'நாய் குரைச்சா என்ன?' - விஜய் விமர்சித்த அமைச்சர் காந்தியின் பரபரப்பு பேச்சு! திமுக அதிரடி!
"விஜய் எதைப்பற்றி பேசினாலும் அதற்கு பதில் பேசக்கூடாது என தலைமை அறிவித்துள்ளது என அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்"

தமிழ்நாட்டின் மண்- மொழி மானம் காக்க கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் அறிவிக்கப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் 68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் 'ஓரணியில் தமிழ்நாடு' இயக்கத்தில் இணைந்துள்ள ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களால் முன்மொழியப்பட்டுள்ள 'தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்' என்ற தீர்மான ஏற்பு கூட்டங்கள் செப்டம்பர் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில், தி.மு.க மாவட்ட வாரியாக நடைபெறும் என தி.மு.க தலைமைக் கழகம் அறிவித்துள்ளது,
காஞ்சிபுரத்தில் திமுக கூட்டம்
இதில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட சங்கர மடம் அருகே ஜி. கே. மண்டபம் பகுதியில் நடைபெற்ற ஓரினியில் தமிழ்நாடு விளக்க பொதுக்கூட்டத்தில் கைத்தறி துறை அமைச்சர் காந்தி மற்றும் திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி இருவரும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
தலைமை உத்தரவு
இந்தநிகழ்ச்சியில் அமைச்சர் காந்தி பேசுகையில், சிலர் புதுசாக வந்தவர்கள் நம்மை விமர்சித்து வருகிறார்கள். எதைப்பற்றி பேசினாலும் அதற்கு பதில் பேசக்கூடாது என தலைமை அறிவித்துள்ளது. நாய் உழைத்தால் என்ன செய்வது, விட்டு விட வேண்டியதுதானே என மறைமுகமாக விஜயை விமர்சித்தார். எம்ஜிஆர் நடிப்பில் மக்களை கவனித்தார், ஆனால் முதல்வர் ஸ்டாலின் திட்டங்கள் மூலம் மக்களை கவர்ந்து எம்ஜிஆரை மிஞ்சிவிட்டார் என அமைச்சர் காந்தி சிறப்புரை ஆற்றினார்.
ஆர்.எஸ் பாரதி
திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி பேசுகையில், எம்ஜிஆர் உடன் செல்லும் போது கூட்டம் எங்கிருந்துதான் வருகிறது என்று தெரியாது அவ்வளவு கூட்டம் வந்தது எம்ஜிஆர் பிறகு பிறகு அதிகமாக வரும் கூட்டம் வருகிறது, என்றால் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு தான் வேறு எந்த தலைவருக்கும் இல்லை என பேசினார்.
எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டு
1978 காலத்தில் எடப்பாடி தன் கூட பொறந்த மூன்று சகோதர்களையே கொலை செய்து விட்டார். அன்றைக்கு அதிமுக ஆட்சியில் எம்.எல்.ஏவான செங்கோட்டையனை வைத்து எல்லா சாட்சிகளையும் மாற்றியவர் எடப்பாடி,அதனால் அவர் தப்பினார். அவ்வழக்கிலே எடப்பாடி தண்டனை பெற்று இருந்தால் இன்றைக்கு அவர் காலம் முழுவதும் சிறையில் தான் இருந்து இருப்பார் என பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார்.
அந்த செங்கோட்டையனை நீக்கி இருக்கிறார் எடப்பாடி , அவரை நம்பியா நீங்கள் செல்லுகிறீர்கள் அதிமுககாரர்களுக்கு ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பினார். கொலை வழக்கிற்கு இன்றைக்கு கூட மேல் முறையீடு போகலாம். என்னிடம் ஜாக்கிரதையாக இருங்க எடப்பாடி என தெரிவித்தார்.
டெல்லியில் கட்சி அடகு வைத்து விட்டார்
டெல்லிக்கு சென்று கட்சியை அடகு வைத்து விட்டார் எடப்பாடி, அதிமுக வேட்பாளர்களின் பட்டியலை கூட அமித்ஷாவிடம் காண்பித்து அவர் தான் யார் யார் வேட்பாளர்கள் என முடிவு செய்வர். அப்படிப்பட்ட நிலைமையை அதிமுகவிற்கு ஏற்படுத்தியுள்ளார் எடப்பாடி என குற்றச்சாட்டை முன் வைத்தார்.
டெல்லி சென்ற எடப்பாடி அமித்ஷா வெளியே வரும்போது முகத்தை மூடிவிட்டு வந்தார், இதை பார்க்கும் போது அண்ணா பல்கலைக்கழகத்தில் பெண் விவகாரத்தில் குற்றவாளி கைது செய்தபோது சென்றது போல் இருந்தது, இப்போது நான் கேட்கிறேன் யார் அந்த சார்? இன்று விஜய் பேசுவதை போல் அன்று எம்ஜிஆர் எவ்வளவோ குற்றச்சாட்டு வைத்தார், எம்ஜிஆர் பத்தாண்டு ஆட்சியில் கூட ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லாமல் கலைஞர் மீது ஒரு வழக்கு கூட போட முடியவில்லை என ஆர். எஸ். பாரதி காஞ்சிபுரம் கூட்டத்தில் பேசினார்.





















