மேலும் அறிய

Minister Jagadeeswari : என் பேரு கீழே இருக்கு..? கீர்த்தனா பேரு எப்படி மேலே வந்தது? - கலெக்டரை மேடையிலேயே வறுத்தெடுத்த தவெக அமைச்சர்

அரசு விழாவில் அமைச்சர் கீர்த்தனாவின் பெயருக்கு பின்னால் தனது பெயர் இடம்பெற்றதற்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மாவட்ட ஆட்சியரிடம் பொறுப்பு அமைச்சருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தமிழகத்தில் தவெக ஆட்சி

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் பல திருப்பங்களை ஏற்படுத்தியது. அந்த வகையில் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக திமுக- அதிமுக என இரு கட்சிகளும் மாறி மாறி ஆட்சி அமைத்து வந்த நிலையில், கடந்த 2024ஆம் ஆண்டு தவெக என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தார். இதனையடுத்து முதலமைச்சர் விஜய் தலைமையில் அமைச்சரவை உருவாக்கப்பட்டது. விஜய் தலைமையில் புதிய அமைச்சரவையில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் ஆகிய கூட்டணி கட்சிகளும் இடம்பிடித்துள்ளது. இதில் அதிமுகவில் இருந்து வந்த செங்கோட்டையனை தவிர மற்ற அனைவரும் அமைச்சரவைக்கு மட்டுமல்ல எம்எல்ஏவிற்கே புதியவர்கள். 

பொறுப்பு அமைச்சர் நியமனம்

இதே போல பல இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கும் அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த வகையில், விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கீர்த்தனா, இதே போல ராஜபாளையம் தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவருமான ஜெகதீஸ்வரிக்கும் அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டது.  இந்த நிலையில் அனைத்து மாவட்டத்திற்கும் சம விதிகம் வழங்கும் வகையில், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். அந்தவகையில் அமைச்சர் ஜெகதீஸ்வரி விருதுநகர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

அமைச்சர் கீர்த்தனா பெயர் மேலே ஏன் போட்டீங்க

இந்த நிலையில் விருதுநகரில் விளையாட்டுத் துறை தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொறுப்பு அமைச்சரான ஜெகதீஸ்வரி பங்கேற்றார். அப்போது மேடைக்கு பின்புறம் வைக்கப்பட்ட பேனரில், முதலீட்டு ஊக்கத் துறை அமைச்சர் கீர்த்தனா பெயர் முதலில் இருந்தது. இதற்கு அடுத்த இடத்தில் பொறுப்பு அமைச்சரான ஜெகதீஸ்வரி பெயர் இடம்பிடித்தது. இதனை பார்த்த அமைச்சர் ஜெகதீஸ்வரி அதிருப்தி அடைந்தார். மேடையில் தனது இருக்கைக்கு அருகில் அமர்ந்திருந்த மாவட்ட ஆட்சியரிடம் தனது எதிர்ப்பை பதிவு செய்தார். அப்போது பொறுப்பு அமைச்சருக்கு தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதனையடுத்து தான் மற்ற அமைச்சர்களின் பெயர் இடம்பெற வேண்டும் என தனது கூறினார். 

ஆட்சியரிடம் அமைச்சர் ஜெகதீஸ்வரி வாக்குவாதம்

உடனே மாவட்ட ஆட்சியர் விழா ஏற்பாடுகளை கவனித்து வந்த அதிகாரியை அழைத்து அமைச்சர் சொல்லும் புகாருக்கு விளக்கம் அளிக்க உத்தரவிட்டார். மேடையிலேயே அனைவர் முன்னிலையிலும் தனது பெயர் மேலே இருக்க வேண்டும் என அமைச்சர் ஜெகதீஸ்வரி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தான் ஆட்சியை பிடித்துள்ளார்கள். அதிலும் தன் பெயர் முன்னாடி வர வேண்டும் என மற்றொரு பெண் அமைச்சர் மீது உள்ள அதிருப்தியில் அமைச்சர் ஜெகதீஸ்வரி அதிகாரிகளிடம் அதிருப்தியை தெரிவித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
வேளாண் பட்ஜெட்: உழவர்களுக்குப் பெரும் ஏமாற்றம் - அன்புமணி கண்டனம்
வேளாண் பட்ஜெட்: உழவர்களுக்குப் பெரும் ஏமாற்றம் - அன்புமணி கண்டனம்
TN Budget: தமிழ்நாட்டிற்கு நடப்பாண்டில் 20 ஆயிரம் கோடி கூடுதல் வருமானம்.. எப்படி தெரியுமா?
TN Budget: தமிழ்நாட்டிற்கு நடப்பாண்டில் 20 ஆயிரம் கோடி கூடுதல் வருமானம்.. எப்படி தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget