanyakumari District Holiday : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
Embed widget