"கயவர்களை ஒழிப்பதே என் முதல் பணி" - ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்.!
அதற்கு காரணமான கயவர்களை அழிப்பதே தனது முதல் பணி என்றும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார் கமல்ஹாசன்
உலக நாயகன் கமல்ஹாசன் கோவை தெற்கு பகுதியில் தனது மனுத்தாக்களை அண்மையில் நிறைவுசெய்தார். அதனை தொடர்ந்து சூறாவளி சுற்றுப்பயணத்தில் தற்போது ஈடுபட்டுள்ளார் கமல்ஹாசன் அவர்கள். திரையுலகில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக தனது நிலையான ஆட்சியை செலுத்திவரும் கமல்ஹாசன் தற்போது தன்னுடைய மக்கள் நீதி மய்யம் கட்சியின் வழியாக தமிழக அரசியலில் களமிறங்கியுள்ளார்.
நேற்று கோவையில் சூறாவளி சூற்றுப்பயணத்தை மேற்கொண்ட திரு. கமல்ஹாசன் "கோவை மக்களின் அன்பில் நான் நெகிழ்கிறேன். இன்று இரவு மாம்பழ நகர் சேலத்தில் மாபெரும் பொதுக்கூட்டத்தில் நான் பேசுகிறேன். மண், மொழி, மக்கள் காக்க ஒன்று கூடுவோம். வென்று காட்டுவோம்" என்று அந்த பயணம் குறித்து தனது ட்விட்டர் பதிவில் கூறினார்.
அதே போல தற்போது அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் கோவையில் போதைப்பொருள் புழக்கம் அதிகமாகி இளைஞர்கள் வாழ்வு சீரழிவதாக குறிப்பிட்டுள்ளார். அதற்கு காரணமான கயவர்களை அழிப்பதே தனது முதல் பணி என்றும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார் கமல்ஹாசன்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தொடர்ச்சியாக பல ஊர்களுக்கு சென்று வாக்குசேகரிப்பில் ஈடுபடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.