மேலும் அறிய

"அரசியலுக்கு வந்தால் நிதானம் தேவை!" - நடிகர் ராகவா லாரன்ஸிற்கு சி.பி.ஐ மாநில செயலாளர் கொடுத்த அட்வைஸ்!

தமிழகத்தில் கூட்டுறவு பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி ஜூன் 29 அன்று மாநில தழுவிய போராட்டம் நடைபெறும் என சிபிஎம் கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் மயிலாடுதுறையில் அறிவித்துள்ளார்.

மயிலாடுதுறை: தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் கூட்டுறவு பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ.) சார்பில் வரும் ஜூன் 29-ஆம் தேதி தமிழகம் முழுவதும் பிரம்மாண்ட மாநில அளவிலான ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் அறிவித்துள்ளார். மேலும், சபாநாயகர் என்பவர் ஒரு கட்சியின் பிரதிநிதி அல்ல என்றும், அவர் சட்டமன்ற விதிகளை எக்காரணம் கொண்டும் வழுவக்கூடாது என அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு முன்னாள் உறுப்பினர் இடும்பையன் மறைவையொட்டி, அவரது படத்திறப்பு விழா நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் கலந்துகொண்டு, இடும்பையனின் திருவுருவப்படத்தை திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மு.வீரபாண்டியன், தமிழகத்தின் தற்போதைய அரசியல், சமூக மற்றும் விவசாயப் பிரச்சனைகள் குறித்து விரிவாகப் பேசினார்.

விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய கோரிக்கை

செய்தியாளர்கள் சந்திப்பில் விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சனைகள் குறித்துப் பேசிய மு.வீரபாண்டியன்; "தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளின் கூட்டுறவு மற்றும் பயிர் கடன்கள் அனைத்தையும் அரசு நிபந்தனையின்றி முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுவில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. விவசாயிகளின் இந்த நியாயமான கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு தமிழக அரசு கடுமையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்குத் தேவையான நிதி உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் மத்திய அரசும் தாராளமாக வழங்க வேண்டும்.

இக்கோரிக்கையை வலியுறுத்தியும், தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வரும் ஜூன் 29-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தொடர் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்கள் நடத்தப்பட உள்ளன" என்றார்.

சபாநாயகர் ஒரு கட்சியின் பிரதிநிதி அல்ல!

அதிமுகவில் இருந்து விலகிய நான்கு சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகும், தற்போது அவர்களுக்கு விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ள நடவடிக்கை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர்; "சபாநாயகர் பதவி என்பது நடுநிலையானது. அவர் ஒரு குறிப்பிட்ட கட்சியின் பிரதிநிதியாகச் செயல்படக் கூடாது. சட்டமன்ற விதிகளையும், அதன் மரபு சார்ந்த நடைமுறைகளையும் சபாநாயகர் எக்காரணம் கொண்டும் வழுவக்கூடாது. சட்ட கோட்பாடுகளுக்கு உட்பட்டே நடவடிக்கைகள் அமைய வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு: சமரசம் கூடாது!

சமீபகாலமாக அதிகரித்து வரும் வன்கொடுமைகள் குறித்துப் பேசிய அவர், பெண்கள் மற்றும் சிறு குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க அரசு மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், இதில் எவ்வித சமரசமும் செய்துகொள்ளக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.

"இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்களை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும். காவல்துறை முழு வீச்சில் முடுக்கிவிடப்பட வேண்டும். 'சிங்கப்பெண்' திட்டத்தில் போலீஸார் பற்றாக்குறை இருப்பதாகத் தெரிந்தால், மாவட்ட நிர்வாகங்கள் உடனடியாக இதுகுறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் காவலர்களை இந்த பிரிவில் நியமிக்க அரசு ஆவண செய்ய வேண்டும்.

தமிழ் சமூகத்தின் அறிவில் சிறந்த மாணவர்களும், இளைஞர்களும் சாதி, மத பேதங்களை கடந்து, பெண்களுக்கு எதிரான அநீதிகளுக்கு எதிராக களமிறங்க வேண்டும். கல்வி நிறுவனங்களும், அரசியல் இயக்கங்களும் இதற்கான உயரிய மனிதநேய விழுமியங்களை இளைய தலைமுறையினரிடம் உருவாக்க வேண்டும்" என்றார்.

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு & மேகதாது அணை விவகாரம்

மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளை விமர்சித்த அவர், "இந்தியாவை கார்ப்பரேட் நிறுவனங்கள் முழுமையாகச் சுற்றி வளைத்துவிட்டன. தமிழ்நாட்டில் மீண்டும் ஹைட்ரோகார்பன் எடுக்கும் முயற்சிகள் நடந்தால், அதற்கு தமிழக அரசு எந்தச் சூழ்நிலையிலும் அனுமதி அளிக்கக் கூடாது" என எச்சரித்தார்.

மேலும், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் விவகாரத்தில், முந்தைய அரசின் நிலைப்பாடே தொடரும் என தற்போதைய முதல்வர் அறிவித்திருப்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பதாகக் கூறினார்.

"மேகதாது அணை விவகாரத்தில் முதல்வர் தன் நிலையில் உறுதியாக இருக்க வேண்டும். மேகதாது அணை கட்டப்படக் கூடாது. இதனை வெறும் அணை, நீர் என்று மட்டும் சுருக்கிப் பார்க்காமல், இரு மாநிலங்களின் உறவு மற்றும் மக்களின் உயிர் சம்பந்தப்பட்ட பிரதானப் பிரச்சனையாகப் பார்க்க வேண்டும்" என்று மு.வீரபாண்டியன் கேட்டுக்கொண்டார்.

ராகவா லாரன்ஸ் அரசியலுக்கு வருவது குறித்து கருத்து

நடிகர் ராகவா லாரன்ஸ் அரசியலுக்கு வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "ராகவா லாரன்ஸ் ஒரு நல்ல மனிதர், சிறந்த நடிகர். ஆனால், அவர் அரசியலுக்கு வரும்போது மிகுந்த நிதானத்தோடு பேசிப் பழக வேண்டும். அரசியலில் நேர் எதிர் கருத்துக்கள் என்பது மிக இயல்பான ஒன்றுதான். ஒரு கட்சி வெற்றியடைவதும், மற்றொரு கட்சி தோல்வியடைவதும் ஜனநாயகத்தில் சகஜம். கருத்துக்கள் மோதிக் கொள்ளலாம், ஆனால் கண்ணியக் குறைவான கருத்துக்களை பொதுவெளியில் பதியச் செய்யக் கூடாது" என்று அறிவுறுத்தினார். சமீபத்திய ராகவா லாரன்ஸ் பேச்சு சர்ச்சை ஆன நிலையில், மு.வீரபாண்டியன் அட்வான்ஸ் செய்துள்ளார்.

இவ்விழாவில் கட்சியின் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டனர். ஜூன் 29 போராட்டம் குறித்த அறிவிப்பு தற்போதைய அரசியல் மற்றும் விவசாய வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆளுநர் அல்ல... பாஜக ஏஜெண்ட்! - புதுச்சேரி அரசியலில் புயலைக் கிளப்பிய நாராயணசாமியின் வீடியோ!
ஆளுநர் அல்ல... பாஜக ஏஜெண்ட்! - புதுச்சேரி அரசியலில் புயலைக் கிளப்பிய நாராயணசாமியின் வீடியோ!
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Minister Keerthana:
Minister Keerthana: "பல இடங்களில் சிப்காட் பொட்டல்காடாகத்தான் உள்ளது.." திமுக-வை விளாசிய அமைச்சர் கீர்த்தனா
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget