மேலும் அறிய
Advertisement
அ.தி.மு.க., வேட்பாளர்கள் புடைசூழ மோடி பிரசார கூட்ட முகூர்த்தகால் விழா
அ.தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்கள் புடைசூழ பிரதமர் மோடி பங்கேற்கும் பிரம்மாண்ட பிரசார பொதுக்கூட்டத்திற்கான முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான இறுதி பிரசாரம் தேதி நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய பிரதமர் மோடி ஏப்ரல் 2ம் தேதி மதுரை வருகை தர உள்ளார். ரிங் ரோடு அம்மா திடலில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் கூட்டணி கட்சியின் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.
அந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்கான முகூர்த்தக்கால் நடும் விழா அம்மா திடலில் இன்று காலை நடைபெற்றது. மதுரை மாவட்டத்தின் அதிமுக வேட்பாளர்களான அமைச்சர் செல்லூர் ராஜூ, அமைச்சர் உதயக்குமார் உள்ளிட்ட அனைத்து அதிமுக வேட்பாளர்களும், மதுரை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் டாக்டர் சரவணன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர். அனைவரும் ஒன்றிணைந்து பந்தல்காலை நட்டு வழிபாடு நடத்தினர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion