மேலும் அறிய

கட்சி தலைமை வாய்ப்பு தந்தால் நெல்லை எம்பி தொகுதியில் போட்டியிடுவேன் - நயினார் நாகேந்திரன்

'கூட்டணி என்பது தேர்தல் அளவிற்கு மட்டுமே. கொள்கை அளவில் யாரும் யாருடனும் கூட்டணி கிடையாது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுகள் உள்ளது சூழல் எப்படி வேண்டுமானாலும் மாறலாம்' - நயினார் நாகேந்திரன்

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 86ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நெல்லை சந்திப்பு பகுதியில் அமைந்துள்ள வ உ சிதம்பரனாரின் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருஉருவச் சிலைக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் தயாசங்கர் மற்றும் பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார்நாகேந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன் கூறும் பொழுது, “நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுகள் இருக்கிறது. இருப்பினும் அடிப்படை அமைப்பு ரீதியான பணிகளை பாரதிய ஜனதா கட்சி செய்து வருகிறது. அதிமுக - பாஜக கூட்டணி என்பதில் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை.

பாஜகவினருக்கும், பொதுமக்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என பாரத பிரதமர் உத்தரவிட்டதன்படி தமிழகம் முழுவதும் 60க்கும் மேற்பட்ட மத்திய அமைச்சர்கள் வந்து பார்த்து சென்று கொண்டிருக்கிறார்கள். மத்திய அமைச்சர்களின் வருகை தமிழகத்தில் இனியும் தொடரும். தொடர்ந்து கட்சி பணிகள் நடைபெற்று வருகிறது.  பத்து சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்ததே மத்திய அரசு தான். அதில் உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என்பது எதிலும் இல்லை. இதில் 69 வகையான இனங்கள் உள்ளது. அதில் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என பல தரப்பினரும் உள்ளனர். பத்து சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் திமுக எதிராக முடிவு எடுத்துள்ளது. நீதிமன்றத்தையும் அவர்கள் நாடி உள்ளனர். தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. மத்திய அரசு கொண்டுவந்துள்ள 10% இட ஒதுக்கீட்டை தமிழக அரசாங்கம் உடனடியாக அமலுக்கு கொண்டு வர வேண்டும்.

கட்சி தலைமை வாய்ப்பு தந்தால் நெல்லை எம்பி தொகுதியில் போட்டியிடுவேன் - நயினார் நாகேந்திரன்

இரண்டு கை தட்டினால் தான் ஓசை வரும். அதிமுகவில் பிரிந்து உள்ளவர்கள் ஒன்றாக சேர்ந்தால் தான் அது பலம். அதிமுகவின் அனைத்து தரப்பும் ஒன்றாக இருந்து தேர்தலை சந்தித்தால் நன்றாக இருக்கும். தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் கூட்டணிகளை நம்பியே உள்ளது. தனியாக தேர்தலை சந்திப்போம் என எந்த கட்சியும் சொல்ல முடியாது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ஒரு கட்சி ஆரம்பித்தால் கூட்டணியை வைக்க கூடாது என சட்டம் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் கூட்டணியாக இருந்தால் பலமாக இருக்கும்” என தெரிவித்தார்.

மேலும், “கூட்டணி என்பது தேர்தல் அளவிற்கு மட்டுமே. கொள்கை அளவில் யாரும் யாருடனும் கூட்டணி கிடையாது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுகள் உள்ளது சூழல் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளது. நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட கட்சி தலைமை வாய்ப்பு தந்தால் போட்டியிடுவேன். நெல்லை சட்டமன்ற தொகுதியில் செய்த பணிகளை நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து செய்வேன்” என தெரிவித்தார்..

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
Embed widget