மேலும் அறிய
Advertisement
தலையை வெட்ட சொல்றவர் சாமியாரா ? ரவுடி.. கொதித்தெழுந்த சீமான்
திமுக பட்டியலை வெளியிட்ட மாதிரி அதிமுக பட்டியலை வெளியிட்டால் , கூட்டணியை விட்டு விலகி விடுவார்கள் என அண்ணாமலைக்கு பயம்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது: உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி அறிவிப்பது வேடிக்கையானது. ராமர் எந்த கல்லூரியில் படித்தவர் என கலைஞர் கேட்ட போது வட இந்திய சாமியார்கள் பரிசு என அறிவித்தவர்கள். அது போல் இதுவும் ஒரு வேடிக்கை. உதயநிதி சொல்ல கூடிய கருத்தை கருத்தாக தான் ஏற்க வேண்டும். கழுத்தை அறுத்து வா என்பது எப்படிப்பட்ட பேச்சு. தலையை வெட்டி வா என்பவன் ரவுடி, பொறுக்கி. எப்படி சாமியார் ஆக முடியும். சனாதன பற்றி விளக்கி பேச யாராவது இருக்கிறார்கள். மானுட பிறப்பில் உயர் தாழ்வு பார்ப்பது எப்படி தர்மம் ஆகும். எல்லா உயிர்களும் சமம் தான். எந்த நூற்றாண்டில் வாழ்க்கிறார்கள். பயப்படுவது என் பரம்பரைக்கே கிடையாது. அஞ்சுவதும் அடிபணிவதும் எங்கள் இன பரம்பரைக்கு கிடையாது.
அண்ணாமலை சிறைக்கு போய் இருக்கிறாரா ஒரு வழக்கு உண்டா. என் மீது 128 வழக்குகள் உள்ளன. திமுக ஊழல் சொத்து பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை அதிமுகவின் பட்டியலை ஏன் வெளியிட வில்லை. கூட்டணியை விட்டு கழற்றி விடுவார்கள் என அண்ணாமலை பயப்படுகிறார். சேகர்பாபுவிற்கு அண்ணாமலை சவால் விட்ட மாதிரி, பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என நான் சவால் விடுகிறேன். மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட சேகர்பாபுவை தேர்தலில்தான் மக்கள் தான் தோற்கடிக்க வேண்டும்.
சனாதனம் இன்று தோன்றியதா ?
சனாதனம் இன்று தோன்றியதா ஆட்சியில் இருக்கும் போது அதை வேர் அறுக்க என்ன செய்தீர்கள். தேர்தல் வரும் போது சனாதனத்தை பற்றி பேசுவது ஏன்? வீட்டில் சனாதனத்தை ஒழிக்க முடியவில்லையே. சனாதனம் என்பதை பற்றி உதயநிதி விளக்கி பேச வேண்டும். மனித பிறப்பில் ஏற்ற தாழ்வு இருக்கும் என கூறுவதை நாம் மறுக்க வேண்டும். ஜாதி, மதம் என தமிழினத்திற்கு திட்டமிட்டு ஊட்டப்பட்ட ஒன்று. மொழி, இன பற்றை ஊட்டினால் ஜாதி, மதத்தை ஒழிக்க முடியும். பொது தொகுதியில் பழங்குடி இன மக்களை நிற்க வைக்க முடியுமா. ஜெயலலிதா திருச்சியில் தலித் எழில்மலையை நிற்க வைத்தார். துணை முதலமைச்சராக தாழ்த்தப்பட்டவருக்கு தர முடியுமா?. வார்த்தையால் சொல்லாமல் செயலில் காட்ட முடியுமா ? என கேள்வி எழுப்பினார்
நான் தான் மெயின் டீம்.
பா.ஜ.க. பி டீம் என திமுக சொல்லி வந்தது. இப்போ திமுகவின் பி. டீம் என அண்ணாமலை சொல்கிறார். நான் தான் மெயின் டீம். நான் தனித்து தான் போட்டியிடுவேன். காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் காங்கிரசை கூட்டணியில் சேர்க்காதீர்கள். இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்று கர்நாடக முதலமைச்சருக்கு எண்ணம் வரவில்லை. இந்தியாவை தாண்டி மாநில மக்கள் நலன் முக்கியமாக இருக்கும் போது தமிழக முதலமைச்சருக்கும் மாநில மக்கள் நலன் முக்கியமாக இருக்க வேண்டும்.
தாமரையுடன் உதயசூரியன் நேரடியாக போட்டியிட்டால்..
பொது எதிரியாக காங்கிரஸ், பா.ஜ.க. ராமநாதபுரத்தில் மோடி போட்டியிட்டால் அங்கு நாம் தமிழர் சார்பில் இஸ்லாமிய தங்கையை தேர்வு செய்து வைத்து உள்ளேன். தாமரையுடன் உதயசூரியன் நேரடியாக போட்டியிட்டால் நான் ஆதரிக்கிறேன். திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு ஒட்டு போட சொல்லுங்கள். அதிமுக- பா.ஜ.க. கூட்டணிக்கு போடாதீர்கள் என சொல்லுங்கள். சீமானுக்கு ஒட்டு போடாதே என சொல்லாதீர்கள். திமுக பாவியாக இருந்தாலும் காவியை எதிர்க்க வேண்டும். இந்த தூய ஆவியை வைத்து எதிருங்கள். என்னை வளர விட்டால் 2 பேருக்கும் ஆபத்து என்பதால் எதிர்க்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion